சனி சாந்தி யாகம் செய்ய வேண்டிய ஐந்து ராசிக்காரர்கள் யார்? விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா?

Report
355Shares

ஜோதிட சாஸ்திரத்தில் நீதிமான், தர்மவான் என்று போற்றப்படுகிறார் சனீஸ்வரர். ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், மந்திரி, தொழிலதிபர், பிச்சை எடுப்போர் என எந்த பாகுபாடும் இவருக்கு கிடையாது.

இவரை பொருத்தவரை எல்லோரும் சமம். அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களை வழங்கி வருகிறார். வாரி வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே. அதேபோல் கஷ்ட, நஷ்டங்களை கொடுப்பதிலும் தயவு தாட்சண்யமின்றி செயல்படுவார்.

அதனால்தான் சனியை போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்று கூறுவார்கள்.சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார்.

ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பார்.

சனியின் சஞ்சாரம், பார்வையால் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலன்களையும், லாபங்களையும், வளர்ச்சியும் ராஜயோகத்தையும் பெறப்போகின்றனர்.

அதே நேரத்தில் தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியும், துலாம் ராசிக்கு அர்தாஷ்டம சனியும் நடைபெறப்போகிறது. மிதுனம் ராசிக்கு அஷ்டம சனியும், கடகம் ராசிக்கு கண்டச்சனி காலமும் தொடங்கப்போகிறது. இவர்கள் மனமுறுகி சனிபகவானை வனங்கினால் நல்லதே நடக்கும்.

இதேவேளை, இன்றைய நாளின் முழு பலன்களையும் ஜோதிடம் மூலம் அறிந்து கொண்டு செயற்படலாம். அப்படி முழுவிபரங்களையும் அறிய இந்த காணொளிகளை பார்க்கவும்.


14323 total views