இன்று சனிப்பெயர்ச்சி... சிம்ம ராசிக்கு விபரீத ராஜயோகம்! யாருக்கு ஆபத்து தெரியுமா?

Report
499Shares

திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி 24ஆம் திகதியான இன்று நிகழப்போகிறது.

மகரம் ராசி சனிபகவானின் சொந்த வீடு இந்த இடப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை.

இந்த சனிப்பெயர்ச்சியால் மிதுனம் ராசிக்கு அஷ்டமத்து சனி, கடகம் ராசிக்கு கண்டச்சனி, சிம்ம ராசிக்கு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சனிபகவான் அமரப்போகிறார்.

இந்த ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி யோகங்கள் நிறைந்த கால கட்டமாக அமையப்போகிறது.

சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள் உண்டு இந்த சஞ்சாரம் மற்றும் பார்வைகளால் மிதுனம், கடகம், சிம்மம் ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்ன பரிகாரம் என்று பார்க்கலாம்.

மிதுன ராசிக்காரர்கள்

சனிபகவான் கடந்த 30 மாதங்களாக 7ஆம் இடத்தில் கண்ட சனியாக உங்களை வாட்டி வதைத்து ஒரு வழி பண்ணிவிட்டார் என்றாலும் ஒரு சில நன்மைகளும் இல்லாமல் இல்லை.

இனி அவர் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது சற்று சுமாரான பலன் களையே அளிப்பார் என்று கூற வேண்டும்.

கடந்த 30 மாதங்களாக கஷ்டப்பட்டு, அல்லல்பட்டு ஓருவழியாக மீண்டு வரலாம் என்று நினைத்திருப்பீர்கள். அடுத்த 30 மாதத்திற்கு மிகப்பெரிய மாற்றமாக அஷ்டமத்து சனி ஆரம்பிக்கிறது.

வருமானம் அதிகரிக்கும் கவலை வேண்டாம் பணவரவு அதிகமாக இருக்கும் காரணம் சனி பகவான் தனது ஏழாவது பார்வையால் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன, குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார்.

இதுவரை வராமல் தடையாக இருந்த பென்ஷன், பி.எப், கிராஜூவிட்டி போன்ற விஷயங்கள் தடையின்றி வந்து சேரும்.

சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். கூட்டுத்தொழிலில் வெற்றி உங்களது ராசிக்கு 8ம் இடத்தில் அமரும் சனிபகவான் ராசிக்கு 10ஆம் இடத்தை சனிபகவான் பார்க்கிறார்.

தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஓரளவு வந்து சேரும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகள் நன்மை அடைவர். பங்கு சந்தையில் அதிக கவனம் தேவை. சுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும்.

கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளுக்குள் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். பாஸ்போர்ட் விசா போன்ற விஷயங்களில் தடையேற்பட்டாலும் அதனால் நன்மையேயாகும்.

வேலையை விட வேண்டாம் அரசாங்க வேலையில் இருப்பவர்கள் வேலையில் கவனம் தேவை. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. எதிலும் நிதானமாக கையாளுதல் வேண்டும். உயரதிகாரிகளால் தண்டிக்கப்படுவீர்கள் எச்சரிக்கை.

சனிபகவானின் பார்வை உங்க ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது விழுகிறது. இதுநாள் வரை குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு தடைகள் ஏற்பட்டு பின் சுபகாரியம் நடக்கும்.

சிலருக்கு குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சனைகளும் அவர்களால் தேவையற்ற குழப்பங்களும் வரும். டீன் ஏஜ் பிள்ளைகள் தடம்மாற வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக கண்காணியுங்கள்.

அஷ்டமத்து சனி காலத்தில் பெண்கள் எதையும் பொறுமையாக கையாளுங்கள். அடுப்பங்கரையில் கவனமாக இருங்கள். நெருப்பு காயங்கள் ஏற்படும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

லேசான உடல் நலப்பிரச்சினைகளையும் கண்காணித்து மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

கடக ராசிக்காரர்கள்

சனியானவர் உங்களது ராசிக்கு 7 மற்றும் 8ம் வீட்டிற்கு அதிபதி அவர் 7ஆம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது சற்று சுமார் ஆனாலும் கடகம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்காது.

சனிபகவான் உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசிக்கு 4ஆம் இடம், 9ஆம் இடம், மற்றும் உங்கள் ராசியை பார்வையிடுகிறார்.

சனிபகவான் தனது ஏழாவது பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். செயல்களில் சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் காரணமாக அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

உங்களுக்கு பிரச்சனைகள் வரும் பொழுதெல்லாம் கடவுள் அந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பார். இந்த கால கட்டத்தில் உங்க உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.

தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். தண்ணீர் அதிகம் குடிக்கவும். இந்த இடப்பெயர்ச்சியால் உங்கள் பெற்றோர்களுக்கும் பாதிப்பு வரலாம். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை.தாயரால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். அம்மாவின் அன்பும் ஆசியும் கிட்டும்.

சிம்ம ராசிக்காரர்கள்

சிம்ம ராசிக்காரர்கள் இதுவரை இதுவரை போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து வந்தீர்கள். இனி வெற்றிக்கனியை ருசிக்கப் போகிறீர்கள்.

சோதனைகளை தாங்கிக் கொண்டு வைரம் பாய்ந்த மனதுடையவராக மாறியிருக்கிறீர்கள். இனி தொட்டதெல்லாம் ஜெயமே. தடைபட்ட காரியங்கள் எளிதில் கைகூடும். நண்பர்களால் எதிர்பார்த்த அளவு அன்பும் ஆதரவும் கிடைக்கும். வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும்.

விசா, பாஸ்போர்ட் எளிதாக வந்து சேரும். இதுநாள்வரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலை அமையும். வேலைக்கு ஏற்ற சம்பளமும் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்கும்.

காதல் கணிந்து திருமணத்தில் முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். உங்களது உழைப்ப்பு மற்றவர்களுக்கு லாபகரமாக அமையும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும்.

உணவு விசயத்தில் கவனமாக இருக்கவும். எட்டாம் வீட்டை சனி பார்வையிடுவதால் போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை. எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருங்க நிதானமும் தேவை. மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லூரிகளில் வேலை கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார்.

loading...