இந்த 3 ராசிக்காரர்களுக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார்! உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி?

Report
3955Shares

ஏப்ரல் மாதம் மேஷம் ராசியில் சூரியன் உச்சம் பெறும் மாதம். இந்த மாதம் மகரத்தில் செவ்வாய் உச்சம், சனி ஆட்சி, குரு நீசபங்க ராஜயோகம், ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி என கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக உள்ளது.

இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். ஏப்ரல் மாதம் கிரகங்கள் மாற்றத்தை பார்த்தால் ஏப்ரல் 8ஆம் புதன் மீனம் ராசியில் நீசமடைகிறார். 14ஆம் தேதி சூரியன் மேஷத்தில் உச்சமடைகிறார். 24ஆம் தேதி புதன் மேஷம் ராசிக்கு வந்து புதனோடு இணைகிறார். நவ கிரகங்களின் சஞ்சாரம் பலருக்கும் நன்மை தரக்கூடியதாகவே இருக்கிறது. சிலருக்கு சோதனைகளை தரப்போகிறது.

உலகம் முழுவதும் நோய் தாக்குதல் அதிகமாகி வரும் இந்த சூழ்நிலையில் நவகிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து அனைத்து ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏப்ரல் மாதத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு வேலையில் நிம்மதியும் கும்பம் ராசிக்காரர்களுக்கு யோகமும், மீனம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான மாதமாக அமைந்துள்ளது. இந்த 3 ராசிக்கும் எப்படி இருக்கிறது என்று முழுமையாக பார்க்கலாம்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்க ராசியில் சனி, செவ்வாய், குரு என கிரகங்கள் கூடியுள்ளன. இரண்டாம் வீட்டில் புதன் இருந்தாலும் சில நாட்களில் மூன்றாம் வீட்டிற்கு சென்று நீசமடைகிறார். மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் சூரியன் நான்காம் வீட்டில் உச்சமடைவது உங்களுக்கு சாதகமான அம்சம். ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார்.

ராகு ராசிக்கு ஆறாம் வீட்டிலும் கேது விரைய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கின்றனர். உங்க ராசியில் குரு செவ்வாய் இணைந்து குரு மங்கள யோகம் கூடி வந்துள்ளது. இந்த மாதம் ரொம்ப சாதகமான மாதம்.

உங்களுக்கு இந்த மாதம் வேலை விசயமாக நிறைய நன்மைகள் நடக்கும். செவ்வாய் உங்க ராசியில் உச்சம் பெற்றிருப்பதால் மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். உங்களுக்கு பெர்சனல் வாழ்க்கையில இந்த மாதம் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.

செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால் மாதத்தின் முற்பகுதியில் சில மன அழுத்தங்கள் இருந்தாலும் மாத பிற்பகுதியில் உங்களுக்கு வேகம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடித்து வைத்திருப்பீர்கள்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசியில் புதன் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சனி, செவ்வாய், குரு, ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருக்கும் சூரியன் மாத பிற்பகுதியில் மூன்றாம் வீட்டில் சூரியன் உச்சமடைகிறார்.

சுக்கிரன் நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஐந்தாம் வீட்டில் ராகு லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் உங்களுக்கு நிறைய விரைய செலவுகள் ஏற்படும். ரொம்ப கவனமாக இருங்க. உங்களுக்கு சின்னச் சின்ன பிரச்சினைகள் இந்த மாதம் வரலாம்.

நீங்க இந்த மாதம் முற்பகுதியில் உங்க உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. நல்ல தசாபுத்திகள் நடந்தால் நீங்க தப்பிச்சீங்க அதே நேரம் உங்க தசாபுத்தி சரியில்லை என்றால் சில பிரச்சினைகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும். அதிசார குருவின் பார்வை உங்க ராசிக்கு நான்கு, ஆறு, எட்டாம் வீடுகளின் மீது விழுகிறது.

இதனால் உங்களுக்கு வங்கிக்கடன்கள் கிடைக்கலாம் ஆனால் கடன் கிடைக்கிறதே என்று வாங்கி போடாதீங்க. மாத பிற்பகுதியில் ஆயுள் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். இந்த மாதம் புதிய தொழில்கள் எல்லாம் வேண்டாம். பயணம் செய்ய வேண்டாம் பாதிப்புகள் வரலாம்.

மீனம்

மீனம் ராசிக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் உங்க ராசியில் இருக்கிறார் 14ஆம் தேதிக்கு மேல் சூரியன் இரண்டாம் வீட்டிற்கு போய் உச்சமடைகிறார். மூன்றாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். நான்காம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டில் கேது, லாப ஸ்தானத்தில் குரு, சனி, செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த மாதம் நிறைய சாதகங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்காக நீங்க நிறைய முதலீடுகள் பண்ணலாம். உங்களால் பிள்ளைகளுக்கு நன்மைகள் நடக்கும். நீங்க ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க. உங்க உடன் பிறந்தவர்கள் மூலம் நிறைய லாபம் கிடைக்கும்.

லாப ஸ்தானம் வலுவாக இருக்கிறது. செவ்வாய், சனி, குரு கூட்டணி நிறைய மாற்றங்களை தரப்போகிறது. புதிய வேலை கிடைக்கும்.

தொழிலில் லாபம் கிடைக்கும். உங்க தனாதிபதி செவ்வாய் உச்சம் பெறுவதால் பண வருமானம் வரும். நிறைய லாபம் வரும். வங்கியில் கடன் கிடைக்கும்.

திருமண பேச்சுவார்த்தைகள் மாத பிற்பகுதியில் தொடங்கலாம். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வீடு கட்ட வாஸ்து செய்யலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் பற்றி யோசிக்கலாம்.

நிறைய பாசிட்டிவ் எண்ணங்கள் உருவாகும். வீட்டில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். மாத பிற்பகுதியில் இரண்டாம் வீட்டில் உச்சம் பெற்று உள்ள சூரியன் உங்களுக்கு சாதகங்களை செய்வார்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் பேசும் போது கவனமாக பேசுங்க. மொத்தத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதமாக அமைந்துள்ளது.

loading...