ராகு - கேதுவின் ஆட்டத்தால் புதிய வைரஸ் நோய்கள் தாக்கும்! ஜாக்கிரதை... எப்போது கொரோனா விலகும் தெரியுமா?

Report
708Shares

தற்போது நடந்துகொண்டிருக்கும் சார்வரி ஆண்டுக்குரிய இடைக்காட்டுச் சித்தரின் வருஷாதி பாடல்தான் இது.

தீரமறு நோயால் திரிவார்கள் - மாரியில்லை
பூமி விளைவில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமின்றி சாவார் இயம்பு"

தொடக்கப் பாடலிலேயே 18 ஜாதிகளும் நோயில் அவதிப்படுவார்கள், மழை இல்லை, பூமி விளையாது, சிறார்களும் மற்றவர்களும் பாதுகாப்பு இல்லாமல் உயிரிழக்க நேரிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடல் எத்தனையோ நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது.

இங்கே ஜாதி எனக் குறிப்பிடப்படுவது நம் ஊரில் குறிப்பிடப்படும் வகையிலானதல்ல. இந்த இடத்தில் வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு மக்கள் என்பதுதான் பொருள்.

இந்த மாபெரும் தீநுண்மியாகிய கரோனா, இவ்வாறு தீவிரமாகப் பரவுவதற்கு ஜோதிட, கோள்களின் அடிப்படையிலான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.

  • 12 ராசிகளில் தனுசு வீடு மற்றும் மீன வீடு ஆகியவை குருவின் வீடுகளாகும். இந்த வீடுகள் மிகவும் சுபத்துவம் வாய்ந்ததும் ஆன்மிகத்துடன் தொடர்புடையதுமான ராசிகள்.
  • இந்த வீடுகளில் சனியுடன் ராகு அல்லது கேது நெருக்கமாக இணையும் காலகட்டங்களில் பொதுவாக நாத்திகக் கருத்துகள் மேலோங்கியிருக்கும். இத்தகைய அமைப்புகளில் பிறந்தவர்கள், நாத்திகர்களாகக்கூட இருப்பார்கள்.
  • சனியுடன் ராகு அல்லது கேது இணையும்போது நோய்க் கிருமிகளால் மாபெரும் தொற்று பரவும் வாய்ப்புள்ளது.
  • நடப்பு சார்வரி ஆண்டில் தனுசு வீட்டில் சனி மற்றும் கேது ஆகிய கோள்கள் மிகவும் நெருக்கமாக இணைந்திருந்தது இந்த கரோனா நோய்த் தொற்று பரவலாவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
  • அத்துடன் குரு வக்கிர கதியில் நீசமடைந்த காலகட்டத்தில், கடந்த சில மாதங்களில், இந்த நோய்த் தொற்று மிகவும் தீவிரமாகப் பரவியது.
  • ஆன்மிக கோளான குரு நீசமடைந்து, அதன் தனுசு வீட்டில் சனி மற்றும் கேது இணைவு தொடர்ந்தபடியே இருந்ததால், கரோனா மிகவும் மோசமாகப் பரவும் சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்த நோய்த் தொற்று எப்போதுதான் விலகும்? என்று பார்ப்போமானால்...

தற்போது குரு, வக்கிர கதி முடிந்து, தனுசு வீட்டிற்குள் நுழைந்துவிட்டது.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி ராகு - கேது ஆகிய கோள்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி செப்டம்பர் 23 ஆம் தேதி ராகு - கேது பெயர்ச்சி).

தனுசு வீட்டை விட்டு நகர்ந்து, விருச்சிகத்துக்குக் கேது செல்வதுடன், சனியின் சேர்க்கையிலிருந்தும் விடுபடுகிறது. இதேபோல ராகுவும் மிதுனத்திலிருந்து வெளியேறி ரிஷபத்துக்குச் செல்கிறது.