குறி வைக்கும் குரு! திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா? இந்த 3 ராசியும் மிக அவதானம்!

Report
6028Shares

வியாழக்கிழமை குரு வாரம். இன்றைக்கு குருவின் பார்வையால் சில ராசிக்காரங்களுக்கு பண வருமானம் வரும்.

சந்தோஷம் அதிகரிக்கும். இதோ உங்க தினசரி ராசி பலனை படிங்க உங்க நிதி நிலைமை, காதல் விவகாரங்கள் உடல் ஆரோக்கியம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

இன்று மதியத்துக்கு மேல உங்க ராசிக்கு சந்திராஷ்டமம். வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டியது அவசியம். வாகனத்தில் வெளியில போகும்போது அவதானம். தேவையில்லாத மனக்குழப்பம் வரும். மிக எச்சரிக்கையா சிந்தித்து செயற்படுங்கள்.

ரிஷபம்

பூர்வீக சொத்து பத்து சம்பந்தமான வழக்கில் இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஒரு சில பேருக்கு வண்டி வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. காதல் கல்யாணத்தில் முடியும்.

மிதுனம்

வெளியூர் பிரயாணம் போக சந்தர்ப்பம் கிடைக்கும். வாய்ப்பை பயன்படுத்தினால் நல்லது. உத்தியோகத்துலு சில பேருக்கு நெருக்கடிகள் குறையும்.

கடகம்

குடும்பத்தில் பெரியவங்க கூட சின்னச் சின்னதா மனஸ்தாபங்கள் வந்து போகும். இன்னிக்கு நீங்க செய்ய நினைச்ச வேலையை செய்ய முடியாமல் சிறிய இடைஞ்சல் முளைக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள்.

சிம்மம்

அகலக்கால் வைக்காம நிதானமா நடந்துக்குறது நல்லது. வேலை தேடுறவங்களுக்கு புது வேலை வாய்ப்புகள் அமையும். சொந்தக்காரங்க மூலமா வீண் பிரச்சனைகள் வந்து முளைக்கும். இதனாலயே நீங்க ரொம்பவே மனக்குழப்பத்தோடவே இருப்பீர்கள். மேரேஜ் லைஃப்லயும் எந்த பிரச்சனையும் இருக்காது.

கன்னி

உங்கள் திறமைக்கும் உழைப்புக்கும் ஏற்ற ப்ரமோஷன் கிடைக்கும். பிசினஸ்ல புது கூட்டாளிகள் வந்து சேர வாய்ப்பிருக்கு. சொந்தக்காரங்களும் உங்களோட வளர்ச்சிக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. குடும்பத்துலயும் மனசுக்கு இதமான தரமான சம்பவங்கள் நடக்கும். உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

துலாம்

எதுலயும் நிதானமா இருக்குறது நல்லது. சில பேருக்கு பூர்வீக சொத்து பத்து சம்பந்தமா தண்டச் செலவுங்க வந்துடும். வீட்ல பேசும் போது யோசிச்சு பேசுங்க.

விருச்சிகம்

புது முயற்சி எடுப்பதாக இருந்தால் ஒரு தடவைக்கு பல தடவை யோசிச்சி முடிவெடுப்பது நல்லது. குடும்பத்துலயும் இதுவரைக்கும் தொந்தரவா இருந்த பிரச்சனை சரியாகி விடும். பிள்ளைங்களோட படிப்பு கொஞ்சம் மந்தமா தான் இருக்கும். சொந்தக்காரங்க மூலமா தண்டச் செலவுங்களும் வந்து இம்சை கொடுக்கும்.

தனுசு

சொந்தக்காரங்களினால் உங்களுக்கு திடீர் நெருக்கடிகள் உண்டாகலாம். காதலருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். இருந்தாலும் அவசரப்படாதீர்கள்.

மகரம்

வியாபாரம் பெருகி நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னெற்றம் இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல அனுகூலம் கிடைக்கும். வீட்டுல சுப காரிய விஷேசங்களும் இன்று நடக்கும்.

கும்பம்

திடீர் பணவரத்தும் வந்து உங்களை திக்கு முக்காட வச்சிடும். நீங்க நினைச்ச காரியத்தை நெனைச்ச படியே நல்லபடியா செஞ்சி முடிப்பீங்க. ரொம்ப நாளா இருந்துவந்த கடன் பிரச்சனை இன்னிக்கு சரி ஆகிவிடும். இன்னிக்கு உங்க குடும்ப வாழ்க்கையும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.

மீனம்

இன்னிக்கு குடும்பத்துல இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக காணாமல் போயிடும்.. இன்று மதியம் வரைக்கும் உங்களுக்கு சந்திராஷ்டமம். எந்த விஷயத்தையும் கொஞ்சம் நிதானத்தோட செய்வது நல்லது. மதியத்துக்கு மேல உங்களுக்கு சாதகமான பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.

loading...