உக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார்! குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா?

Report
584Shares

தை மாதத்தின் முதலாவது வாரம் அற்புதமான வாரமாக ஆரம்பமாகியுள்ளது. மகரம் ராசியில் சூரியன், புதன், கும்பம் ராசியில் சந்திரன், மிதுனம் ராசியில் ராகு விருச்சிகம் ராசியில் செவ்வாய், தனுசு ராசியில் குரு, சனி,கேது, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

சந்திரன் இந்த வாரம் கன்னி, துலாம்,விருச்சிகம், தனுசு ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கிறார்.

இந்த வாரம் கும்பம்,மீனம், மேஷம், ரிஷபம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. இந்த வாரம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தின் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்க ராசிநாதன் செவ்வாய் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் இருக்கிறார்.

ஒன்பதாம் வீட்டில் சனி, கேது, குரு, பத்தாம் வீட்டில் சூரியன், புதன், லாப ஸ்தானத்தில் சுக்கிரன், மூன்றாம் வீட்டில் ராகு என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. நீங்க இந்த வாரம் ரொம்ப மன நிறைவோடு இருப்பீங்க. கணவன் மனைவி உறவில் உற்சாகமாக இருப்பீர்கள். இந்த வாரம் ரொமான்ஸ் அதிகமாகும்.

புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம் கிடைக்கும். அரசு தேர்வுகள் எழுதலாம். ராசி அதிபதி செவ்வாய் எட்டாம் வீட்டில் இருக்கிறார். புதனின் சஞ்சாரம் ஒன்பதாம் இடம் தொடங்கி லாப ஸ்தானம் வரை சஞ்சரிக்கிறார், நிறைய லாபத்தை தருவார்.

குரு உங்க ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் கேது உடன் இணைந்திருக்கிறார், கோடீஸ்வர யோகம். குரு பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் அதிர்ஷ்டம் அதிகமாகும். உங்களுக்கு சின்ன பயம் இருந்தாலும் தைரியத்தோடு எதையும் செய்து முடிப்பீர்கள்.

மாணவர்களுக்கு அற்புதமான மாதம் நன்றாக படித்து தேர்வுகளை எழுதுவீர்கள். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக போங்க நிதானமாக இருக்க வேண்டிய வாரமாகும். வாழ்க்கையில் ஸ்திரமான பலன்களை ஏற்படுத்தும்.

புத்திரபாக்கியம் தேடி வரப்போகிறது சந்தோஷமாக கொண்டாட தயாராகுங்கள். மன அமைதிக்காக தியானம் பண்ணுங்க நன்மைகள் அதிகம் நடைபெறும். வீட்டில் பெண்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். புதிய வேலை தேடி வரப்போகிறது.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்க ராசிநாதன் சுக்கிரன் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.

அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது, குரு, ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சூரியன், புதன், இரண்டாம் வீட்டில் ராகு என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. திறமைசாலிங்கள் நீங்கள். யோகமான வாரம். அஷ்டமத்து சனியால் அவதிப்பட்டு வந்தீர்கள் இனி சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். வெளிநாட்டு வேலைகள் கிடைக்கும். பெண்களுக்கு புதிய வேலைகள் உற்சாகத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பும் அதற்கேற்ற வேலைகளும் தேடி வரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். திருமணத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும் அரசு வேலைக்கு முயற்சி பண்ணுங்க நல்லதே நடக்கும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிநாதன் புதன் அஷ்டம ஸ்தானத்தில் இருக்கிறார். மறைந்த புதன் நிறைந்த கல்வியை தரும், களத்திர ஸ்தானத்தில் சனி, குரு, கேது, அஷ்டம ஸ்தானத்தில் புதன், சூரியன், ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் ராசியில் ராகு என கிரகங்கள் பொலிவுடன் இருக்கின்றன. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க கண்மூடித்தனமான நட்புகளை தவிர்த்து விடுங்கள்.

