ஆட்டிப்படைக்கும் சனியையும் விட வக்கிரமடையும் செவ்வாய்! யார் யாருக்கெல்லாம் பேராபத்து நிகழும்? இந்த 5 ராசியும் ஜாக்கிரதை

Report
952Shares

சனிபகவான் வக்ரம் முடிகிறது. செவ்வாய் 18ஆம் தேதி மீனம் ராசிக்கு நகர்கிறார். கிரகங்கள் வக்ர சஞ்சாரத்தை பார்த்தால் செவ்வாய் 19ஆம் தேதி வக்ரம் ஆரம்பம்.

28ஆம் தேதி புதன் வக்ரம் ஆரம்பமாகிறது.

இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வருகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே உங்க ராசியில் உள்ள செவ்வாய் வக்ரமடைகிறார். இரண்டாம் வீட்டில் ராகு, சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் பயணிக்கிறார். ஆறாம் வீட்டில் புதன், சூரியன், எட்டில் ராகு ஒன்பதாம் வீட்டில் குரு, பத்தில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. யோகமான மாதம்.

நிதி நிலை அற்புதமாக இருக்கும் பணவரவு வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். உயரதிகாரிகளிடம் பொறுமையாகவும் கவனமாகவும் நடந்து கொள்ளுங்கள். குரு பார்வை இருப்பதால் சுப காரியம் நல்லவிதமாக நடைபெறும். இல்லத்தரசிகளுக்கு ரொம்ப நல்ல மாதம்.

குடும்பத்தோடு ஆலய தரிசனம் செய்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். செய்யும் தொழிலில் லாபம் வரும் பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். இந்த மாதம் அரசியல்வாதிகள் கவனமாக இருங்க. சூரியன் 6ஆம் வீட்டில் இருப்பதால் எதையும் எச்சரிக்கையோடு கையாளுங்கள். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். சிலர் புதிய வண்டி வாகனம் வாங்கலாம்.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு விரதம் இருந்து மாவிளக்கு போட்டு வணங்குங்கள் நிறைய நல்லது நடக்கும். பிரதோஷ நாளில் தானம் பண்ணுங்க நல்லது நடைபெறும். புரட்டாசி அமாவாசை நாளில் தானம் பண்ணுங்க நல்லது நடக்கும். புரட்டாசி 5 செப்டம்பர் 21ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 3.16 மணி முதல் புரட்டாசி 07ஆம் தேதி செப்டம்பர் 23 மாலை 6.25 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவும். இந்த நாட்களில் வம்பு வழக்குகள் வேண்டாம். நிதானமும் எச்சரிக்கையும் தேவை.

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபரியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே, புரட்டாசி மாதம் உங்க ராசிக்கு சாதகமான நிலையில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சூரியன் புதன் இணைந்திருப்பதால் பிதுர்ராஜ்ஜித சொத்துக்கள் மூலம் லாபம் வரும். இந்த மாதம் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும் மாதம். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். கடன் பிரச்சினை நீங்கும்.

புதிய தொழில் தொடங்கலாம். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ராசிநாதன் சாதகமான இடத்தில் இருப்பதால் தொழில் லாபம் வரும். சிலருக்கு பதவி உயரும் சம்பள உயர்வும் கிடைக்கும். சகோதர சகோதரிகளால் நன்மைகள் நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமும் அக்கறையும் ஏற்படும்.

அரசு வேலை செய்பவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கவுரவம் புகழ் தேடி வரும். ராகு பகவான் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். கேது உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். ஜென்ம ராகுவினால் சில உடல் நலக்கோளாறுகள் மருத்துவ செலவுகள் வரலாம். நரம்பு பிரச்சினைகள் வரும் கவனம். கணவன் மனைவிக்குள் சந்தோஷம் நெருக்கம் கூடும். உங்களுக்கு வரும் நோய்களை கேது நிவர்த்தி செய்வார்.

வண்டி வாகனங்களில் கவனமாக இருங்க. சுப காரிய பேச்சுவார்த்தைகளை ஒத்திப்போடுவது நல்லது. சிலருக்கு இடமாற்றம் வரலாம். சிலருக்கு வீடு மனை மாற்றம் வரலாம். பெண்களுக்கு இது நல்ல மாதம் குடும்பத்திலும் பணியிடத்திலும் மதிப்பு மரியாதை கூடும். சந்திராஷ்டம நாட்கள் வரும் புரட்டாசி மாதம் 07ஆம் தேதி செப்டம்பர் 23 புதன்கிழமை மாலை 6.23 மணி முதல் புரட்டாசி 10ஆம் தேதி செப்டம்பர் 26 அதிகாலை 12.41 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். பிரதோஷம் நாளில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தின் படிசிறப்பான யோகங்களை கொடுக்கப் போகிறது. காரணம் உங்க ராசி நாதன் புதன் ஆட்சி உச்சம் பெற்று சூரியனோடு இணைந்து அமர்ந்திருக்கிறார்.

உங்களுடைய தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். வாக்கு ஸ்தானத்தில் உள்ள சுக்கிரனால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வருமானம் கூடும்.

