குரு பார்க்க கோடி நன்மை... தனுசு ராசி மீது திசை திரும்பிய குறி! யார் யாருக்கெல்லாம் விபரீத ராஜயோகம் தெரியுமா?

Report
4254Shares

குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழிக்கு இணங்க குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் அற்புத பலனை அடையும் என்பதால்தான் குருபகவான் இப்போது தனுசு ராசியில் தனது வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார்.

ஐந்தாம் பார்வையாக மேஷம், ஏழாம் பார்வையாக மிதுனம், ஒன்பதாம் பார்வையாக சிம்மம் ராசிகளை பார்வையிடுகிறார் குருபகவான்.

நவம்பர் முதல் மகரம் ராசிக்கு இடம்மாறும் குருபகவன் அங்கிருந்து ரிஷபம், கடகம், கன்னி ராசிக்காரர்களை பார்வையிடுவார்.

இந்த குரு பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தை தரப்போகிறார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்கு பாக்ய ஸ்தான குருவாக ஒன்பதாம் வீட்டிற்கு செல்கிறார் குருபகவான். குருவின் பார்வை நேராக உங்க ராசிக்கு கிடைக்கிறது. குருவினால் உங்களுக்கு இருந்த பண கஷ்டம் மனக்கஷ்டம் இருந்தது. வீண் பண விரையங்கள் இனி வராது. சுப செலவுகள் வரும். சொந்த வீடு வாசல் வாங்கலாம். தடைபட்ட காரியம் கை கொடுக்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு மூன்று, ஐந்தாம் வீடுகளின் மீது விழுவதால் குரு பலனால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

கடகம்

இதுநாள் வரைக்கும் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் குருபகவான் இருந்தார். குரு ஏழாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி ஆகி உங்க ராசியை பார்வையிடுகிறார். இது சிறப்பான கால கட்டம். சனி அஷ்டமத்தில் இருந்தாலும் குரு பார்வை சஞ்சாரத்தினால் நிறைய நன்மைகள் நடைபெறும். பண மழை பொழியப்போகிறது. இழந்த விசயங்களை நீங்கள் பெறும் காலம் வந்து விட்டது. நல்ல செய்திகள் தேடி வரும். குருவின் பார்வை உங்க ராசியின் மீதும், ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. உங்களுக்கு வியாபாரம் தொழிலில் நல்ல லாபம் வரும்.

கன்னி

குருபகவான் இதுநாள்வரை உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் இருந்த சில பாதிப்புகளை கொடுத்து வந்தார், இனி குரு ஐந்தாம் வீட்டிற்கு நகர்கிறார். இந்த குரு பெயர்ச்சியால் நிறைய நல்லது நடக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும் நீங்க தொட்டது துலங்கும். இது குரு பெயர்ச்சி உங்களுக்கு விஷேசமான யோக பலன்களை தரப்போகிறது. பூர்வ புண்ணிய குரு உங்க ராசியை பார்வையிடுகிறார். உங்களுக்கு புத்திர யோகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். உங்க ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுகிறது. பொற்காலம் ஆரம்பமாகிவிட்டு. நேர்மறையான சம்பவங்கள் நடைபெறும். உங்க உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும்.

தனுசு

குரு பகவான் உங்க ராசிக்கு அதிபதி. ஜென்மகுருவாக இருந்தவர் இனி குடும்ப குருவாக இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகிறீர்கள். உடல் நலத்தொந்தரவுகள் நீங்கும். மிகப்பெரிய ஜாக்பாட் நடக்கும். இரண்டில் குரு உங்களுக்கு நன்மைகளை செய்வார். உங்க ராசிக்கு இரண்டாம் வீடு தன ஸ்தானம் குடும்ப ஸ்தானம்.வர வேண்டிய பணம் கைக்கு வரும். ஏழரை சனியால் அல்லல் பட்டு வரும் உங்களுக்கு இனி தொந்தரவுகள் நீங்கி நன்மைகள் நடக்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு ஆறு, எட்டு, பத்தாம் வீடுகளின் மீது விழுவதால் சந்தோஷங்கள் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். நோய் பாதிப்புகள் முடிவுக்கு வரும். எதிரிகள் தொல்லை நீங்கும். நீங்கள் பட்ட அவமானங்கள் முடிவுக்கு வரும். ஆயுள் கண்டம் நீங்கும்.

மீனம்

குருபகவான் உங்க ராசிக்கு அதிபதி. பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு நகர்கிறார். பத்தில் குரு இருந்து படுத்தி எடுத்திருப்பார் இனி குரு லாப ஸ்தானத்திற்கு நகர்வதால் நிறைய முன்னேற்றங்களை தரப்போகிறார். உங்க ராசிநாதன் குரு லாபத்திற்கு வருவதால் உங்களின் முன்னேற்றம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குருவின் பார்வை முயற்சி ஸ்தானமான

மூன்றாம் வீட்டில் விழுகிறது. நீங்கள் செய்யும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். இதே போல குருவின் பார்வை உங்க ராசிக்கு ஐந்தாம் வீடு, ஏழாம் வீட்டில் மீது விழுகிறது. குரு பலன் வந்து விட்டது. திருமணம் சுபகாரியம் நடைபெறும். அதேபோல திருமணம் முடிந்து புத்திரபாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியமும் கிடைக்கும்.