சுக்கிரனால் அடிக்கும் அதிர்ஷ்டம்... இந்த வாரத்தில் ராஜயோகம் எந்த ராசிக்கு தெரியுமா?

Report
182Shares
மேஷம்:

சூரியன், புதன், குரு, சுக்கிரன், ராகு அனுகூல அமர்வில் உள்ளனர். மனதில் உத்வேகமும், செயல்களில் வசீகரமும் ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டாகும்.

பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பண சேமிப்பிலும் ஈடுபடுவீர்கள். எதிரியால் இருந்த தொந்தரவு விலகும். உறவினர்களின் ஆலோசனை மிகுந்த பயனளிக்கும். மனைவியின் அன்பு, பாசம் மனதிற்கு மகிழ்ச்சி தரும். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவால் தொழில், வியாபாரம் கூடுதல் வளர்ச்சி பெறும். பணியாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற நற்பெயரும், சலுகையும் கிடைக்கும். பெண்கள் தாராள பணவரவால் புத்தாடை, நகை வாங்கி மகிழ்வர். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.

சந்திராஷ்டமம் : 19.1.2020 இரவு 8:48 மணி - 21.1.2020 நள்ளிரவு 1:30 மணி

பரிகாரம் : சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.

ரிஷபம்:

சந்திரனால் நன்மை கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடுவது நன்மை தரும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை தேவை.

பிள்ளைகளின் ஆர்வம் மிகுந்த செயல் நிறைவேற உதவுவீர்கள். அலைச்சல் தரும் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிரியிடம் இருந்து விலகுவதால் சிரமத்திலிருந்து விடுபடலாம். மனைவியின் உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்கவும். பணியாளர்கள் பணியிடச்சூழல் அறிந்து திறமையாக செயல்படவும். பெண்கள் சிக்கனத்தை பின்பற்றுவர். மாணவர்கள் படிப்பில் கவனமுடன் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்.

சந்திராஷ்டமம் : 21.1.2020 நள்ளிரவு 1:31 மணி - 24.1.2020 காலை 8:28 மணி

பரிகாரம் : மீனாட்சி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

மிதுனம்:

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சந்திரன் நற்பலன் தருவர். செயல்களை மிகவும் நேர்த்தியுடன் செய்வீர்கள். உடன் பிறந்தவருக்கு சரியான நேரத்தில் உதவுவீர்கள்.

வாகனப் பயணம் இனிமையாக அமையும். பூர்வ சொத்தில் பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால தேவைகளை பூரத்தி செய்வீர்கள். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் வசூலாகும். மனைவி கருத்து இணக்கமுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து வளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் எளிதில் பணி இலக்கை நிறைவேற்றி புதிய சாதனையை படைப்பீர்கள். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளையும் ஆர்வமுடன் பயில்வர்.

சந்திராஷ்டமம் : 24.1.2020 காலை 8:29 மணி - 25.1.2020 நாள் முழுவதும்

பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

கடகம்:

சுக்கிரன், கேது, சனீஸ்வரர், சந்திரன் அனுகூல பலன் வழங்குவர். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் கடின உழைப்பால் சிறப்பாக நிறைவேறும். நற்பெயரும், புகழும் தேடி வரும்.

வாகன பயன்பாடு அளவுடன் இருக்கும். பிள்ளைகளின் அபார அறிவாற்றலால் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். வழக்கு, விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். மனைவியின் ஆலோசனை மனதிற்கு நம்பிக்கையை அளிக்கும். தொழில், வியாபார முன்னேற்றத்தால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் கூடுதல் தொழில் நுட்பாத்தை அறிந்து கொள்வர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர். மாணவர்கள் நன்கு படித்து பாராட்டு, பரிசு பெறுவர்.

பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

சிம்மம்:

சூரியன், ராகு, புதன், குரு அதிக அளவில் நற்பலன் தருவர். செயல்களில் இருந்த குளறுபடி சரியாகும். இஷ்ட தெய்வ வழிபாடு கூடுதல் நன்மையை தரும்.

குடும்பத்தில் உள்ள ஒற்றுமையை காத்திடுவீர்கள். வீடு, வாகன பாதுகாப்பில் கவனம் தேவை. பிள்ளைகள் பெற்றோரின் சொல்லை மதித்து செயல்படுவர். நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் செயல்களில் சிறு குளறுபடிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வது நன்மையை அளிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் மதித்து செயல்படவும். பெண்கள் நகையை இரவலாக கொடுக்காமல் இருப்பது நல்லது. மாணவர்கள் முயற்சியுடன் படித்தால் முன்னேற்றம் காணலாம்.

பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

கன்னி:

செவ்வாய், சந்திரனால் நன்மை கிடைக்கும். மனதில் தயக்கம் விலகி தைரியம் வளரும். பணிகளை அக்கறையுடன் நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் மனக்குழப்பத்தை போக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்துவீர்கள்.

பூர்வீக சொத்தை பராமரிப்பதில் நம்பகமானவர்களை பணியமர்த்தினால் நன்மை தரும். மாறுபட்ட கருத்து உடையவரிடம் இருந்து விலகுவது நல்லது. மனைவியின் ஆர்வமிகு செயல் குளறுபடி ஏற்பட வாயப்புள்ளது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சீரான அளவில் இருக்கும். பணியாளர்கள் பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டுப் பெறுவர். மாணவர்கள் படிப்பில் புதிய முயற்சியை மேற்கொள்வர்.

