ராகு உடன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி - எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும்! ஜூன் முதல் நாளில் யாருக்கு விபரீத ராஜயோகம் தெரியுமா?

Report
2413Shares

ஜூன் மாதத்தின் முதல் வாரம் கிரகங்களின் கூட்டணி சிலருக்கு பண வருமானத்தை கொடுக்கும். சிலருக்கு செலவுகளை கொடுக்கும்.

மகரம் ராசியில் வக்ரம் பெற்ற சனி குரு, ரிஷபம் ராசியில் சூரியன் சுக்கிரன் மிதுனம் ராசியில் ராகு ஆட்சி பெற்ற புதன் என கிரகங்கள் கூடியுள்ளன.

இந்த கிரகங்களின் சஞ்சாரம் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சிலருக்கு வேலையில் மாற்றங்களை கொடுக்கும். இன்று முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரும் திடீர் செலவுகள் வரும் என்று ராசிபலன்களை படிச்சு தெரிஞ்சுக்கங்க.

மேஷம்

இந்த வாரம் கணவன் மனைவிக்கு இடையில் சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் கடைசியில நீங்க சரண்டராகிடுவீங்க. மாணவர்களுக்கு ஞாபக சக்தி கூடும். பரீட்சைக்கு படிக்குற பசங்க திரும்ப திரும்ப படிச்சி எழுதி பார்ப்பது நல்லது. உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு இந்த வாரம் யோகமான வாரம்.

உங்களோட திறமை மற்றவர்களுக்கு தெரிய வரும். கோபம் அடிக்கடி எட்டிப்பாக்கும். இந்த வாரம் திடீர் பணவரவு இருக்கும். வார கடைசியில ஜூன் 4ஆம் தேதி மதியத்தில் இருந்து ஜூன் 6ஆம் தேதி மதியம் வரைக்கும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க வீட்டை விட்டு வெளியே போனாலும் நிதானமாக இருங்க.

 • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
 • அதிர்ஷ்ட எண்: 18
 • அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

ரிஷபம்

இந்த வாரம் சுப காரிய பேச்சுவார்த்தை எதையும் வச்சிக்க வேணாம். கல்யாணம் சம்பந்தமா பேசுறதா இருந்தா ரொம்பவே எச்சரிக்கையா இருக்குறது நல்லது. ஆன்லைன் மூலமா வரன் பாக்குறதா இருந்தா உஷாரா இருக்குறது நல்லது. லவ் பண்றவங்க கவனமா இருந்துக்குறது நல்லது. பரிட்சைக்கு படிக்குற பசங்க திரும்பத் திரும்ப எழுதி பாத்துக்குறது அவசியம். இந்த வாரம் உஷ்ணம் சம்பந்தமான நோய் தாக்குறதுக்கு சந்தர்ப்பம் இருக்கு. அதனால வெயில்ல அலையாதீங்க. இந்த வாரம் பண வரத்து கூடுதலா இருந்தாலும், அநாவசிய செலவுகளையும், ஆடம்பர செலவுங்களையும் அவாய்ட் பண்றது நல்லது. யார் கிட்டயும் கோவப்பட்டு பேசிடாதீங்க. ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது அவசியம்.

 • அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
 • அதிர்ஷ்ட எண் : 22
 • அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

மிதுனம்

இந்த வாரம் கணவன் மனைவுக்கு நடுவுல சண்டை சச்சரவுன்ன எட்டிப்பாக்கும். நீங்க கொஞ்சம் விட்டுக்கொடுத்து போறது நல்லது. இல்லேன்னா சேதாரம் உங்களுக்கு தான். பெத்தவங்களோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது. குடும்பத்துல உள்ளவங்க கிட்ட பேசும்போது ரொம்பவே கவனமா பேசி பழகுறது நல்லது. ஆத்திரப்பட்டு பேசிட்டு பின்னாடி வருத்தப்பட நேரும். சுப காரிய பேச்சுவார்த்தை எதையும் வச்சிக்காதீங்க. கல்யாணத்துக்கு வரன் பாக்குற வேலை எதையும் இந்த வாரம் வச்சிக்காதீங்க. பிசினஸ்லயும் பெரிய தொகை எதையும் முதலீடு பண்றதை அவாய்ட் பண்ணிடுங்க. உத்தியோகத்துல இருந்து வந்த நெருக்கடிகள், பிரச்சனைகள் சரியாகிடும். திடீர் பண வரத்தும் இந்த வாரம் உண்டு சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க.

