உக்கிரமா இருக்கும் சிம்ம ராசிக்காரர்களே கோபம் வேண்டாம்! சனிபகவானின் மோசமான பார்வை யார் மீது?

Report
149Shares

இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும். யாருக்கு வேலை கிடைக்கும். உங்களுக்கு என்னென்ன நல்ல பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

இந்த வார ராசி பலன்கள் உங்களுக்கு பல தகவல்களை கொடுக்கப்போகிறது படித்துப் பாருங்கள்.

மேஷம்

இந்த வாரம் உங்களுக்கு ரொம்ப நல்ல வாரம் வேலை செய்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ரொம்ப பிஸியா இருப்பீங்க. ரொம்ப பிரசர் டென்சன் அதிகரிக்கும். வியாபாரிகள் ஜாக்கிரதையாக இருக்கணும். இல்லாட்டி நஷ்டமாயிரும். நிதி நிலைமை ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். செலவுகள் எட்டிப்பார்க்கும். பெர்சனல் லைப் ரொம்ப அமைதியாக போகும். மனதில் உள்ள அழுத்தம் உடல் நலத்தை பாதிக்கும் எனவே எதையும் எதிர்கொள்ள மனதளவில் தயாராகுங்கள்.

ரிஷபம்

இந்த வாரம் உங்களுக்கு பல முக்கிய சம்பவங்கள் நடைபெறும். எந்த முடிவை எடுப்பதற்கு முன்னாடியும் கவனமாக இருங்க. இந்த வாரம் உங்க மனதில் இருக்கிற காதல் எண்ணங்களை வெளிப்படுத்துவீங்க வெற்றிகரமாக முடியும். சொந்த பிசினஸ் தொடங்குவதற்கு நல்ல நேரம் கூடி வருது வேலை செய்யிறவங்களுக்கு ரொம்ப வெற்றிகரமான வாரம். உங்க நிதி நிலைமை ரொம்ப நல்லா இருக்கும். செலவுகள் படிப்படியாக அதிகமாகும். வார இறுதியில் திடீர் பணவருமானம் வரும், திருமணமானவர்களுக்கு இந்த வாரம அற்புதமாக இருக்கும். அமைதியாக இந்த வாரத்தை கடத்தி விடலாம். உடல் வலி ப்ளட் பிரசர் அதிகமாகும் உடல் நலத்தில அக்கறை காட்டுங்க

மிதுனம்

இந்த வாரம் மிதுனம் ராசிக்காரர்களுக்கு ரொம்ப நல்ல வாரம். உங்க வேலை எல்லாம் நல்லபடியாக முடியும். உங்க பெர்சனல் லைப் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். வியாபாரிகளுக்கு இது ரொம்ப நல்ல வாரம். உங்க அன்பானவர் நீங்க எடுக்கிற முடிவுகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார், உங்க கல்யாண வாழ்க்கையில சின்ன பிரச்சினைகள் வந்து போகும், ஊடலுடன் கூடிய கூடல் இருந்தால்தானே வாழ்க்கையில ருசி இருக்கும். உங்க பெர்சனல் வாழ்க்கையில இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்க நிதி நிலைமை ரொம்ப நல்லா இருக்கும். உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் மனதளவிலும் நீங்க ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. உங்களுக்கு இந்த வாரம் பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாக இருக்கும்.

கடகம்

இந்த வாரம் நீங்க சமூக பணிகளில் ஆர்வம் காட்டுவீங்க. வேலை செய்யிறவங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்க பிசினஸ்க்கு இது ரொம்ப நல்ல வாரம். உங்க பிசினஸை விரிவு படுத்தலாம். வேலை செய்யிறவங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாயிருக்கு அலுவலகத்தில நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில கவனமாக பேசுங்க. பண விசயத்தில பாசிட்டிவ் ஆக இருக்கும். நிலம் வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் பிசினஸ்ல நல்ல லாபம் கிடைக்கும். உங்க முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும்.

