மேஷம் முதல் கடகம் வரை!.. மாசி மாத ராசிபலன்கள்

Report
331Shares
மேஷம்

தனது வீர தீர செயல்களால் அனைவரையும் எளிதில் கவரும் மேஷ ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு 9 ல் குரு, கேதுவுடன் சஞ்சரிப்பதால் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து இணக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக செல்ல நினைத்த புனித யாத்திரைக்கு சென்று வருவீர்கள்.

உங்கள் வாழ்வில் இருந்த தடைகள் எல்லாம் நீங்கி சுபிட்சம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலும் குடும்பத்தேவைக்காக சுபச்செலவுகள் அதிகரிக்கும். உங்கள் பேச்சால் அனைவரையும் வசீகரிப்பீர்கள்.

மனதில் தைரியம், உற்சாகம் அதிகரித்து எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் ஏற்படும். வீடு மற்றும் வாகன விஷயங்களில் கவனம் தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் செயல்களால் நீங்கள் பெருமை படக்கூடிய சூழல் உருவாகும்.

பங்கு சந்தையில் லாபம் பெருகும். பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். குல தெய்வ அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் உங்கள் உழைப்புக்கான மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்கள் தனித்திறமை வெளிப்படும்.

கணவன், மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிலும் சிறிது கவனமுடன் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளால் பிரச்னை வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். எப்படியிருந்தாலும் எதிலும் வெற்றிநடை போடக்கூடிய காலமாகும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: பிப்ரவரி 13, 20, 21, 22, 23, 24, 25. மார்ச் 10, 11, 12.

சந்திராஷ்டம நாட்கள்: பிப்ரவரி 15, 16, 17.

பரிகாரம்: திருத்தணிகை முருகப்பெருமானை செவ்வாய்க் கிழமை சென்று வழிபடுவது நன்மை தரும்.

ரிஷபம்

அன்பால் அனைவரையும் கவரும் கருணை உள்ளம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11 ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பது யோகமான அமைப்பு ஆகும். உங்கள் வாழ்வில் இருந்த பிரச்னைகள், தடைகள் அனைத்திலிருந்தும் வெளிவரும் காலம் ஆகும்.

உங்கள் எண்ணங்கள் மற்றும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறும் காலம் ஆகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நிலையில் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்படும்.

சகோதர, சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தாய் மற்றும் உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய சொத்து வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக அமையும். தெய்வ அனுகூலம் உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வான காலம். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் படிப்படியாக குறைந்து நன்மை ஏற்படும். அலுவலக சூழ்நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இதுவரை இருந்த எதிரிகள் விலகி செல்வார்கள்.

கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. இருப்பினும் எந்த விஷயத்திலும் அதிக நம்பிக்கையுடன் செயல்படுவதை தவிர்க்கவும். அஷ்டமத்தில் குரு சஞ்சாரம் இருப்பதால் எதிலும் பொறுமை தேவை. தந்தை உடல் நிலையில் சிறு பாதிப்பு வந்து நீங்கும்.

வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: பிப்ரவரி 14, 15, மார்ச் 23, 24, 25, 26, 27.

சந்திராஷ்டம நாட்கள்: பிப்ரவரி 18, 19, 20.

பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

மிதுனம்

உயர்ந்தவர்,தாழ்ந்தவர் என்று பாராமல் எல்லோரிடமும்சமமாக நட்பு பாராட்டும் மிதுனராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன்புதன் பகவான் உங்கள் ராசிக்கு9 ல் சஞ்சரிப்பதால் நன்மையாக இருந்தாலும், புதன் வக்கிரம் பெறுவதால்எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் எதிலும் வெற்றி பெறஇயலும்.

தந்தையால் அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடி வரும். உங்கள்பேச்சில் இனிமை அதிகரிக்கும். குடும்பத்தில்மகிழ்ச்சி பொங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம்உண்டு.