 • அதிர்ஷ்ட நிறம் : கரும் பச்சை
 • அதிர்ஷ்ட எண் : 14
 • அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை

கடகம்

இந்த வாரம் எதிர்மறை எண்ணத்தை விட்டொழிச்சிட்டு பாசிட்டிவா எண்ணத்தை வளர்த்துக்கிறது நல்லது. மாணவர்கள் படிக்குறதுல ஆர்வமும் ஈடுபாடும் இருந்தா மட்டுமே புரிஞ்சி படிச்சி பரீட்சையில பாஸ் பண்ண முடியும். பிசினஸ், வியாபாரத்துல லாபம் வரும், இருந்தாலும் தண்டச்செலவுங்களை அவாய்ட் பண்ணிட்டா கொஞ்சமாவது சேத்து வைக்க முடியும். வண்டி வாகனத்துல போகும்போதும், கூர்மையான ஆயுதங்களை யூஸ் பண்ணும்போதும் கூடுதல் எச்சரிக்கையோட இருந்துக்கிறது நல்லது. அதே மாதிர் வீட்டுப்பெண்கள் சமையல் பண்ணும்போது கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையோட இருக்க பாருங்க. உத்தியோகத்துல இது வரைக்கும் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். ஹெல்த் கண்டிஷன்ல கூடுதல் அக்கறை காட்டுறது நல்லது. நேர்மறை எண்ணத்தை வளத்துக்கிட்டா உங்க மனக்கவலை எல்லாம் பறந்தோடும்.

 • அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
 • அதிர்ஷ்ட எண் : 11
 • அதிர்ஷ்ட நாள் : திங்கட்கிழமை

சிம்மம்

இந்த வாரம் பிசினஸ், வியாபாரம் பண்றவங்களுக்கு கொழுத்த லாபம் கிடைக்கும். பரீட்சைக்கு படிக்குற பசங்க நல்லா புரிஞ்சி படிப்பீங்க. திரும்ப திரும்ப எழுதி பாருங்க. இந்த வாரம் உங்க மனசுல நேர்மறையான எண்ணங்கள் கூடும். கல்யாணம் சுபகாரிய பேச்சு வார்த்தை எதையும் இந்த வாரம் வச்சிக்க வேணாம். சிலர் புதுசா பிசினஸ் பண்ணலாம்னு ஐடியா இருந்தா, அதுக்காக பேங்க் லோனுக்கும் முயற்சி பண்ணினா கிடைக்கும். சிலருக்கு புது வேலைக்கு முயற்சி பண்ணினா நல்ல இடத்துல வேலை கிடைக்க வாய்ப்பிருக்கு. மறைமுக எதிரிங்களால ஏற்பட்ட தொல்லைங்களும் காணாம போகும். ஹெல்த் கண்டிஷன்ல் சின்னச் சின்னதா பாதிப்புகள் வந்து எட்டிப்பாக்கும்.

 • அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
 • அதிர்ஷ்ட எண் : 10
 • அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

கன்னி

இந்த வாரம் தேவையில்லாத வெட்டிப் பேச்சுவார்த்தை எதையும் வச்சிக்காதீங்க. மன அமைதிக்காக தினசரி தியானம் யோகான்னு செஞ்சிட்டு வாங்க. வண்டி வாகனத்துல போகும்போது ரொம்பவே கவனமா எச்சரிக்கையா இருந்துக்கோங்க. உத்தியோகத்துல இருக்குற பெண்கள் ஆஃபிஸ்லயும் சரி, பொது இடத்துலயும் சரி முன்ன பின்ன தெரியாத ஆம்பளைங்க கிட்ட எச்சரிக்கையோட நடந்துக்கோங்க. இந்த வாரம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்க கதவை தட்டும். வருமானம் பெருகிடும். கூடவே சுபச் செலவுகளும் வந்துடும். வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்குவீங்க. மனசுல சின்னதா குழப்பம் எட்டிப்பாக்கும். செரிமாண பிரச்சனை வரலாம். சரியான நேரத்திற்கு சாப்பிடுங்க.

 • அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
 • அதிர்ஷ்ட எண் : 23
 • அதிர்ஷ்ட நாள் : புதன்கிழமை

துலாம்

இந்த வாரம் மாணவர்கள் படிக்குறதுல ரொம்பவே அக்கறை காட்டுறது அவசியம். பெண்களுக்கு சின்னச் சின்னதா ஹெல்த் ப்ராப்ளம் எட்டிப்பாக்க வாய்ப்பிருக்கு. கவனமா இருக்க பாருங்க. இந்த வாரம் நீங்க ரொம்பவே பொறுமையா இருக்க வேண்டியது அவசியம். வண்டி வாகனத்துல போகும்போது, வேகத்தை குறைச்சி நிதானமாவும் எச்சரிக்கையோடவும் போறது அவசியம். பணம் கொடுக்கல் வாங்கல்ல ரொம்பவே கவனமா நடந்துக்குறது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட்டுறாதீங்க. அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது அவசியம். இல்லேன்னா மருந்து மாத்திரைன்னு செலவழிக்க வேண்டியிருக்கும். பண சேமிப்பு கொஞ்சம் குறையும் சிக்கனமாக இருங்க.

 • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
 • அதிர்ஷ்ட எண் : 24
 • அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக் கிழமை

விருச்சிகம்

இந்த வாரம் பிசினஸ்ல பழைய சரக்குகளை எல்லாம் வித்து நல்ல லாபம் கிடைச்சி புது சரக்குகளையும் வாங்குவீங்க. பிசினஸ்ல புதுசா எந்த முதலீடும் பண்ணாதீங்க. படிக்குற பசங்கநல்லா தெளிவா புரிஞ்சி படிச்சி அடிக்கடி எழுதி பாருங்க. கணவன் மனைவிக்கு நடுவுல அந்நியோன்யம் கூடும். அப்பப்போ சின்னதா வாய் சண்டை வந்தாலும், கடைசியில நீங்க சரண்டாகிடுவீங்க. உத்தியோகத்துல இருந்து வந்த பிரச்சனைகளும் காணாம போகும். வேலை விஷயமா எடுக்குற முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். வீடு வாங்குற முயற்சியில இறங்கலாம். இந்த வாரம் ஃபைனான்ஸ் பிரச்சனை வந்தாலும் கூட, வருமானம் கூடுதலாக வருவதால சரியாகிடும்.

 • அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
 • அதிர்ஷ்ட எண் : 21
 • அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

தனுசு

இந்த வாரம் குடும்ப பெண்களுக்கு பண வரத்து கம்மியா இருந்தாலும், இருக்குறதை வச்சி அருமையா சமாளிப்பீங்க. படிக்குற பசங்களுக்கு தன்னம்பிக்கை கூடிடும். படிப்புலயும் ஆர்வம் உண்டாகும். ஹெல்த் கண்டிஷன் சின்னதா மக்கர் பண்ணினாலும் சரியான டயத்துக்கு சாப்பிடுங்க, அப்பப்போ படிச்சதை திரும்ப திரும்ப எழுதி பாருங்க. எடுக்குற முயற்சிகள் வெற்றி கொடுக்கும். பிசினஸுக்கு பேங்க் லோனுக்கு முயற்சி பண்ணினா சுலபமா கிடைக்கும். தண்டச்செலவுங்களை அவாய்ட் பண்ணிடுங்க. மனசுல நினைச்சது நடந்துடும். சொந்த பந்தங்களோட இருந்ததை நினைச்சு சந்தோஷப்பட்டுக்குவீங்க. கூடப்பொறந்தவங்க மூலமா உதவி, ஒத்தாசை கிடைக்கும். கல்யாணத்துக்கு வரண் பாக்குற பிரம்மச்சாரிங்களுக்கு கல்யாண பேச்சுவார்த்தையை தாராளமா ஆரம்பிக்கலாம். உத்தியோகத்துல இருந்து வந்த பிரச்சனை சரியாகிடும். இந்த வாரம் ஹெல்த் கண்டிஷன் மக்கர் பண்ணலாம். எதைப்பத்தியும் கவலைப்படாம கவனமாக இருங்க.

 • அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
 • அதிர்ஷ்ட எண் : 19
 • அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

