ஜென்ம சனி குறி வைத்திருக்கும் இந்த ராசிக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப் போகுது? புதன் வக்ரமடைவதால் யாருக்கு ஆபத்து தெரியுமா?

Report
736Shares

மாசி மாதம் கும்ப மாதம். சூரியன் பெயர்ச்சியை வைத்து தமிழ் மாத ராசி பலன்கள் கணிக்கப்படுகிறது. மாத கிரகங்களின் பெயர்ச்சியும் சில நன்மைகளை தரும். மாசி 1ஆம் தேதி இன்று முதல் விஷ்ணுபதி புண்ணியகாலம் ஆரம்பமாகிறது.

மகாவிஷ்ணு ஆலயங்களுக்கு சென்று வணங்கலாம். உங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். மாசி மாதத்தில் தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மைகள் நடைபெறும் கல்யாணம் கை கூடி வருமா யாருக்கு ஜாக்பாட் மூலம் திடீர் பண வரவு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மாசி மாதம் சூரியன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் சுக்கிரன் மீனத்தில் உச்சமடைந்துள்ளார். சனி மகரத்திலும் மிதுனத்தில் ராகு, செவ்வாய், கேது, குரு தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் புதன் சஞ்சரிக்கிறார்.

கிரகங்களின் ராசி மாற்றம் இந்த மாதம் உள்ளது. சுக்கிரன்16ஆம் தேதி மேஷம் ராசிக்கு மாறுகிறார். மாசி 27ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றத்தின்படி தனுசு, மகர ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசியில் குரு, கேது, செவ்வாய், இரண்டாம் வீட்டில் சனி, மூன்றாம் வீட்டில் சூரியன் புதன், நான்காம் வீட்டில் சுக்கிரன் உச்சம், ஏழாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சாரிக்கின்றன.

ராசிக்கு மூன்றாம் வீட்டில் உள்ள சூரியனால் முயற்சிகள் வெற்றிமடையும். புதன் வக்ரமடைவதால் செய்யும் தொழிலில் கவனமாக இருங்க.

முக்கிய முடிவுகளை எடுக்காதீங்க. புதிய விசயங்களை ஆரம்பிக்க வேண்டாம். சொத்து பிரச்சினைகள் தீரும். கவுரவக்குறைச்சலான விசயங்கள் ஏற்படும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ரொம்ப நல்லதாக நடக்கும். பல நல்ல விசயங்கள் தானாக நடக்கும்.

கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு வருமானம் கொட்டும். அரசு வேலை, அரசியலில் இருப்பவர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாவும் இருங்க. இல்லத்தரசிகளுக்கு நன்மைகள் நடக்கும்.

குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டைகள் நடக்கும். விட்டுக்கொடுத்து போங்க அன்பால சாதிக்க முடியாத விசயம் எதுவும் இல்லைங்க.

வேலைக்கு போறவங்களுக்கு புரமோசன் கிடைக்கும். சிங்கிளாக இருக்கும் இளைய தலைமுறையினருக்கு காதல் வரலாம். காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரலாம். புதிய சொந்தங்கள் தேடி வரலாம்.

மாணவர்கள் அற்புதமாக படிப்பீங்க. தேர்வுகளை அற்புதமாக எதிர்கொள்வீங்க. நல்லா படிங்க படித்தது எல்லாம் நினைவுக்கு வரும். பட்டப்படிப்பு, மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு காம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்கும்.

வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருங்க. இந்த மாதம் பங்குச்சந்தைகளில் முதலீடு எதுவும் செய்யாதீங்க. சனி பிரதோச வழிபாடு பண்ணுங்க நல்லது நடக்கும். சனிக்கிழமை சனிபகவானை வணங்கி எள் எண்ணெய் தீபம் ஏற்றுங்கள், ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு சாற்றுங்கள்.

மகர ராசி

மாசி மாதம் மகரம் ராசிக்காரர்களுக்கு அற்புதம் ஆக இருக்கும். கடந்த சில மாதங்களாக இருந்த சிக்கல்கள் தீரும். பணவரவு அற்புதமாக இருக்கும்.

இரண்டாம் வீட்டிற்கு சூரியன் சென்று புதனோடு சேருகிறார். மூன்றாம் வீட்டில் சுக்கிரன் உச்சமடைந்திருக்கிறார். அவரே மாத பிற்பகுதியில் நான்காம் வீட்டிற்கு போகிறார்.

உற்சாகமான மாதமாக அமையும். ஆறாம் வீட்டில் ராகு அள்ளித்தரப்போகிறார். விரைய ஸ்தானத்தில் குரு, செவ்வாய், கேது, ஜென்ம ராசியில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். சூரியன் இரண்டாம் வீட்டில் இருப்பதால் சுப காரியங்கள் தானாக நடக்கும்.

சுக ஸ்தானத்தில் அமரும் சுக்கிரனால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வண்டி வாகனங்கள் வாங்க வேண்டிய யோகம் வரப்போகிறது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு யோகங்கள் தேடி வரும்.

புதிய தொழில் தொடங்குவீர்கள். விஐபிக்கள் நட்பு கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு ஏறுமுகமாக அமையும்.

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்படும். மனக்கஷ்டங்கள் சிக்கல்கள் எல்லாம் நீங்கும் காலம் வந்து விட்டது.

அப்பா வீட்டு வழியே நல்ல செய்திகள் தேடி வரும். மூத்த சகோதரர்கள் வீட்டில் விருந்து விஷேசங்கள் நடைபெறும். சொந்த பந்தங்களுடன் கூடி விருந்துகளில் பங்கேற்பீர்கள்.

விரைய குருவாக இருந்தாலும் விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். ஏழரை சனி ஜென்ம சனி என்று கவலை வேண்டாம் ஆட்சி பெற்ற சனியால் அற்புதங்கள் நிகழப்போகிறது. தடைகள் விலகும் ஜாக்பாட் அடிக்கப் போகிறது. சனிக்கிழமைகளில் பிரதோஷ நாளில் சனிபகவானை வணங்குங்கள் நிறைய நல்லது நடக்கும்.

loading...