2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம்! சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்?

Report
341Shares

திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24ஆம் தேதி நிகழப்போகிறது. மகரம் ராசி சனிபகவானின் சொந்த வீடு இந்த இடப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை.

இந்த சனிப்பெயர்ச்சியால் மிதுனம் ராசிக்கு அஷ்டமத்து சனி, கடகம் ராசிக்கு கண்டச்சனி, சிம்ம ராசிக்கு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சனிபகவான் அமரப்போகிறார்.

இந்த ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி யோகங்கள் நிறைந்த கால கட்டமாக அமையப்போகிறது. நவ கிரகங்களில் சனிபகவான் நீதிமான். நியாயமாக நடப்பவர்களுக்கு சனிபகவான் எந்த சங்கடமும் தரமாட்டார்.

தவறு செய்பவர்களை மட்டுமே சனிபகவான் தண்டிப்பார் எனவே சனிபகவானைப்பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். சனிபகவான் தண்டனைகளின் மூலம் அனுபவ பாடங்களை கற்றுக்கொடுப்பார்.

சனிபகவான் சரியில்லாத இடத்தில் சஞ்சரிக்கும் போது சில பரிகாரங்களை செய்தால் போதும் பலன்தரும் பரிகாரங்களும் இருக்கின்றன. சனி பார்வை என்ன செய்யும் சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார். சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள் உண்டு இந்த சஞ்சாரம் மற்றும் பார்வைகளால் மிதுனம், கடகம், சிம்மம் ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்ன பரிகாரம் என்று பார்க்கலாம்.

மிதுனம் ராசி

உங்கள் ராசிக்கு எட்டு, ஒன்பதாம் அதிபதியான சனி பகவான் அவரது வீடான மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சனிபகவான் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார் நன்மையே செய்வார். சனிபகவான் கடந்த 30 மாதங்களாக 7ஆம் இடத்தில் கண்ட சனியாக உங்களை வாட்டி வதைத்து ஒரு வழி பண்ணிவிட்டார் என்றாலும் ஒரு சில நன்மைகளும் இல்லாமல் இல்லை. இனி அவர் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது சற்று சுமாரான பலன் களையே அளிப்பார் என்று கூற வேண்டும். கடந்த 30 மாதங்களாக கஷ்டப்பட்டு, அல்லல்பட்டு ஓருவழியாக மீண்டு வரலாம் என்று நினைத்திருப்பீர்கள். அடுத்த 30 மாதத்திற்கு மிகப்பெரிய மாற்றமாக அஷ்டமத்து சனி ஆரம்பிக்கிறது. வருமானம் அதிகரிக்கும் கவலை வேண்டாம் பணவரவு அதிகமாக இருக்கும் காரணம் சனி பகவான் தனது ஏழாவது பார்வையால் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன, குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். இதுவரை வராமல் தடையாக இருந்த பென்ஷன், பி.எப், கிராஜூவிட்டி போன்ற விஷயங்கள் தடையின்றி வந்து சேரும்.

சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். கூட்டுத்தொழிலில் வெற்றி உங்களது ராசிக்கு 8ம் இடத்தில் அமரும் சனிபகவான் ராசிக்கு 10ஆம் இடத்தை சனிபகவான் பார்க்கிறார். தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஓரளவு வந்து சேரும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகள் நன்மை அடைவர். பங்கு சந்தையில் அதிக கவனம் தேவை. சுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளுக்குள் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். பாஸ்போர்ட் விசா போன்ற விஷயங்களில் தடையேற்பட்டாலும் அதனால் நன்மையேயாகும். வேலையை விட வேண்டாம் அரசாங்க வேலையில் இருப்பவர்கள் வேலையில் கவனம் தேவை. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. எதிலும் நிதானமாக கையாளுதல் வேண்டும். உயரதிகாரிகளால் தண்டிக்கப்படுவீர்கள் எச்சரிக்கை

எட்டாம் வீட்டில் சனிபகவான் சஞ்சாரம் செய்வது சற்று மனவருத்தங்களையும் போராட்டங்களையும் எடுத்த காரியத்தில் தடையும் உண்டு பண்ணுவார். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. எல்லாவற்றிலும் பொறுமையாக இருந்தால் நன்மையே நடக்கும். எதிலும் தலைமையேற்று நடத்துவதை சற்று தள்ளிப்போட்டு விட்டு, மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடங்க. உணர்வு பூர்வமாக முடிவெடுக்க வேண்டாம். எதிர்பாராத வருமானம் பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. பத்திரங்கள், நகைகள் இவைகளை பத்திரமாகக் கையாளுதல் வேண்டும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும். வட்டி பெரிய அளவில் கட்ட வேண்டி வரும். அதே சமயம் இதுவரை கொடுத்து வைத்திருந்த வராத பணமும் பொருளும் தவணை முறையில் எதிர்பாராத விதமாக வந்து சேரும்.

