விட்டு விலகிய ஏழரை சனி! சூரிய பெயர்ச்சியால் பெப்ரவரி மாதம் முழுவது இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்? யாருக்கு ஆபத்து?

Report
418Shares

சூரியன் சஞ்சாரம் பெப்ரவரி மாதத்தில் தை மாதத்திலும் மாசி மாதத்திலும் உள்ளது.

பெப்ரவரி மாதம் தை மாதம் 12 நாட்களும் மாசி மாதம் 17 நாட்களும் என மொத்தம் 29 நாட்களும் இணைந்துள்ளது.

இது லீப் ஆண்டு. சூரியன் மகரத்திலும் கும்பத்திலும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் சிம்மம் முதல் விருச்சிகம் வரை நான்கு ராசிக்காரர்களின் குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கும் என ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான மாதம் உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பஞ்சம ஸ்தானம் வலுத்துள்ளது. சிவ அம்சம் பொருந்திய மாதம். சிவனை வணங்குங்க நல்லதே நடக்கும். ராசி அதிபதி சூரியன் ஆறாம் வீட்டில் சனியோடு சேர்ந்திருக்கிறார்.

சின்னச் சின்ன உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டிற்கு சென்று புதனோடு இணைகிறார்.

உடல் நலக்கோளாறுகள் சரியாகும். பணவருமானம் அற்புதமாக இருக்கும். அரசுத்துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல மாதம் வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் நன்மைகள் நடைபெறும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு பிரச்சினைகள் நிவர்த்தியாகும். சேமிப்புகள் பெருகும். உடல் ஆரோக்கியம் சரியாகும். எட்டில் சுக்கிரன் இருப்பதால் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

பெண்கள் பாதுகாப்பில் கவனம். பங்குச்சந்தை, ரேஸ் என எந்த அதிர்ஷ்டத்தையும் நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். கணவன் மனைவி உறவில் சில சண்டை சச்சரவுகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து போங்க சரியாகிவிடும். பிரச்சினைகளை பெரிதாக்க வேண்டாம். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

செவ்வாய் 5 ஆம் வீட்டில் இருப்பதால் புத்திரபாக்கியம் தீரும். எதிரிகள் தொல்லை தீரும். செல்வ வளம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் வரும் வெளிநாட்டு வாய்ப்பும் தேடி வரும். பிசினஸ்ல லாபம் கிடைக்கும். மருத்துவ செலவுகள், வண்டி வாகன செலவுகளை தவிர்க்க மாதம் முழுவதும் விநாயகரை வணங்க எல்லாம் நன்மையாக முடியும். குல தெய்வ வழிபாடு குறைவில்லாத வாழ்க்கையே தேடி வரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நான்காம் வீட்டில் குரு,கேது ஐந்தாம் வீட்டில் சனி, சூரியன், சுக்கிரன் ஏழாம் வீட்டிலும் பத்தாம் வீட்டில் ராகுவும் சஞ்சரிக்கின்றனர்.

நான்காம் வீட்டில் உள்ள குருவின் பார்வை உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை தேடித்தரும். முயற்சிகள் நல்ல பலனை தரும். மாத தொடக்கத்தில் சந்திராஷ்டமம் இருந்தாலும் மாதம் முழுவதும் உற்சாகத்தை தரும்.

அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நான்காம் வீட்டில் குரு கேது சேர்க்கை இருப்பதால் உங்க உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தை கவனமாக இயக்குங்க.

தேவையான கடன் உதவிகள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். மனைவி உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள். உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி முடிந்து விட்டது.

ஐந்தாம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால் பித்ரு காரியங்கள் செய்ய மறந்து விட வேண்டாம். வியாபாரிகளுக்கு கடன் கிடைக்கும். பெண்களின் பாதுகாப்பில் கவனமாக இருக்கும். பிள்ளைகளுக்கு முன்னேற்றகரமான காலகட்டம். சிறு சிறு பயணங்கள் செல்வீர்கள் பயணங்கள் செல்லும் போது விழிப்புணர்வு தேவை.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் ரொம்ப நல்ல மாதம், கிரகங்களின் சஞ்சாரம் அதிர்ஷ்டத்தை தேடித்தரும். குரு கேது, செவ்வாய் இணைந்து மூன்றாவது இணைந்திருப்பது சிறப்பு.

சூரியன்,புதன் சேர்க்கை நான்காம் வீட்டிலும் ஐந்தாம் வீட்டிலும் இணைகிறது. ஆறாம் வீட்டில் சுக்கிரன் உங்க ராசி அதிபதி உச்சம் பெற்றிருக்கிறார்.

நிறைய சாதனைகள் செய்வீர்கள். படிக்கும் மாணவர்கள் மனக்குழப்பத்தையும் பயத்தையும் விட்டு விடுங்கள். மாணவர்கள் நிர்வாகத்திற்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் எதையாவது கூறி மாட்டிக்கொள்ளாதீர்கள்.

படித்து முடித்து விட்டு வேலை செய்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். ஒன்பதாம் வீட்டில் ராகு நான்காம் வீட்டில் சனி சூரியன் இருப்பதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

உங்களின் முயற்சிக்கு வெற்றிகள் கிடைக்கும் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டகரமானமாதமாக இருப்பதால் வெளிநாட்டு வேலை வாய்ப்பும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மாத பிற்பகுதியில் சூரியன், புதன் இணைந்து ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். போட்டி பந்தையங்களில் வெற்றி கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றிகள் தேடி வரும். செல்ல வளம் தரும் மாதம். மாணவர்கள் துர்க்கை வழிபாட்டினை தவறாது பண்ணுங்க தடைகளை தாண்டி முன்னேற்றம் ஏற்படும். மாற்றங்களும் ஏற்றங்களும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

விருச்சிகம்

ஏழரை சனி காலம் முடிந்து விட்டது. கெட்டது விலகிவிட்டது இனி எல்லாம் சுகம்தான். சனிபகவான் மூன்றாவது வீட்டில் சூரியனோடு இணைந்திருக்கிறார். மாத பிற்பகுதியில் சூரியன் பெயர்ச்சி ஆகி விடுவார்.

உங்க ராசிக்கு அதிபதி செவ்வாய் இரண்டாம் வீட்டில் குரு கேது உடன் இணைந்திருப்பது சிறப்பு. மகாலட்சுமி யோகம் தரப் போகிறது. ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்றிருக்கிறார்.

ராசி நாதன் இரண்டாம் வீட்டில் இருப்பதால் ரொம்ப கோபப்படாதீங்க. பேச்சில் கோபத்தை குறைங்க. உடல் ஆரோக்கிய பிரச்சினை இருப்பவர்கள் கவனமாக இருங்க. 12ஆம் தேதிக்கு மேல் மாணவர்களுக்கு தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.

போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தினால் காதல் மலரும், மனதிற்கு பிடித்த வரன் அமையும் யோகம் தேடி வருகிறது.

வயிற்றில் பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும் கவனமாக இருங்க. உங்க ராசிநாதன் பார்வை மீனம் ராசியில் உள்ள சுக்கிரன் மீது விழுகிறது. முகத்தில் தேஜஸ் கிடைக்கும். பிசினஸ்ல நல்ல முன்னேற்றம் ஏற்படும் மாதம்.

வியாபாரத்தில் போட்ட முதலீடுகள் இரண்டு மடங்காக திரும்ப வரும் இதுநாள் வரை பட்ட பாட்டிற்கு பலன் கிடைக்கப்போகிறது அதே சந்தோஷத்தோடு பெப்ரவரி மாதத்தை கொண்டாடுங்கள்.