குரு சனி கூட்டணியால் தொழிலில் ஏற்பட போகும் திடீர் மாற்றம்! விபரீத ராஜயோகம் யார் யாருக்கு ? திசை திரும்பும் வாழ்க்கை

Report
628Shares

ஒருவரின் லக்னத்திற்கு சூரியன் பத்தாம் வீட்டில் நின்றால் வேந்தனாய் தனவானாய் இருப்பார்.

சந்திரன் நின்றால் புத்திமான், சூரனாய் எடுத்த காரியம் முடிப்பார். செவ்வாய் நின்றால் பூமியை ஆளுவார், சகல காரியசித்தி கிடைக்கும். புதன் நின்றால் சிற்ப வித்தை அறிந்தவர், கலைகள் பல அறிந்தவர், குரு நின்றால் செல்வமுடையவன். ராஜசேவை செய்வார்.

சுக்கிரன் நின்றால் சூரராய் இருப்பார். சனி நின்றால் தனம் தேடுவதில் சமர்த்தன். ராகு நின்றால் நடன சங்கீதங்களில் ஆர்வமுடையவன். கேது நின்றால் உற்சாகமானவர்.

கிரகங்கள் அமர்வினைப் பொருத்து எந்த ராசியினர் என்ன தொழில் தொடங்கலாம் என்று பார்க்கலாம்.

மேஷம்

செவ்வாயை ஆட்சி நாதனாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே. நீங்கள் கல்வி தொடர்புடைய தொழில் தொடங்கலாம். ஆடம்பர பொருட்களை விற்கும் தொழில் நகைக்கடை, ஜவுளிக்கடை தொடங்கலாம். செவ்வாய்கிழமை விரதம் இருந்து முருகனை வணங்கலாம் நன்மைகள் நடக்கும். நிகழப்போகும் குரு பெயர்ச்சி அற்புத பலன்களைத் தரப்போகிறது. தொழில் ஸ்தானத்தில் அமரப்போகும் குரு சனி கூட்டணியால் எந்த தொழில் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம்.

ரிஷபம்

காதல் நாயகன் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே. ஃபேஷன் டிசைனிங் தொழில் தொடங்கி செய்ய ஏற்றது. சனிக்கிழமை விரதம் இருந்து சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இந்த கால கட்டத்தில் கல்வி சார்ந்த தொழில் தொடங்கலாம். இந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டாம். வெற்றி கிடைக்க குரு பெயர்ச்சி வரை பொறுமை காக்கவும்.

மிதுனம்

புத்தி நாயகன் புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே, இந்த கால கட்டத்தில் சுய தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மீடியா சார்ந்த தொழில் தொடங்கலாம். ஆன்லைனில் யுடுயூப் சேனல்கள் ஆரம்பிக்கலாம். புத்தக கடைகள் ஆரம்பிக்கலாம். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்ய நன்மைகள் நடக்கும். குரு பார்வையினால் குடும்பத்தில் குதூகலம் கூடும்.

கடகம்

மனோகாரகன் சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே உங்களுக்கு அதி அற்புதமான காலம் நீங்க என்ன தொழில் தொடங்கினாலும் ஜெயிக்கும். சுய தொழில் தொடங்க நினைப்பவர்கள் பேன்சி ஸ்டோர் வைக்கலாம். ஜவுளி கடை, பியூட்டி பார்லர் ஆரம்பிக்கலாம். திங்கட்கிழமைகளில் விரதமிருந்து சிவபெருமானை வணங்குங்கள். குரு பெயர்ச்சியும் உங்களுக்கு குதூகலம் தரக்கூடியதாகவே இருக்கிறது.

சிம்மம்

தந்தை காரகன் சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே நீங்கள் ரியல் எஸ்டேட் தொழில் தொடங்க நன்மைகள் நடக்கும். சகோதர சகோதரிகளிடன் கூட்டாக இணைந்து தொழில் தொடங்கலாம். ஞாயிறு கிழமைகளில் சூரியனை வணங்கி கோதுமை தானம் செய்யலாம் நல்லது நடக்கும்

கன்னி

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே உங்களின் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். அனுபவம் இருக்கும் தொழில் துறைகளில் முதலீடு செய்து தொழில் தொடங்குவது நல்லது ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்க நன்மைகள் நடக்கும்.

துலாம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே தங்க நகைகள் வாங்க இது நல்ல நேரம். நகைகளில் முதலீடு செய்ய ஏற்ற நேரம். இரும்பு தொடர்பான தொழில்களை தொடங்கலாம். வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அன்னை மகாலட்சுமியை வணங்கலாம்.

விருச்சிகம்

செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் விரைய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ஜென்ம ராசியில் குரு இரண்டாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்க தொழில் ஸ்தான அதிபதி ராசி நாதன் செவ்வாயுடன் இணைந்து சஞ்சரிக்கும் இந்த கால கட்டத்தில் பூமி, நிலம் வாங்குங்கள். சூப்பர் மார்க்கெட் தொடங்கலாம். மளிகைக்கடை ஆரம்பிக்கலாம். செவ்வாய்கிழமைகளில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று செவ்வாய் பகவானை வணங்கி வரலாம். பழனி சென்று முருகனை வணங்கலாம்.

மகரம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே. சுப விரைய செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தற்போது திண்டாடிக்கொண்டிருக்கிறீர்கள். இது தொடங்க சரியான காலமல்ல புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. திட்டமிட்டுச் செயல்படுங்கள் நல்லது நடக்கும். வெள்ளிக்கிழமை சிவ வழிபாடு நன்மையை கொடுக்கும்.

கும்பம்

நவ கிரகங்களின் சஞ்சாரத்தின் படி பார்த்தால் புதிய தொழில் தொடங்க வேண்டாம் இருக்கும் தொழிலை விரிவு படுத்துங்கள் லாபம் அதிகம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் அற்புதமாக உள்ளது. சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுங்கள் நன்மைகள் நடக்கும்.

மீனம்

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே புதிய கடன் வாங்க வேண்டாம் உங்களிடம் உள்ள சேமிப்பை வைத்து தொழில் தொடங்குங்கள். நீங்கள் தொடங்கும் தொழில் உங்களுக்கு வெற்றியை தேடித்தரும் உங்க ராசி அதிபதி குருபகவானை வியாழக்கிழமை வணங்குங்கள் நல்லதே நடக்கும். தொழில் வியாபாரம் லாபம் வெற்றியை தரும்.

loading...