மது, போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட வேண்டாம். யாருக்காகவும் கடன் வாங்காதீங்க அது திரும்ப வராது. ஆறாம் வீட்டில் குரு சஞ்சரிக்கிறார். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீங்க.

உங்க தொழிலில் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைக்கும். குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது.

நீங்க செழிப்பாக இருப்பீங்க செல்வ வளம் வரக்கூடிய மாதம் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். இளைய சகோதரர்களுக்கும் உங்களும் இடையிலான ஒற்றுமை அதிகமாகும். காதல் கைகூடி வரும் காரிய வெற்றி நடைபெறும் வாரம். அரசு அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

கடகம்

ராசிக்கு விரைய ஸ்தானத்தில் ராகு, ஐந்தாம் வீட்டில் செவ்வாய், அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், ஏழாம் வீட்டில் சூரியன், புதன், ஆறாம் வீட்டில் குரு,சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.

கடக ராசிக்காரர்களுக்கு இது யோகமான வாரம். காரணம் குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வை நன்மையை தரும் பண வருமானத்தைக் கொடுக்கும். கடன் தொல்லைகள் தீரும். கணவன் மனைவி உறவில் சந்தோஷம் அதிகமாகும்.

வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பணவருமானம் அதிகமாகும். அப்பாவின் மூலம் வருமானம் தேடி வரும். சொத்துக்கள் தேடி வரும். பிசினஸ் பார்ட்னர் மூலம் லாபம் அதிகமாகம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

கொடுத்த பணம் திரும்ப வராது. வீட்டில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து போங்க. இந்த வாரம் நீங்க எல்லாம் வல்ல முருகப்பெருமானை விசாகம் நட்சத்திர நாளில் வணங்க நன்மைகள் அதிகமாகும்.

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு, நான்காம் வீட்டில் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் குரு, சனி கேது, ஆறாம் வீட்டில் சூரியன், புதன் களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது.

குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. உங்களின் வலிமை அதிகமாகும். தெம்பும் உற்சாகமும் பிறக்கும். உங்களுடைய விழிப்புணர்வு அதிகமாகும். கணவன் மனைவி உறவில் ரொமான்ஸ் கூடும். வீட்டில் சந்தோஷம் அதிகமாகும்.

அலுலகத்தில் கையெழுத்து போடும் போது கவனமாக போடுங்க. உங்களுக்கு உடல் நலம் உற்சாகமாக இருக்கும். வீட்டிலோ பிசினஸ் செய்யும் இடத்திலோ விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பெயரும் புகழும் கிடைக்கும் வாரம்.

வியாபாராத்தில் லாபம் வரும் மாணவர்களுக்கு நல்ல நினைவாற்றல் அதிகமாகும். புத்திசாலித்தனம் மேலோங்கும் தேர்வுகளை உற்சாகமாக எதிர்கொள்வீர்கள். திருமணம் ஆகாத சிம்மராசிக்காரர்களுக்கு கல்யாணம் யோகம் கைகூடி வரப்போகிறது.

தட்டிப்போன வரன்கள் கூட உங்களை தேடி வரும். இந்த வாரம் அதிர்ஷ்டங்கள் நிறைந்த வாரமாக அமைந்துள்ளது.

கன்னி

கன்னி ராசிக்கு இந்த வாரம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சூரியன் இந்த வாரம் உங்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். மூன்றாம் வீட்டில் செவ்வாய்,சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் கேது, குரு, சனி இணைந்திருக்கிறார்கள்.

ஆறாம் வீட்டில் சுக்கிரன், பத்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. நீங்க இந்த வாரம் நீங்க கவனமாக இருக்கவேண்டும். எதிர்பாலினத்தவருடன் பேசும் போது கவனமாக இருங்க. வீட்டு பராமரிப்பில் கவனமாக இருங்க. அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பேச்சில் கவனமாக இருங்க கோபமாக வேண்டும்.