பரிகாரம் : பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

துலாம்:

புதன், சுக்கிரன், கேது, சனீஸ்வரர், சந்திரன் தாராள நற்பலன் தருவர். திட்டமிட்ட செயல்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.

மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. பிள்ளைகள் படிப்பு, செயல் திறனில் முன்னேற்றம் காண்பர். குடும்பத் தேவை பெருமளவில் பூர்த்தியாகும். உங்களின் நல்ல குணத்தை மனைவி பாராட்டுவார். தொழில், வியாபாரம் செழித்து புதிய சாதனை ஏற்படும். பணியாளர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும். வெளியூர் பயணத்தால் புதிய அனுபவம் உண்டாகும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம் : சிவன் வழிபாடு நல்வாழ்வு தரும்.

விருச்சிகம்:

குரு, சுக்கிரன், சூரியன், சந்திரனால் அனுகூல பலன் ஏற்படும். பேச்சில் உண்மை, சத்தியம் நிறைந்திருக்கும். விலகிய உறவினர்கள் விரும்பி சொந்தம் பாராட்டுவர்.

வாகன பயன்பாடு அளவுடன் இருக்கும். பிள்ளைகள் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வர். ஒவ்வாத உணவினை தவிர்ப்பது நன்மை தரும். நண்பருடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு வரும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பு பெறுவர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பருக்கும் உதவுவர்.

பரிகாரம் : ராமர் வழிபாடு வெற்றிக்கு வழி தரும்.

தனுசு:

சந்திரன், சுக்கிரன் நற்பலன் தருவர். எந்தவொரு செயலிலும் சாதுர்யத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். நண்பர்களுக்கு மனப்பூர்வமாக உதவுவீர்கள்.

குடும்பத்திற்கான தேவை அதிகரிக்கும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணப் பரிவர்த்தனையில் தகுந்த பாதுகாப்பை பின்பற்றினால் நன்மை அளிக்கும். இஷ்ட தெய்வ அருள் கிடைக்கும். மனைவி கருத்திணக்கமுடன் நடந்து கொள்வார். வீட்டில் ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீரான அளவில் இருக்கும். பணியாளர்கள் அதிக நிபந்தனையுடன் கடன் பெறாமல் இருப்பது நல்லது. பெண்கள் சிக்கனத்தை பின்பற்றவும். மாணவர்கள் படிப்பில் புதிய பயிற்சியை மேற்கொள்வர்.

பரிகாரம் : முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

மகரம்:

செவ்வாய், சுக்கிரன், ராகு, சந்திரனால் யோகம் உண்டாகும். பணிகளில் மனப் பூர்வமாக ஈடுபடுவீர்கள்.

புதியவர்களின் நட்பு கிடைக்கும். தாய் வழி சார்ந்த சொத்து, பூர்வ புண்ணிய பலன் கிடைக்கும். பிள்ளைகளின் செயல் வியப்பு, மகிழ்ச்சி தரும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். வழக்கு, விவகாரத்தில் சமரச தீர்வு கிடைக்கும். மனைவியின் அன்பு, பாசம் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.

சந்திராஷ்டமம் : 13.1.2020 பகல் 12:46 மணி - 15.1.2020 பகல் 3:18 மணி

பரிகாரம் : துர்கை வழிபாடு நம்பிக்கை தரும்.

கும்பம்:

குரு, சனீஸ்வரர், கேது, சுக்கிரன் நற்பலன் தருவர். பணிகளை மதி நுட்பத்துடன் நிறைவேற்றுவீர்கள்.

குடும்பத்தினர் அன்பு, பாசம் கொள்வர். சமூக நிகழ்வுகள் இனிய அனுபவம் தரும். வாகனப் பயன்பாடு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் பெற்றோரிடம் வெளிப்படை மனதுடன் பழகுவர். உடல் ஆரோக்கியம் சீராக சிகிச்சை தேவைப்படும். மனைவி கருத்து இணக்கமுடன் நடந்து கொள்வார். தொழிலில் உற்பத்தி, விற்பனை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். பணியாளர்கள் கூடுதல் தொழில் நுட்பம் அறிந்து கொள்வர். பெண்கள் குடும்பச் செலவுகளில் சிக்கனத்தை கடைபிடிப்பர். மாணவர்கள் கலைகளை விரும்பி பயில்வர்.

சந்திராஷ்டமம் : 15.1.2020 பகல் 3:19 மணி - 17.1.2020 மாலை 4:53 மணி

பரிகாரம் : அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.

மீனம்

சுக்கிரன், சூரியன், புதன், சந்திரனால் வியத்தகு அளவில் நன்மை கிடைக்கும். பணிகளில் புதிய யுக்தியை கையாள்வீர்கள். சமூக நிகழ்வு மனதிற்கு இனிய அனுபவத்தை தரும்.

வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகள் பெற்றோரிடம் நண்பருக்கு இணையாகப் பழகுவர். குடும்பத்தில் சுபநிகழ்வு கைகூடும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். வழக்கு, விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்படும். மனைவியின் செயல் பாராட்டும்படி அமையும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து வளர்ச்சி கூடும். பணியாளர்கள் சுறுசுறுப்பாக பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சியாக வாழ்வர். மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பருக்கும் உதவுவர்.

பரிகாரம் : நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.