2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்... மகர ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியுமாம்! விபரீத ராஜயோகம் நிச்சயம்

Report
453Shares

பிறக்கப்போகிற புத்தாண்டு மகரம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் என்றாலும் 2020 ஆண்டு உங்களுக்கு யோகமான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த புத்தாண்டில் பார்க்கிற வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு போகலாமா என்றும் யோசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகவே இந்த புத்தாண்டு பலன்களை தருகிறோம். உங்களின் பல கேள்விகளுக்கும் இந்த புத்தாண்டு பலன்களில் விடை கிடைக்கும். மகரம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு நல்ல செய்திகள் தேடி வரும் பாசிட்டிவ் விசயங்கள் அதிகம் நடக்கும் அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது.

2020ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் கும்பத்தில் சந்திரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு அருமையான யோக பலன்களையும் நன்மைகளையும் தரப்போகிறது. 2020 புத்தாண்டில் முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சிதான் ஆண்டின் துவக்கமான ஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு சனி திருக்கணிதப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகப்பெயர்ச்சியால் மகரம் ராசி காரர்களுக்கு என்ன நன்மைகள் நடக்கும் என்று பார்க்கலாம்.

மகரம் ராசிக்காரர்களுக்கு உங்க ராசிநாதன் சனி உங்க ராசியில் வந்து அமர்வது அற்புதமான காலகட்டம். முக்கிய கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்களுக்கு விரைய ஸ்தானத்தில் குரு கேது சஞ்சரிக்கின்றனர். விபரீத ராஜயோக காலம். குருவின் பார்வையால் பலவித நன்மைகள் நடைபெறப்போகிறது.

பாசிட்டிவ் எனர்ஜி

மகரம் ராசிக்கு 2020ஆம் ஆண்டு பல நன்மைகள் ஏற்படும். முன்னேற்றத்துடன் கூடிய மாற்றங்களும் நடைபெறும். உங்க சொந்த வீட்டிற்கு சனி வருகிறார். கடின உழைப்பாளிகள் நீங்கதான். மகர ராசிக்காரங்களுக்கு தொழில் வருமானம் ரொம்ப நல்லா இருக்கும். குரு 12ஆம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். சுப செலவுகள் நிறைய நடைபெறும். உடன் பிறந்தவர்களுக்கு செலவு செய்வீர்கள். நெகடிவ் விசயங்கள் எதுவும் நடக்காது. மகரம் வேலைக்கு ரொம்ப முக்கியத்துவம் கிடைக்கும். பாடுபட்டு உழைப்பீங்க.

மகாலட்சுமி யோகம்

ஏழரை சனியில் ஜென்ம சனி, விரைய குரு என கிரகங்கள் அமைந்துள்ளது. சனிபகவான் ஆட்சி நிலையில் அமையும் போது எந்த கெடுதலும் செய்ய மாட்டார். உங்களுக்கு மிகச்சிறந்த மகாலட்சுமி யோகம் வருகிறது. செல்வ செழிப்பு ஏற்படும். சனியோட பார்வை ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. திருமணம் முயற்சிகள் கைகூடி வரும். திருமணம் முடித்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் ரொம்ப நல்லா இருக்கும். தான தர்மங்கள் செய்வீங்க. ஆலய தரிசனம் அற்புதமாக இருக்கும்.

விபரீத ராஜயோகம்

குரு பகவான் அவரது வீடான தனுசு ராசியில் ஆட்சி பெற்றிருப்பது அற்புதமான காலகட்டம். 12ஆம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டில் அமர்வது விபரீத ராஜயோகம். கடந்த காலங்களில் வேலை இழப்பை சந்தித்த உங்களுக்கு இந்த ஆண்டு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டு நவகிரகங்களின் அருளாசியும் கிடைக்கிறது. மாணவர்களுக்கு தூர தேச பயணம் அமையும். வெளிநாடு கல்வி ஏற்படும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் தேடி வரும். சமூகத்தில் மதிப்பு மரியாதை தேடி வரும். பதவி வரும் போது பணிவு வரவேண்டும். கர்வத்தினால் ஆடினால் உள்ளதும் போய்விடும்.

வெளிநாடு யோகம்

கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சியான ஆண்டாக அமைந்துள்ளது. நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் வரும். வெளிநாடு செல்வதற்கான பாஸ்போர்ஸ் விசா பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும். நல்ல தன லாபம் கிடைக்கும். பெண்களுக்கு அற்புதமான ஆண்டு தங்க நகை வைர நகைகள் வாங்குவீர்கள்.