மகரம்

இந்த வாரம் நீங்க செய்யுற முதலீடுகளுக்கு கொழுத்த லாபம் கிடைக்கும். வருமானம் நாலா பக்கமும் வந்தாலும், செலவு எட்டு பக்கத்துல இருந்தும் வந்து கண்ணை கட்டும். கணவன் மனைவிக்கு நடுவுல அப்பப்போ சின்னதா வாய்த் தகராறு வரலாம். நீங்க கொஞ்சம் அனுசரிச்சி விட்டுக்கொடுத்து நடந்துக்கோங்க. பேசுறப்போ கொஞ்சம் நிதானமா தெளிவா பேசி நீங்க சொல்ல நினைச்சதை சொன்னா சண்டை வராம தப்பிக்கலாம். இல்லேன்னா சேதாரம் உங்களுக்கு தான் கூடுதலா இருக்கும். உத்தியோகத்துல வேலைச்சுமை கூடுதலா வந்து அழுத்தம் கொடுக்கும். மனசை ஒரு நிலைப்படுத்த யோகா தியானம்னு செஞ்சிட்டு வாங்க. இந்த வார தொடக்கத்துலயே உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் வர்றதுனால, வீட்டை விட்டு வண்டி வாகனத்துல கிளம்பும்போது கொஞ்சம் எச்சரிக்கையா இருந்துக்கோங்க. ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுங்க. சரியான டயத்துக்கு சத்தான ஆகாரங்களை எடுத்துக்கங்க.

 • அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்
 • அதிர்ஷ்ட எண் : 35
 • அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

கும்பம்

இந்த வாரம் ஜுன் 2ஆம் தேதி மதியம் வரைக்கும் சந்திராஷ்டமம் இருக்குறதுனால, வேலைச்சுமை இருந்தாலும், வேலைக்கு நடுவுல கொஞ்சம் உடம்பையும் கவனிச்சிக்கிறது அவசியம். இருக்குற வேலையில கூடுதல் கவனம் செலுத்துங்க. சிலர் இருக்குற வேலையை விட்டுட்டு, புது வேலைக்கு மாறுற ஐடியா இருந்தா, இப்போதைக்கு அதை கொஞ்சம் தள்ளிப்போடுங்க.

வேலை செய்யுற இடத்துல சிக்கல்களையும், சவால்களையும் சந்ததிக்க வேண்டியிருக்கும். நீங்க பொறுமையா நிதானமா இருந்தா எதையும் சமாளிக்கலாம். பணம் கொடுக்கல் வாங்கல்ல கூடுதல் எச்சரிக்கையோட நடந்துக்கோங்க. சம்பந்தமே இல்லாம் வீண் வம்பு தும்பு எதுக்கும் போயிடாதீங்க. மனசளவுலயும், ஹெல்த் அளவுலயும் சின்னதா பிரச்சனை எட்டிப்பாக்கும். பிசினஸ்ல முதலீடு பண்றதா இருந்தா ஒரு தடவைக்கு ரெண்டு தடவை நல்லா யோசிச்சி முடிவெடுக்குறது நல்லது. பரீட்சைக்கு படிக்குற பசங்களுக்கு கவனக்குறைவு ஏற்படலாம். எதையும் தெளிவா படிச்சி எழுதிப்பாருங்க. அப்பதான் பரீட்சையில நல்ல மார்க் வாங்க முடியும். பெண்கள் ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.

 • அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
 • அதிர்ஷ்ட எண் : 22
 • அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை

மீனம்

இந்த வாரம் ஜுன் 2ஆம் தேதி தொடங்கி 4ஆம் தேதி மதியம் வரைக்கும் உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, எதுலயும் கூடுதல் எச்சரிக்கையோட நடந்துக்குறது அவசியம்.வண்டி வாகனத்துல வெளிய போகும்போது கவனமா நடந்துக்க பாருங்க. இல்லேன்னா பேசாம வீட்டுலயே இருங்க. குடும்ப வாழ்க்கை சில பேருக்கு ரொம்பவே சந்தோஷத்தையும், சில பேருக்கு சங்கடத்தையும் கொடுத்துடும்.

லவ் பண்றவங்க இந்த வார தொடக்கத்துலயே லவ் ப்ரபோஷல் பண்ணிடுங்க. படிக்குற பசங்களுக்கு படிப்புல நாட்டம் இல்லாம போகும். கொஞ்சம் அக்கறை எடுத்து படிச்சி எழுதி பாத்தா பரீட்சையில நல்ல மார்க் எடுக்க முடியும். இந்த வாரம் பண வரத்து அதிகமா இருக்கும். கடன் பிரச்சனை காணாம போயி, சேமிப்பு கூடும். பிசினஸ்ல வியாபாரம் பெருகி லாபம் கூடுதலா வரும். வீட்டுல சின்னச் சின்னதா பிரச்சனை முளைச்சி மனசுக்கு சங்கடத்தை கொடுக்கும் கவனமாக இருங்க.

 • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
 • அதிர்ஷ்ட எண் : 12
 • அதிர்ஷ்ட நாள் : வியாழன் கிழமை

loading...