புதிய முயற்சிகள் கைகூடி வரும். அரசியல்வாதிகளுக்கு அற்புதமான வாரம். அதிர்ஷ்டங்கள் தேடி வரும். உங்களின் தோஷங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. காதல் வலையில் விழுந்து விடாதீர்கள் அது சிக்கலில் கொண்டு போய் விடும் திருமண முயற்சிகளை செய்ய வேண்டாம்.

வம்பு வழக்குகளில் கவனமாக இருங்க. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு தேர்வில் வெற்றி கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களுக்கு கல்வி யோகம் மேன்மையை தரும். படிப்பில் அக்கறையும் கவனமும் தேவை. திறமையும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். இந்த மாதத்தில் கவலைகள் மாறும்

துலாம்

சூரியன் புதன் நான்காம் வீட்டிலும் முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் கேது, குரு, சனி இணைந்திருக்கிறார்கள். இரண்டாம் வீட்டில் செவ்வாய், ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கோபமாக பேச வேண்டாம் பேச்சில் கவனமாக பேசுங்க. தன ஸ்தானத்தில் உள்ள ஆட்சி பெற்ற செவ்வாய் அற்புதமான பலன்களை தருவார். சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தாயார் வழி சொத்துக்கள் கிடைக்கும்.

பெற்றோர்களுக்கு மதிப்பு கொடுங்கள். வீட்டில் உறவினர்களின் வருகையால் உற்சாகம் பிறக்கும். தேர்வு காலம் நெருங்குகிறது படிப்பில் கவனமும் அக்கறையும் தேவை. மறதிகள் ஏற்படலாம் கவனமாக இருங்க. இந்த வாரத்தில் உங்களுக்கு சந்திர மங்கள யோகம் தேடி வரப்போகிறது.

அரசு தேர்வுகள் எழுதுங்கள் நன்மைகள் நடைபெறும். வரும் வாரங்கள் உங்களுக்கு நன்மைகளை தரப்போகிறது. சனிபகவானால் உங்களுக்கு யோகங்கள் தேடி வருகிறது. வேலைப்பளு அதிகமாக இருக்கும் அதையும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு லாபங்கள் தேடி வரும் வாரம்.

விருச்சிகம்

சூரியன் புதன் மூன்றாம் வீட்டிலும் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கேது, குரு, சனி இணைந்திருக்கிறார்கள். உங்க ராசிநாதன் செவ்வாய் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். நான்காம் வீட்டில் சுக்கிரன், எட்டாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடக்கும். வீடு வாங்கலாம். குடும்ப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பது சிறப்பு வருமானம் அதிகமாகும்.

நீங்க எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும் வண்டி வாகன பழுதுகள் நீங்கும். வரும் வாரங்களில் தடைபட்ட திருமணங்கள் முடிவுக்கு வரும். அரசியல்வாதிகளுக்கு நல்ல யோகம் வரும்.

மாணவர்களுக்கு நல்ல யோகம் வரப்போகுது. இத்தனை நாட்களாக படித்தது மறந்து போய்விட்டதே என்ற கவலை இருந்தது. இனி அந்த பிரச்சினையில்லை நன்றாக படித்து முன்னேறுவீர்கள் வெற்றிகள் தேடி வரும். கணவன் மனைவி உறவில் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் கவனமாக விட்டுக்கொடுத்து போங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் நன்மைகள் நடைபெறும். பிசினஸ் செய்பவர்களுக்கு நன்மைகள் நாடி வரப்போகிறது.

தனுசு

சூரியன் புதன் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிலும் உங்க ராசியில் கேது, குரு, சனி இணைந்திருக்கிறார்கள். மூன்றாம் வீட்டில் சுக்கிரன், ஏழாம் வீட்டில் ராகு சஞ்சரிக்கிறார். இந்த வாரம் மாற்றங்களும் முன்னேற்றங்களும் கொண்ட வாரம். காதல் விவகாரங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம். கடன் வாங்க வேண்டாம் குடும்பத்தில் பிரச்சினைகள் வரலாம். கூட்டு முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும்.

