உண்மையில் கன்னி ராசியில் பிறந்தவர்கள் ப்ளேபாயாக தான் இருப்பார்களா..? ராசி கூறும் ரகசியம் இது தான்!

Report
132Shares

ராசி மண்டலத்தில் கன்னி 6வது ராசியாகும். கன்னிராசியின் அதிபதி கிரகங்களின் இளவரசனான புதன் பகவானாவார். உத்திரம் 2,3,4 பாதங்களிலும் அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதங்களிலும் பிறந்தவர்கள் கன்னி ராசியில் பிறந்தவர்கள் ஆவர்.

கன்னி வேறு பெயர்கள்:

பெண், மாதை என்று வேறு பெயர்களும் உண்டு.

நட்பு ராசிக்காரர்கள்:

ரிஷபம், கடகம், மகரம் ஆகிய ராசிகள் கன்னி ராசிக்கு நட்பு ராசிகளாக அமைகின்றன.

குணங்கள்:

கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். உலக விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தமாட்டார்கள். குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்துவிட வேண்டும் என நினைப்பார்கள்.

தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவர்களாக இருப்பார்கள். தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தும் நற்குணமும் இருக்கும். கன்னி ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுகமான வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். எந்த ஒரு காரியத்தையும் குடும்பத்திலுள்ளவர்களை கலந்தாலோசிக்காமல் செய்யமாட்டார்கள்.

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு போதும் என்ற அளவிற்கு தன வரவு தாராளமாக அமையும். வருமானத்திற்கேற்றவாறு செலவுகள் செய்து கடன்கள் இல்லாமல் வாழ்வார்கள். இவர்களுக்கு தெரியாத கலையே இல்லை என கூறலாம். ஒரு துறையோடு நிறுத்திக் கொள்ளாமல் இரண்டு மூன்று துறைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் லாபமும் காணக்கூடியவர்கள்.

சிறு பணியில் சேர்ந்தாலும் இவர்களது அனுபவ முயற்சியால் புகழின் உச்சிக்கே சென்று விடுவார்கள். சுதந்திரமாக விட்டுவிட்டால், கொடுத்த வேலையை வித்தியாசமாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பார்கள். இந்த ராசியில் சிலர் நாற்பத்தைந்து வயதுக்குப் பின்னர் சொந்தத் தொழிலை தொடங்குவார்கள். செய்யும் வேலையில் நிறைய பணம் கிடைத்தாலும், மனசுக்குப் பிடிக்கும் வேலைதான் வேண்டும் என்று தேடுவீர்கள்.

எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிப்பார்கள். இவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாழ்க்கைத் துணையும் எதிலும் விட்டுக்கொடுக்கக்கூடிய பண்பு கொண்டவராதலால் எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் வாழ்க்கை திருப்திகரமாக அமையும்.

பொதுநல பணிகளுக்காகவும் ஓரளவுக்கு செலவு செய்யும் ஆற்றலும் இருக்கும். சம்பாதிக்கும் பணத்தை கட்டி காத்து பொறுப்புடன் செயல்படுவார்கள். கன்னி ராசிக்காரர்கள் பிள்ளைகளால் சாதகமான நற்பலன்களையே அடைவார்கள்.

அதிர்ஷ்டம் அளிப்பவை:

எண் - 4,5,6

நிறம் - பச்சை, நீலம்

கிழமை - புதன், சனி

கல் - மரகத பச்சை

திசை - வடக்கு.

loading...