குருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம்! திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்? அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்

Report
5973Shares

நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர்.

பிற கிரகங்களினால் எற்படும் தோஷங்களை குணப்படுத்துபவர் எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.

மார்ச் மாதத்தில் நிகழப்போகும் அதிசார வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நன்மைகள் ஏற்படப்போகிறது.

அந்த அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம். நவகிரகங்கள் ஒரு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது சில நேரங்களில் வேகமாக நகர்ந்து அடுத்த ராசிக்குச் செல்வதை அதிசாரம் என்று சொல்வார்கள்.

தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குருபகவான் மகரம் ராசிக்கு வேகமாக சென்று விடுவது அதிசாரம் எனப்படுகிறது. குரு பகவான் தற்போது தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து உள்ளார்.

குரு பகவான் அதிசாரமாக பங்குனி மாதம் 16ஆம் தேதி மார்ச் 29ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். பின்னர் மகரம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு ஜூலை மாதம் வக்ரமடைந்து பின்னோக்கி நகர்கிறார். செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி வரை குருவின் வக்ர காலம் நீடிக்கிறது.

இதே குரு பகவான் பின்னர் நேர் கதியில் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார். குருபகவான் அதிசாரம், வக்ரம் அடையும் போது ராசிகளுக்கு சில பலன்களைத் தருவார்.

வக்கிரம் பெற்ற கிரகங்கள் கெட்ட ஸ்தானங்களில் வக்கிரமானால் நற்பலன் களைத் தருவார்கள். சுப ஸ்தானங்களில் வக்கிரமானால் கெடுபலன்களைத் தருவார்கள்.

இந்த முறை குரு பகவான் தனது நீசபங்க நிலையில் இருந்து பார்வையை செலுத்துகிறார். பின்னர் வக்ரமடைகிறார். குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ராசிக்காரர்களுக்கு அபரிமிதான நன்மைகளும் அதிர்ஷ்டமும் ஏற்படப்போகிறது.

குரு பகவான் தனது சுபத்துவமான பார்வையால் திடீர் அதிர்ஷ்டசாலியாக மாற்றுவார். லாட்டரி மூலமும், பங்குச்சந்தை, புதையல் கிடைக்கச் செய்வதன் மூலம் சாதாரண நிலையில் இருக்கும் ஒருவரை கோடீஸ்வரராக மாற்றுவார். இந்த அதிசார குரு பெயர்ச்சியால் ஓராண்டு காலத்தில் நடக்கப்போகும் பலன்கள் ஒரு மாதத்தில் கிடைக்கும். குரு சஞ்சரிக்கும் மகரம் ராசிக்கும் குரு பார்வை படப்போகும் ரிஷபம், கடகம், கன்னி ராசிக்காரர்களும் கோடீஸ்வரர்களாக உயரப்போகிறார்கள்.
மகரம் - ஜென்ம குரு

பொதுவாகவே குரு நின்ற இடம் பாழ் என்பார்கள். ஆனால் குரு பகவான் இம்முறை மகரம் ராசியில் நீசம் பெற்று அமரப்போகிறார். ஆனால் கூடவே சனிபகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார் உச்சம் பெற்ற செவ்வாய் பகவான் சஞ்சரிப்பதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. உங்களுக்கு கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்கப் போகிறது. இந்த ராசியால் உங்களுக்கு புது வீடு கட்டும் யோகமும் அமையப்போகிறது. வெளிநாடு செல்லும் யோகம் வரும். நிறைய நன்மைகள் நேர்மறையான சம்பவங்கள் நடைபெறும்.

ரிஷபம் - புண்ணியம்

ரிஷபம் ராசிக்கு பாக்ய ஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் வீட்டில் குருபகவான் சஞ்சரிக்கப் போகிறார். குரு பகவானின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. ரிஷபம் ராசி ரிஷபம் லக்னகாரர்களுக்கு லாட்டரி, பங்குச்சந்தை மூலம் திடீர் யோகம் வரும் பணமழை பொழியப்போகிறது. குருவின் ஐந்தாம் பார்வை ரிஷபம் ராசியின் மீது விழுகிறது. நம்முடைய பாவ புண்ணியங்கள் பற்றி நம்முடைய ஐந்தாம் வீடு உணர்த்தும். பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யுங்கள். உச்சத்திற்கு செல்வீர்கள்.

கடகம் - யோகமான குரு பெயர்ச்சி

குரு பகவான் இப்போது அதிசாரமாக மகரம் ராசிக்கு சென்றாலும் அங்கே சனி பகவான் ஆட்சி பெற்று அமர்கிறார். அப்போது செவ்வாய் பகவானும் உச்சம் பெற்று மகரம் ராசியில் சஞ்சரிப்பார். குரு பகவானுக்கு நீச பங்க ராஜயோக அமைப்பு கிடைக்கிறது. கடகம் ராசி கடகம் லக்ன காரர்களுக்கு இந்த அதிசார குரு பெயர்ச்சியால் தோஷங்கள் எல்லாம் நீங்கும். கடகத்தில் குரு பகவான் உச்சமடைபவர். தான் உச்சமடையும் வீட்டினை குரு பார்வையிடுகிறார். குரு பகவானின் ஏழாம் பார்வை கடகம் ராசியின் மீது விழுகிறது. இந்த கடகம் ராசி கடக லக்ன காரர்கள் வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். இந்த ஒன்றரை மாத கால கட்டத்தில் பயணங்கள் அதிகம் செய்வீர்கள். வேலையில் புரமோசன் கிடைக்கும். வெளியூர்களில் நிலம் வீடு சொத்து வாங்கலாம்.

கன்னி - கஷ்டங்கள் தீரும்

குரு பகவானின் ஒன்பதாம் பார்வை கன்னி ராசிக்காரர்கள் கன்னி லக்னத்தின் மீது குருவின் பார்வை விழுகிறது. கடந்த சில ஆண்டு காலமாகவே கஷ்ட காலம்தான். இனி அந்த கஷ்டம் தீரப்போகிறது. திடீர் யோகம் வரப்போகிறது. ரொம்ப நல்ல காலம் வரப்போகிறது. வீடு நிலம் வாங்கலாம். குருவின் ஒன்பதாம் பார்வை சிறப்பு. பாக்ய ஸ்தானம். நிறைய நன்மைகள் தரக்கூடிய வீடு. நாம் முற்பிறவியில் செய்த நன்மைகள் நம்மை தேடி வரும். கன்னி ராசிக்காரர்களுக்கு ஒன்றரை மாதம் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது.

206327 total views
loading...