வக்ர நிலையில் மேஷத்திற்கு பெயர்ச்சியாகும் செவ்வாய் : யாருக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது தெரியுமா?

Report
1948Shares

செவ்வாய் பகவான் மீன ராசியிலிருந்து, தன் சொந்த வீடான மேஷ ராசியில் ஆகஸ்ட் 16ம் தேதி மாலை 6.31 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

இவர் செப்டம்பர் 10ம் தேதி வரை மேஷத்தில் சஞ்சரிப்பார்.

அதன் பின் மீண்டும் அக்டோபர் 4ம் தேதி மீன ராசியில் வக்ர நிலை அடைகிறார். தற்போது மேஷ ராசிக்கு சஞ்சரித்துள்ளதால் சில ராசிகளுக்கு பல நல்ல பலன்களை அள்ளித் தருவார். சிலருக்கு பல ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.

செவ்வாய் தெய்வங்களின் தளபதி என்றும் அழைக்கப்படுகிறது, எனவே அதன் பெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசிகளுக்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பெயர்ச்சி காலத்தில் சில ராசிகளின் வாழ்க்கையில் பல சாதகமான பலன்கள் பெற வாய்ப்புள்ளது. அவை எந்தெந்த ராசிகள் என்பதைப் பார்ப்போம்...

மேஷம்

மேஷ ராசி அதிபதி செவ்வாய் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பல வழிகளிலிருந்து நல்ல பலன்களும், நல்ல செய்திகளும் கேட்க முடியும். உங்கள் வாழ்க்கை துணை மூலம் நல்ல ஆதரவைப் பெறுவீர்கள்.

வியாபாரத்தில் நீங்கள் முன்னேற்ற நிலையைக் காண்பீர்கள், மேலும் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளையும் நீங்கள் கேட்கலாம். வேலை தேடுவோருக்கு இந்த காலத்தில் அவர்களின் கனவு நிறைவேறும்.

​மிதுனம்

உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் செவ்வாய் பகவான் இருக்கிறார். அவரின் குணமே வேகமும், தன்னம்பிக்கையும் தான். தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் தடைப்பட்ட பணிகளை நீங்கள் நினைத்த வகையில் நிறைவேற்றுவீர்கள். அதன் மூலம் பல லாபம் உண்டாவதற்கான வழிகள் உருவாகும்.

உங்களுக்கு நிதி ரீதியான வலுவான நிலையைக் காண்பீர்கள். நீங்கள் முயற்சிக்கும் வேலைகள் நிறைவடையும். உங்களின் செயல் சமூகத்தில் மதிப்பு, மரியாதையைப் பெற்றுத் தரும். குடும்பத்திற்குத் தேவையான பல பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.

​கன்னி

செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி கன்னிக்கு பல நல்ல முடிவுகளைக் கொண்டு வர உள்ளது. உங்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். அதே நேரத்தில் உங்களுக்கு மாமியார் வீடு வகையில் நீங்கள் பயனடைவீர்கள்.

அரசாங்கத்தின் திட்டம் உங்களுக்கு பயனளிக்கும், வெளிநாடு செல்ல விரும்புவோர், அவர்களின் விருப்பம் நிறைவேறும். பூர்விக சொத்துக்கள் பெறுவதில் உங்களுக்கு சாதகமான பலன்கள் இருக்கும்.

​விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாய். இவர் ராசிக்கு 6ம் வீடான, நோய், எதிரி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இந்த நேரத்தில் நீங்கள் பல நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள்.

உங்கள் கடின உழைப்பின் முழு பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் மரியாதையை அதிகரிக்கும். செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியால் விருச்சிக ராசி மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் தரும். உங்களின் கடின உழைப்பு, அதற்கேற்ற பல நல்ல பலன்களைப் பெற்றுத்தரும். தேவைப்படுபவர்களுக்கும் உதவுவது நல்ல பலன்களை மேலும் அதிகரிக்கும்.

​கும்பம்

உங்கள் ராசிக்கு செவ்வாய் ஒரு பல நலனை அளிப்பதாக இருக்கும். எந்த துறையில் நீங்கள் இருந்தாலும் அதில் முன்னேற்றத்தையும், எந்த செயலை செய்து முடிப்பதற்கான உங்களின் வலிமை அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் மற்றும் வருமானம் அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தின் முழு ஆதரவை பெறுவீர்கள். உங்களின் கடின உழைப்பின் பலத்தையும் நிச்சயம் பெறுவீர்கள், இந்த இடைக்கால காலத்தில் எல்லா வகையிலும் புதிய நிலையை அடைவீர்கள். உங்கள் வணிகம் வளர்ச்சியைக் காணும்.

​மீனம்

மீனம் ராசிக்கு இரண்டாம் இடத்தில் அதாவது குடும்ப, தன ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் மேஷத்தில் செவ்வாய் இருக்கக் கூடிய காலத்தில் உங்களின் நிதி நிலை வளர்ச்சி அதிகமாக இருக்கும். உங்களின் சிக்கனத்தின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும்.

பிறரிடம் இருந்து வரவேண்டிய பணம் வந்து சேரும். நீங்கள் வாழ்க்கைத் துணை மூலம் நல்ல ஆலோசனையும், ஆதரவும் பெறுவீர்கள், உங்கள் சகோதர சகோதரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் காதல் வலுவாவதற்கும், திருமண நிலை நோக்கி செல்பவர்களுக்கு இந்த காலம் மிகவும் உரியதாகும்.

you may like this...

loading...