உங்க ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருக்கு? இதுதான் நடக்குமாம்

Report
323Shares

‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று சாஸ்திரமறிந்தவர்கள் கூறுவர்.

வாழ்க்கையில் ஒருவன் சிறப்புகள் பெற வேண்டுமானால் குருபகவானின் அருட்பார்வை கிடைக்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது

அந்தவகையில் ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.

 • குரு பகவான் 1-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் மற்றும் செல்வம் கிடைக்கும்.
 • குரு பகவான் 2-ம் இடத்தில் இருந்தால் அரசு வேலை கிடைக்கும்.
 • குரு பகவான் 3-ம் இடத்தில் இருந்தால் உடன் பிறப்புகளால் உதவிக் கிடைக்கும்.
 • குரு பகவான் 4-ம் இடத்தில் இருந்தால் வீடு வாகன யோகம் கிடைக்கும்.
 • குரு பகவான் 5-ம் இடத்தில் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.
 • குரு பகவான் 6-ம் இடத்தில் இருந்தால் பிரச்சனையில்லாத வாழ்வு மலரும்.
 • குரு பகவான் 7-ம் இடத்தில் இருந்தால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
 • குரு பகவான் 8-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
 • குரு பகவான் 9-ம் இடத்தில் இருந்தால் அள்ளிக் கொடுப்பார்.
 • குரு பகவான் 10-ம் இடத்தில் இருந்தால் பதவி மாற்றம் கிடைக்கும்.
 • குரு பகவான் 11-ம் இடத்தில் இருந்தால் செல்வ நிலையில் உயர்வு உண்டு.
 • குரு பகவான் 12-ம் இடத்தில் இருந்தால் சுபவிரயம், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.
loading...