வங்கி சேமிப்பும் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு உத்யோக உயர்வும் வருமான உயர்வும் ஏற்படும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். வெளிநாடு யோகமும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் வரும்.

சொத்து வீடு வாங்கும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கவனித்து வாங்குவது நல்லது. களத்திர ஸ்தானத்தில் குரு அமர்ந்து உங்க ராசியை பார்வையிடுகிறார். தடைபட்ட சுபகாரியங்கள் நடைபெறும். திருமணம் கை கூடி வரும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

தோஷங்கள் நீங்கும். வண்டி வாகனம் வாங்கலாம். சிலருக்கு திடீர் உடல் நலக்கோளாறுகள் வரலாம். இந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டாம் தவிர்த்து விடுங்கள். இந்த மாதம் சந்திராஷ்டமம் உள்ள நாட்கள் புரட்டாசி 10ஆம் தேதி செப்டம்பர் 26ஆம் நாள் அதிகாலை 12.41 மணி முதல் புரட்டாசி 12ஆம் தேதி செப்டம்பர் 28 காலை 9.41 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது.

கடகம்

சந்திர பகவானை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் சந்தோஷங்கள் நிறைந்த மாதம். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். நிதி நெருக்கடிகள் நீங்கும். அப்பாவினால் நன்மைகள் நடைபெறும்.

பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். நிதித்துறையில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். பணவருமானம் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் உள்ள ராகுவினால் பண வருமானம் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். போட்டி பொறாமை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் பிசினஸ் சுமாராக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

குடும்பத்தில் சிலருக்கு சின்னச் சின்ன சண்டை சச்சரவு வரும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கல்வித்துறையில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை.

சந்திராஷ்டம நாட்கள் வரும் புரட்டாசி 12ஆம் தேதி செவ்வாய்கிழமை செப்டம்பர் 28 காலை 9.41 மணி முதல் செப்டம்பர் 30 இரவு 8.36 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் எச்சரிக்கையும் தேவை. சதுர்த்தி நாளில் விநாயகரை அருகம்புல் சாற்றி வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்க ராசி நாதன் குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி உச்சம் பெற்ற புதனுடன் இணைந்து சஞ்சரிப்பதால் நிறைய தன லாபம் கிடைக்கும். புகழ் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். உங்க பேச்சிற்கு மதிப்பு கூடும் என்றாலும் ஒவ்வொரு சொல்லையும் யோசித்து பேசுவது நல்லது.

கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அப்பாவின் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். அப்பா வழி சொத்துக்கள் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வருமானம் கூடும் வங்கி சேமிப்பு உயரும். மாணவர்களுக்கு நல்ல மாதம், உயர்கல்வியில் தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். அம்மா வழி உறவினர்கள் தாய்மாமன் மூலம் நன்மைகள் நடைபெறும். சுப விரைய செலவுகள் ஏற்படும். உங்க ராசிக்குள் சுக்கிரன் வருவதால் முகத்தில் பொலிவு கூடும். மலர்ச்சி அதிகரிக்கும்.

இந்த மாதம் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கடன் கொடுக்காதீங்க அப்புறம் திரும்ப வரலையேன்னு வருத்தப்பட வேண்டியிருக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. குரு பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் திருமண யோகம் கை கூடி வருகிறது. திருமணமாகி குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம் ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். புதிய தொழில் தொடங்கலாம்.

இந்த மாதம் சந்திராஷ்டம் புரட்டாசி 14ஆம் தேதி செப்டம்பர் 30 புதன்கிழமை மாலை 8.36 மணி முதல் புரட்டாசி 17 சனிக்கிழமை அக்டோபர் 03 காலை 8.50 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவும். இந்த மாதம் சிவ ஆலய தரிசனம் செய்வது நன்மையை அதிகரிக்கச் செய்யும்.

கன்னி

புதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசியில் பிறந்த ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு அற்புதங்கள் நிகழப்போகிறது காரணம் உங்க ராசிநாதன் புதன் உங்க ராசியில் ஆட்சி பெற்று சூரியனோடு இணைந்திருக்கிறார். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். அரசு துறையில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும்.

சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். உங்களின் சுறுசுறுப்பும் உற்சாகமும் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். கல்வித்துறையில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். மாணவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். பெண்களுக்கு நகை ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.

ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். சிலருக்கு திடீர் உடல்நல பாதிப்பு ஏற்படும். எதிரிகள் பிரச்சினை நீங்கும். விவசாயம் செழிப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். வேலை, உத்யோக மாற்றம் ஏற்படும்.

வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமாக இருப்பது நல்லது. சந்திராஷ்டம காலமான புரட்டாசி 17 சனிக்கிழமை அக்டோபர் 03 காலை 8.50 மணி முதல் புரட்டாசி 19 அக்டோபர் 5 திங்கட்கிழமை இரவு 9.41 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் எச்சரிக்கையும் தேவை. இந்த மாதம் கன்னி ராசிக்காரர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை கொடுத்து வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.

you may like this...