எட்டில் செவ்வாய் அல்லது சனி பகவான் இருந்தால் நிதானமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். அதிக வேகம் ஆபத்துதான் நிதானமாக போங்க. எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் முதலில் கிடைத்த வேலையில் அமர்ந்து பின் பிடித்த வேலையை தேடுதல் வேண்டும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலைக்காக அவசரப்பட்டு வேலையை விட்டுவிடுதல் கூடாது. கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வண்டி வாகனங்களில் கவனம் யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது போன்ற சூழ்நிலை உருவாகும். நம்பி வேலையில் இறங்கினால் துரோகம் செய்வார்கள். எந்த காரியத்திற்கும் மற்றவரை நம்பாமல் முன் கூட்டியே திட்டமிட்டு சிந்தித்து செயல்பட்டால் தோல்வியை தவிர்க்கலாம். எட்டில் செவ்வாயோ சனியோ இருந்தால் சிறு சிறு விபத்துகள் ஏற்படுவது சகஜம்தான். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை.

சனிபகவானின் பார்வை உங்க ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது விழுகிறது. இதுநாள் வரை குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு தடைகள் ஏற்பட்டு பின் சுபகாரியம் நடக்கும். சிலருக்கு குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சனைகளும் அவர்களால் தேவையற்ற குழப்பங்களும் வரும். டீன் ஏஜ் பிள்ளைகள் தடம்மாற வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக கண்காணியுங்கள். அஷ்டமத்து சனி காலத்தில் பெண்கள் எதையும் பொறுமையாக கையாளுங்கள். அடுப்பங்கரையில் கவனமாக இருங்கள். நெருப்பு காயங்கள் ஏற்படும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். லேசான உடல் நலப்பிரச்சினைகளையும் கண்காணித்து மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

அடிக்கடி ஆலயதரிசனம், சாமி தரிசனம், பெரியவர்களை மதித்துப்போற்றி வணங்கி வர அஷ்டம சனியின் தாக்குதலிருந்து எளிதில் மீண்டு வந்து வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும். தந்தையாரின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. வெளியூர், வெளிநாடு செல்ல நிறைய தடைகள் ஏற்பட கூடுமாகையில் முடிந்தவரை குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். குலத் தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி வர எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும்.

கடகத்திற்கு கண்டச்சனி

கடகம் ராசிக்காரர்களுக்கு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு சனி பகவான் நகர்கிறார். சனி பகவான் ஆறாம் இடத்தில் இருந்தாலும் அலைச்சல், வேதனை, நோய்வாய்ப்படுதல் கடன் இவையெல்லாம் கொஞ்சமாக இருந்தது. இனி சஞ்சரிக்கவிருக்கும் 7ம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் ராசிக்கு கேந்திரமாக இருப்பதால் சனியினுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும். கண்டச்சனி காலத்தில் கடகம் ராசிக்காரர்களுக்கு வேலை, கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் கடகம் ராசிக்காரர்களுக்கு எப்படி என்று பார்க்கலாம். சனியானவர் உங்களது ராசிக்கு 7 மற்றும் 8ம் வீட்டிற்கு அதிபதி அவர் 7ஆம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது சற்று சுமார் ஆனாலும் கடகம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்காது.

