2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி! திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா? உடனே இத செய்யுங்க

Report
572Shares

சனீஸ்வரர் அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களை வாரி வழங்குவதில் வள்ளல். அதேபோல் கஷ்ட, நஷ்டங்களை கொடுப்பதிலும் தயவு தாட்சண்யமின்றி செயல்படுவார்.

இந்த சனிப்பெயர்ச்சியால் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலன்களையும், லாபங்களையும், வளர்ச்சியும் ராஜயோகத்தையும் பெறப்போகின்றனர்.

இந்த ஐந்து ராசிக்காரர்கள் தவிர மற்ற 7 ராசிக்காரர்களுக்கு பாதிப்பா என்று நினைக்க வேண்டாம். சனிபகவான் படிப்பினைகளை கொடுத்து அதற்குப் பிறகு நல்ல பலன்களைக் கொடுப்பார்.

இந்த சனிப்பெயர்ச்சியல் 12 ராசிகளில் உள்ள திருவாதிரை நட்சத்திரம், ரோகிணி நட்சத்திரம் மற்றும் மிருக்ஷீரிட நட்சத்திரம் ஆகிய நட்சத்திரகாரர்களுக்கும் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ரோகிணி நட்சத்திரம்

ரிஷப ராசியில் உள்ள ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு சனி நன்மைகளை வாரி வழங்க போகிறார். அஷ்டமத்து சனியில் சில சங்கடங்களை சந்தித்து வந்தீர்கள். உங்களுக்கு பாக்ய சனி வரப்போகிறது. இந்த சனிப்பெயர்ச்சி நிறைய நன்மைகளை செய்யும்.

பரிகாரம்

சனிக்கிழமை சனிபகவானை மனம் உருகி வணங்குங்கள் விபரீதங்கள் கூட அதிர்ஷ்டமாக மாறும்.

மிருக்ஷீரிட நட்சத்திரம்

புகழின் உச்சிக்கு செல்லக்கூடிய அதிர்ஷ்ட சாலிகள் மிருக்ஷீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமும், வெற்றியும் கிடைக்கும். 2020 இல் மிதுன ராசியில் மிருகஷீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அஷ்டம சனி வருகிறது. எனவே வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருங்க.புதிய தொழில் எதுவும் தொடங்கவேண்டாம். பேராசை படவேண்டாம். பங்குச்சந்தை முதலீடு தேவையே இல்லை, உங்க குடும்ப ஸ்தானத்தை சனி பார்க்கிறார் எனவே குடும்பத்தில் கவனம் தேவை.

பரிகாரம்

சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

திருவாதிரை நட்சத்திரம்

திருவாதிரையில் பிறந்தவர்கள் ராகுவின் அருள் பெற்றவர்கள். ராகு உங்க ராசியில் இருக்கிறார். உங்க ராசியின் மீது குருவின் பார்வை படுகிறது. மிதுனம் ராசியில் உள்ள திருவாதிரை நட்சத்தில் பிறந்தவர்களே, உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி அஷ்டமத்து சனி காலமாகும். எட்டுக்கு உடையவன் எட்டாம் வீட்டில் அமர்வது விபரீத ராஜயோகம். அஷ்டமத்து சனிபகவான் பயத்தை கொடுத்து உச்சத்தை தொட வைப்பார். தொழில் வேலையில் மாற்றம் ஏற்படும். புத்தியில் சிறு குழப்பங்கள் வரும் எச்சரிக்கையாக இருங்கள்.

பரிகாரம்

எல்லாம் வல்ல சிவபெருமானை சரணடையுங்கள். திங்கட்கிழமை விரதம் இருந்து திருவாதிரை நட்சத்திர நாளில் நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

பைரவரை மனம் உருகி வணங்குங்கள்.