தை திருநாளான இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு ராஜ யோகமாம்! முழுபலன்கள் இதோ

Report
407Shares
மேஷம்

மேஷ ராசி நேயர்களே, இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். தைரியம், மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். வேலை, தொழிலில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணைவருடன் நல்லுறவு இருக்கும். நிதி நிலை ஆரோக்கியமாக இருக்கும்.

ரிஷபம்

இன்றைய தினம் உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலையில் தடைகள் ஏற்படும் என்பதால் கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படலாம். துணைவருடன் வாக்குவாதம் வரலாம். பேசுவதற்கு முன்பு யோசித்து செயல்படுங்கள். வீண் செலவு ஏற்படலாம், நிதி விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மிதுனம்

திட்டமிட்டு செயல்பட்டால் உங்கள் இலக்குகளை அடையலாம். உங்கள் இலக்கை அடைய சில சௌகரியங்களை இழக்க நேரிடலாம். வேலைப் பளு அதிகரிக்கும். துணைவருடன் சண்டை வரலாம். எனவே, பொறுமையாக இருப்பது நல்லது. முக்கிய முடிவுகளை இன்றைக்கு எடுக்க வேண்டாம். செலவு அதிகரிக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு மிகவும் அனுகூலமான நாளாக அமையும். புத்துணர்வுடன் இருப்பீர்கள். வேலை, தொழிலில் புத்துணர்வுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்கள் நடைபெறலாம். பணப் புழக்கம் இருக்கும். இன்றைய தினம் மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

சிம்மம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்தும் கூட நன்மைகள் வந்து சேரும். இன்றைக்கு நடக்கும் நிகழ்வுகள் மனதுக்கு கூடுதல் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும். துணைவருடன் சுமூகமான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி நிலை ஆரோக்கியமாக உள்ளது.

கன்னி

ஏற்றம் இறக்கம் மிகுந்த நாளாக இருக்கும். அதனால் ஏற்றம் வரும்போது அதீத மகிழ்ச்சியோ, இறக்கம் வரும்போது வருத்தமோ கொள்ள வேண்டாம். எதையும் எதார்த்தமாக எடுத்துக்கொள்ளுங்கள். கூடுதல் பணி உங்களை வந்து சேரும். உங்கள் மனக் குமுறல், உணர்வுகளைத் துணைவருடன் கொட்ட முயல்வீர்கள். அது வீண் பிரச்னையை உருவாக்கலாம் என்பதால் வனம் தேவை. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.

துலாம்

வீண் கோபம், எரிச்சல் ஏற்படலாம். அதுவே இன்றைய தினத்தின் மகிழ்ச்சியைக் கெடுக்கும் வகையில் அமைந்துவிடும். பணிகளை சிறப்பாக முடித்தாலும் உரிய அங்கீகாரம் இருக்காது. மனதில் குழப்பம் மேலிடும். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். வீண் செலவு அதிகரிக்கும்.

விருச்சிகம்

முன்னேற்றமான நாளாக இன்றைய தினம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியத்தை திறம்பட நடத்தி முடிப்பீர்கள். கூடுதல் பொறுப்புக்கள் உங்களை நாடி வரும். குடும்பத்தில் அனுசரணையான போக்கு நிலவும். துணைவருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவு ஏற்படும்.

தனுசு

சோதனை நிறைந்த நாளாக இன்றைய தினம் இருக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இந்த சோதனைகளிலிருந்து தப்பினால் மகிழ்ச்சியாக இருக்கலாம். எந்த ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தில் கவனத்துடன் பேசுங்கள். நிதி நிலை திருப்திகரமாக இல்லை.

மகரம்

அதிர்ஷ்டம் ஓரளவுக்குத்தான் இன்றைக்குக் கைகொடுக்கும். உங்கள் திறமையைக் கொண்டு இன்றைய நாளை மகிழ்ச்சியானதாக மாற்றுங்கள். உடன் வேலை செய்பவர்களால் பிரச்னைகள் ஏற்படலாம். கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மனம் திறந்து பேசுவதன் மூலம் துணைவருடன் நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இல்லை. வீண் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம்

இன்றைய தினம் சற்று கடினமான நாளாகவே இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பாதுகாப்பின்மையை உணர்வீர்கள். குடும்பத்தில் வாக்குவாதம், சண்டை சச்சரவு ஏற்படலாம். மனக் குழப்பம் அதிகமாக இருக்கும். நிதி நிலை திருப்தியாக இருக்காது. வீண் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கிய முடிவுகளை இன்றைக்கு எடுக்க வேண்டாம்.

மீனம்

உங்களுக்கான சிறந்த நாளாக இன்றைய தினம் இருக்கும். மனம் அமைதி பெறும். முக்கிய முடிவுகளை இன்றைக்கு எடுத்தால் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த பலன்கள் உங்களை வந்து சேரும். குடும்பத்தில் உற்சாகம் நிலவும். துணைவருடன் அன்பும் காதலும் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் உடலும் உள்ளமும் மகிழ்ச்சி, புத்துணர்வால் நிறைந்திருக்கும்.

loading...