சனிபகவான் உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசிக்கு 4ஆம் இடம், 9ஆம் இடம், மற்றும் உங்கள் ராசியை பார்வையிடுகிறார். ஒற்றுமை அதிகரிக்கும் வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் விலகி வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் கூடிவரும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் சிந்தனை சக்தியும் மிகுந்து காணப்படும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பம் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ வழி ஏற்படும். நன்மைகள் அதிகம் சனிபகவான் தனது ஏழாவது பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். செயல்களில் சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் காரணமாக அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

உங்களுக்கு பிரச்சனைகள் வரும் பொழுதெல்லாம் கடவுள் அந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பார். இந்த கால கட்டத்தில் உங்க உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். தண்ணீர் அதிகம் குடிக்கவும். இந்த இடப்பெயர்ச்சியால் உங்கள் பெற்றோர்களுக்கும் பாதிப்பு வரலாம். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை.தாயரால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். அம்மாவின் அன்பும் ஆசியும் கிட்டும். உங்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும், கடன் கொடுத்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். பழைய இடங்களை விற்று புதிய இடம் வீடு, வண்டி, வாகனங்கள், விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். உயர்கல்வி பயில வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்

இதுவரை குடும்பத்தில் நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். மழலை செல்வத்திற்காக ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும். இதுநாள் வரை சிங்கிள் ஆக இருந்தவர்களுக்கு காதல் மலரும். காதல் கனிந்து திருமணத்தில் முடியும் அடிக்கடி விருந்து கேளிக்கைளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். தன்னம்பிக்கையும் ஊக்கமும் அதிகரிக்கும். எதிரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெற லட்சுமி நரசிம்மரை வணங்கலாம். கும்பகோணம் அருகில் உள்ள திருநறையூரில் உள்ள நாச்சியார் கோயிலில் மங்கள சனியாக குடும்பத்துடன் அருள்பாலிக்கிறார். சனிதிசை, கண்டச்சனியால் பாதிப்பு குறைய இங்குள்ள சனிபகவானை தரிசனம் செய்து அர்ச்சனை செய்ய நன்மைகள் நடைபெறும்.

சிம்மம் ராசி

ஆறாம் வீட்டு சனி சிம்ம ராசிக்காரர்கள் இதுவரை இதுவரை போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து வந்தீர்கள். இனி வெற்றிக்கனியை ருசிக்கப் போகிறீர்கள். சோதனைகளை தாங்கிக் கொண்டு வைரம் பாய்ந்த மனதுடையவராக மாறியிருக்கிறீர்கள். இனி தொட்டதெல்லாம் ஜெயமே. தடைபட்ட காரியங்கள் எளிதில் கைகூடும். நண்பர்களால் எதிர்பார்த்த அளவு அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும். விசா, பாஸ்போர்ட் எளிதாக வந்து சேரும். இதுநாள்வரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலை அமையும். வேலைக்கு ஏற்ற சம்பளமும் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்கும்.

வேலை விசயமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதிலும் முதலீடு செய்வதிலும் கவனமாக இருக்கவும். பங்குச்சந்தை முதலீடுகளும் இப்போதைக்கு தேவையில்லை. சிறு தொழில் உற்பத்தி சார்ந்த துறைகள் சற்று சுமாராக இருக்கும். ஆடை, ஆபரணம், ஜவுளி துறைகள் லாபகரமாகவும், நகை தொழில் சுமாராக இருந்து வரும். சுற்றுலா, பத்திரிக்கை, தொலைகாட்சி, சினிமா துறைகளில் வேலை செய்பவர்களுக்கு லாபம் அதிகம் இருக்கும். இதுநாள்வரை வராமல் இருந்த பணமெல்லாம் தேடி வரும். சமுதாயத்தில் கவுரவம், புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும். பெண்களுக்கு நகை, ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். கூட்டுதொழில் சாதகமாக இருந்து வரும். முன்னோர்கள் சொத்து மூலம் எதிர்பாராத தனவரவு பொருள் வரவு அமையும்.

உடன்பிறந்த சகோதரிகளால் எதிர்பாராத நன்மை ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். தாய் மாமன்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வழக்குகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். இதுநாள் வரை இழுத்தடித்த வழக்குகளில் ஜெயிப்பீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன்கள் அதிகரிக்கும், எதிரிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

நிதானம் எச்சரிக்கை தேவை

காதல் கணிந்து திருமணத்தில் முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். உங்களது உழைப்ப்பு மற்றவர்களுக்கு லாபகரமாக அமையும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும்.

உணவு விசயத்தில் கவனமாக இருக்கவும். எட்டாம் வீட்டை சனி பார்வையிடுவதால் போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை. எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருங்க நிதானமும் தேவை. மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லூரிகளில் வேலை கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் வெளிநாடு, வெளியூர் செல்ல வாய்ப்பு ஏற்படும். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார்.

loading...