சிம்மம்

இந்த வாரம் உங்க நிதி நிலைமை ரொம்ப அற்புதமாக இருக்கும் நீங்க ரொம்ப அதிர்ஷ்ட சாலி மிகப்பெரிய அளவில பண வருமானம் வரும். நீங்க ஹார்ட் ஒர்க் பண்ணுவீங்க. பிசினஸ் இன்வெஸ்ட்மென்ட் லாபம் கிடைக்கும். சின்னச் சின்ன எக்சர்சைஸ் பண்ணுங்க உட்கார்த்துக்கிட்டே வேலை பண்ணாதீங்க. நேரத்திற்கு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க. இல்லாட்டி உங்க உடல் நல பிரச்சினையும் மன நல பிரச்சினையும் பாதிப்பிற்கு உள்ளாகும். இந்த வாரம் உங்க ஃபேமிலி லைப்ல ரொம்ப நல்ல வாரம். பெரியவங்களோட ஆசிர்வாதம் கிடைக்கும். இளைய தலைமுறையினர் உங்க மதிப்பாங்க. எல்லா வேலைகளையும் ஈசியாக முடிப்பீங்க. கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.

கன்னி

இந்த வாரம் உங்க குடும்ப வாழ்க்கையில சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தவறாக புரிஞ்சிக்கிட்டு உங்க வாழ்க்கை துணையோட நீங்க பெரிய அளவில சண்டை போடுவீங்க. ரொமான்ஸ் பேச்சுவார்த்தைகளுக்கு சிறிய அளவில ரெஸ்பான்ஸ் கிடைக்கும். உங்க பார்ட்டனரை சந்திக்கக்கூடிய வாய்ப்பு குறைவுதான். நண்பர்களோட சேர்ந்து உல்லாச பயணம் போவீங்க. ரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ணாதான் நல்ல ரிசல்ட் கிடைக்கும். மன அழுத்தம் ஏற்படுவதில் இருந்து தப்பிக்க தியானம் பண்ணுங்க. திட்டமிட்டு எதையும் வெற்றிகரமாக முடிங்க நல்லது நடக்கும். உங்க உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்க.

துலாம்

இந்த வாரம் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் என்ன பிரச்சினை வந்தாலும் அதை ஈஸியா சால்வ் பண்ணுவீங்க. இந்த வாரம் நிறைய மாற்றங்கள் ஏற்படும் மனதளவில் அதை ஏற்றுக்கொள்ள தயாராகி விடுங்கள். உங்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கும். உங்களுக்கு பிசினஸ் செய்ய வங்கியில லோனுக்கு முயற்சி பண்ணலாம் பிசினஸ் விரிவு படுத்தவும் லோன் கேட்கலாம் லோன் கிடைக்கும். இந்த வாரம் உங்களுக்கு எல்லாமே பாசிட்டிவ் ரிசல்ட் ஆக இருக்கும்

. உங்க காதல் வாழ்க்கையில இந்த வாரம் சில சங்கடங்கள் ஏற்படலாம். இந்த வாரம் நீங்க காதல் துணையை பற்றி பெற்றவர்கள் கிட்ட சொல்லாதீங்க அவங்க ஏற்றுக்கொள்ள மாட்டாங்க. நீங்க கொஞ்சகாலம் காத்திருங்க அவங்க சம்மதம் கிடைக்கும். அதே போல பண விசயத்திலும் நீங்க கொஞ்சம் கவனமாக இருக்கணும். உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க தேவையில்லாத மன அழுத்தம் உங்களை பாதிக்கும்.

விருச்சிகம்

நமக்கு வேலை கிடைக்கலயே என்று தடுமாறி தவித்து வந்த வேலை இல்லா பட்டதாரிகளுக்கு இந்த வாரம் நல்ல வேலை கிடைக்கும். இருக்கிற இடத்தை விட்டு நீங்க நகரத்திற்கு மாறுவீர்கள். இந்த இடமாற்றத்திற்காக மனதளவில் தயாராகி விடுவீர்கள். எதற்கும் நீங்க உங்க உடம்பை பத்திரமாக பாத்துக்கங்க. இல்லாட்டி உங்களுக்கு உடல்நல பிரச்சினை படுத்தி எடுக்கும். பண விசயத்தில இந்த வாரம் ரொம்ப நல்ல வாரம், புதிய முதலீடுகள் செய்யலாம் ஏற்கனவே செய்த முதலீடுகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாகவும் பிசினஸ் செய்ய திட்டமிடுங்க. உங்க எதிர்காலத்திற்கு திட்டமிடுங்க. கல்யாண வாழ்க்கையும் சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களோட சேர்ந்து சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். உங்க லைஃப் பார்ட்டனரோ உங்களுக்கு உறவு பலப்படும்.