உங்கள் முயற்சிகளுக்கு தேவையானஉதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தாய்மற்றும் உறவினர்கள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாகஇருப்பார்கள். வீடு, வாகனங்களை சீர்செய்வீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை ஏற்படும். மனதிற்குஇதமான செய்திகள் வந்து சேரும். குழந்தைகளால்மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்கள்சாதகமாக முடியும். காதல் விஷயங்கள் வெற்றிகரமாகமுடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம்.

கணவன், மனைவிக்கிடையேகருத்து வேறுபாடு வந்து நீங்கும். தம்பதிகள்ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில்கூட்டாளிகளிடம் கவனம் தேவை. கூட்டாளிகளைத்தவிர்த்து தனியே வியாபார விஷயங்களைகையாள்வது நல்லது. தற்போது உங்களுக்கு அஷ்டமச்சனி ஆரம்பித்திருந்தாலும், குரு தற்போது 7 ல்சஞ்சரிப்பதால் பெரிய பாதிப்புக்கள் ஏற்படவாய்ப்பில்லையென்றாலும், எதிலும் கவனமுடன் செயல்படுங்கள்.

யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாரையும்பகைத்துக் கொள்ள வேண்டாம். பொறுமை,நிதானம் அவசியம். வாகனப் பயணங்களில் கவனம்தேவை. தற்போது உத்தியோகத்தில் அமைதிநிலவும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

அதிர்ஷ்டமானநாட்கள்: பிப்ரவரி 14, 15, 25, 26, 27,28, 29. மார்ச் 1.

சந்திராஷ்டமநாட்கள்: பிப்ரவரி 20, 21, 22.

பரிகாரம்:ஆம்பூரில் உள்ள பெரிய ஆஞ்சநேயரைபுதன்கிழமையில் சென்று வழிபடுவது நன்மைதரும்.

கடகம்

தன் உழைப்பாலும், விடாமுயற்சியாலும் வாழ்வில் உன்னத நிலை அடையும்கடக ராசி அன்பர்களே, உங்கள்ராசிநாதன் சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றில்சஞ்சரிப்பது உங்களுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகப்படுத்தும். விடாமுயற்சியால் வெற்றி பெறக்கூடிய காலமாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதார தேவைக்காக கடன் வாங்கும் சூழல்ஏற்படலாம். நீண்ட நாட்களாக முயற்சித்தவங்கிக் கடன் தற்போது கிடைக்கும்.தாயால் அனுகூலம் உண்டு. தாயுடன் உங்கள்உறவு பலப்படும்.

உறவினர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். குழந்தைகள்உடல் நிலையில் கவனம் தேவை. பங்குசந்தைவிஷயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம்மேம்படும்.

இருப்பினும் இடுப்பு, முதுகுத் தண்டு விஷயங்களில் ஏதேனும்பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. தற்போது உங்களுக்குகண்டகச்சனி தொடங்கியிருப்பதால் தம்பதிகளுக்குள் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்துச் செல்வதுநல்லது.

குடும்ப பிரச்னைகளில் வெளியாட்களின்தலையீட்டைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள் கூட்டாளிகளைகண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது. புதியமுதலீடுகளை தவிர்க்கவும். குடும்ப விஷயங்களில் அதிககவனம் செலுத்துங்கள்.

யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எதிர்மறைஎண்ணங்களை தவிர்த்து நேர்மறையாக சிந்தியுங்கள். எதிலும், பொறுமை, நிதானம் அவசியம். சில நேரங்களில் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். தந்தையுடன் சிறு கருத்து வேறுபாடுகள்வந்தாலும், தந்தையால் அனுகூலம் உண்டு. தொழில் மற்றும்உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். பிரபலங்களின்அறிமுகமும், நட்பும் கிடைக்கும். அவர்களால்ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்டமானநாட்கள்: பிப்ரவரி 18, 19, 20, 28, 29 மார்ச்01, 02, 03.

சந்திராஷ்டமநாட்கள்: பிப்ரவரி 23, 24, 25.

பரிகாரம்: ஓசூரில் உள்ள சந்திரசூடேஷ்வரரை திங்கட்கிழமையில் சென்று வழிபடுவது நன்மைதரும்.

loading...