உங்களுக்கு ஏற்பட்டிருந்த ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். நிறைய மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிறைந்த மாதம். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வாய்ப்பு பெருகும். தொழிலை மேம்படுத்தும் அளவிற்கு பணம் கிடைக்கும்.

தொழிலில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். ராகுவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. ராகுவை உங்க ராசியில் இருந்து குரு பார்ப்பதால் கஷ்டங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள் தேர்வு நேரம் நெருங்குகிறது. படிப்பில் கவனம் செலுத்துங்கள். மன அழுத்தம் நீங்கப்போகிறது. திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் கை கூடி வரும், காரணம் குரு பகவான் உங்க ராசியில் இருந்து ஏழாம் வீட்டினை பார்க்கிறார்.

மகரம்

மகரம் ராசியில் சூரியன்,புதன், விரைய ஸ்தானத்தில் கேது, குரு, சனி, இரண்டாம் வீட்டில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மாணவர்களுக்கு சுக்கிரனால் முன்னேற்றங்கள் கிடைக்கும்.

வீடு மாற்றம் ஏற்படும். வேலையில் இடமாற்றம் ஏற்படும். சனியும் உங்க ராசியில் சூரியனுடன் இணைவதால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்து வந்த பணக்கஷ்டம், குழந்தைகளினால் ஏற்பட்ட மனக்கஷ்டம் நீங்கும். இந்த மாதம் உங்களுக்கு வரும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். தொழில் மாற்றம் இடமாற்றம் நல்லதாகவே அமையும். நட்பு வட்டாரத்தில் கொஞ்சம் கவனமாக இருங்க வார்த்தைகளை விட வேண்டாம். தொழில் சிறப்பாக இருக்கும். தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்கள் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் பணவரவை தருவார். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு நகைகள், ஆடை ஆபரணங்கள் சேரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இந்த மாதம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிக்கின்றனர். லாப ஸ்தானத்தில் குரு,கேது,சனி, தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

மகிழ்ச்சிகரமான வாரம். இந்த வாரம் உங்க எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பெற்ற பிள்ளைகளினால் உங்களுக்கு நன்மைகள் அதிகமாகும். சனி பகவான் ஏழரை சனியாக மாறப்போகிறார். அவர் உங்க ராசி அதிபதி நன்மைகளை அதிகம் ஏற்படுத்தி தருவார்.

நீங்க நினைப்பது நிறைவேறும். குழந்தைகளின் மூலம் நன்மைகள் அதிகமாகும். குடும்பம் செழிக்கும். பிள்ளைகளினால் சந்தோஷம் அதிகமாகும் வயது மூத்தவர்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். மனைவி வழியில் செல்வாக்கு அதிகமாகும்.

அலுவலகத்தில் உங்களின் மதிப்பு அதிகமாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள், பயணங்களினால் நன்மைகள் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் ரொம்ப முயற்சி பண்ணுங்க தேர்வு நேரம் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். லாபங்கள் நிறைந்த வாரம்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களே இந்த மாதம் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிக்கின்றனர். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு,கேது,சனி, பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய், சுக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

தடைகள் உடைபடும். பாக்யங்கள் அதிகம் நடைபெறும். இந்த வாரம் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். நீங்க நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்த காரியங்கள் இந்த மாதம் நடைபெறும். உங்களுடைய நண்பர்கள் மூலமும் நல்லவை தேடி வரும்.

உங்களின் முன்னோர்கள் செய்த புண்ணியம் நன்மைகளைத் தரும். குலதெய்வ கோவிலுக்குப் போய் அபிஷேக ஆராதானை செய்து ஆசியை பெறுங்கள். நன்மைகள் அதிகம் தரும். பிள்ளைகளினால் சந்தோஷம் அதிகமாகும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கவனமாக இருங்க.

சில நஷ்டங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு ஆடை ஆபரணச்சேர்க்கை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம். இந்த வாரம் உங்க புத்திசாலித்தனம் பளிச்சிடும்.