தனுசு

சனி பகவானின் பார்வையில் சிக்கிய உங்களுக்கு இந்த வாரம் நிறைய பிரச்சினைகள் வரலாம். அன்பானவர்கள் கூட உங்களை தவறாக புரிந்து கொள்வார். அவரை சமாதானப்படுத்தவே நேரம் சரியாக இருக்கும், உங்க வேலையில கவனம் செலுத்துங்க நண்பர்கள் கிட்ட அன்பா பேசுங்க. அப்பதான் உங்க நட்பு பலப்படும். கல்யாணம் ஆகாமல் சிங்கிளா இருப்பவர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு வரன் பார்க்க ஆரம்பிப்பாங்க. முக்கியமான நபரை உங்க பெற்றோர்கள் அறிமுகப்படுத்தி வைப்பாங்க. கல்யாணமானராக இருந்தால் உங்க அன்பானவர் கிட்ட நேர்மையாக நடந்துக்கங்க இல்லாட்டி சிக்கலாயிரும். உங்க நிதி நிலமை இந்த வாரம் ரொம்ப நல்லா இருக்கும். வேலை செய்யிற இடத்தில ஹார்ட் ஒர்க் பண்ணுங்க நல்ல வாய்ப்பு வரும்.

மகரம்

இந்த வாரம் வேலை செய்யிற இடத்தில உங்களுக்கு வேலைப்பளு அதிகமாகி அது டயர்ட் ஆக்கிடும். உங்க பெர்சனல் வாழ்க்கையில நீங்க கவனமாக இருங்க இல்லாட்டி சிக்கலாயிரும், வர்த்தகர்களுக்கு இது கலவையான வாரம் லாபமும் நஷ்டமும் கலந்திருக்கும். பணத்தை நிறைய முதலீடு பொருட்களை வாங்கி ஸ்டாக் வைக்காதீங்க. இந்த வாரம் பிசினஸ் செய்பவர்கள் ஒருதடவைக்கு இரண்டு தடவை யோசிச்சிக்கங்க. வீட்லையும் டிஸ்கஸ் பண்ணுங்க. திடீர் பிரச்சினைகள் வீட்டில் எட்டிப்பார்க்கும். உங்க உடல் நலத்தில கவனமாக இருங்க. சமூகப் பிரச்சினையில தலையிடுவீங்க. உங்களுக்கு இந்த வாரம் புதிய நபர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

இந்த வாரம் உங்க வாழ்க்கையில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கும். உங்க நெருங்கிய நண்பர்கள் உங்களை தேடி வருவாங்க. உங்க வாழ்க்கை துணையோ நீங்க இந்த வாரம் பயணம் போவீங்க. உங்களோட உறவு பலப்படும் அன்பால் உங்க துணையை மூழ்கடிப்பீங்க. வேலை செய்யிற இடத்தில உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். பிசினஸ்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு இது ரொம்ப நல்ல பாலம் லாபம் அதிகமாக இருக்கும். உங்க நண்பர்கள் ஆதரவு கிடைக்கும், மாணவர்களாக இருந்தால் உங்களுக்கு ரொம்ப நல்ல வாரமாக இருக்கும். இந்த வாரம் புதிய தொடங்கங்கள் லாபத்தை கொடுக்கும் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

மீனம்

இந்த வாரம் உங்களுக்கு பொருளாதார வளம் அற்புதமாக இருக்கும். உங்க பழைய கடன்களை அடைக்கும் அளவிற்கு உங்களுக்கு வருமானம் வரும், நிறைய பணம் வருதேன்னு செலவு பண்ணிடாதீங்க சேமிக்க தொடங்குங்க. இல்லாட்டி சிக்கலாயிரும். உங்க வேலைகளை எல்லாம் முடிச்சிருங்க. உங்க சீனியர்ஸ் கொடுக்கிற வேலைகளை எல்லாம் முடிச்சிட்டா ரொம்ப நல்லது. வர்த்தகர்கள் எதையும் புதுசா ஆரம்பிக்காதீங்க இல்லாட்டி நஷ்டத்தை சந்திக்கணும். உங்க கோபத்தை கட்டுப்படுத்துங்க இல்லாட்டி வீடு ரணகளமாயிரும். உங்களுக்கு மன அழுத்தமும் அதிகமாயிரும், உடல் நலத்தில கவனமாக இருங்க சின்னச் சின்ன பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும்.