புத்தாண்டு ராசி பலன்கள் : துலாம் ராசிக்காரர்களுக்கு தூக்கி அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்!

Report
350Shares

2020 ஆம் ஆண்டில் நமக்கு புதிய நல்ல வேலை கிடைக்குமா என்று சிலர் யோசிக்கலாம். சில ராசிக்காரர்களோ, திருமணத்திற்கு பெண் பார்க்கலாமா இந்த ஆண்டாவது திருமணம் முடியுமா என்றும் யோசிப்பார்கள். அதே போல இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு போகலாமா என்றும் யோசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகவே இந்த புத்தாண்டு பலன்களை தருகிறோம். உங்களின் பல கேள்விகளுக்கும் இந்த புத்தாண்டு பலன்களில் விடை கிடைக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. 2020ஆம் ஆண்டு பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

2020ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் கும்பத்தில் சந்திரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. ரிஷபத்திற்கு புத்தாண்டு அருமையான யோக பலன்களை தரப்போகிறது. 2020 புத்தாண்டில் முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சிதான் ஆண்டின் துவக்கமான ஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு சனி திருக்கணிதப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார்.

துலாம் ராசிக்காரர்களே, உங்களுக்கு 2020 ஆம் ஆண்டு நல்ல பலன்களை தரப்போகிறது. யோகங்கள் வரப்போகிறது. உங்க ராசிக்கு மூன்றாம் அதிபதி வலுவாக ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். அதே போல நான்காம் அதிபதி நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சனி உங்க ராசியில் உச்சம் பெறும் கிரகம், அவர் ஆட்சி பெற்று அமர்வது அற்புதமான யோகங்களை தரப்போகிறது.

யோகமான ஆண்டு

2020 ஆம் ஆண்டு அற்புதமான யோகம் நிறைந்த ஆண்டாக உள்ளது. மாற்றங்களும் ஏற்றங்களும் நிறைந்த ஆண்டாக உள்ளது. உங்களுடைய ராசிக்கு சனி கேது இது அற்புதமான ஆண்டு சனி மூன்றாம் வீட்டில் இருந்து நான்காம் வீட்டிற்கு பெயர்ச்சி அடைகிறார். சனி நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது யோகம், பித்ரு தோஷம் விலகப் போகிறது. அரசு பணியில் இருப்பவர்களுக்கு இது நல்ல காலம் பதவி உயர்வோடு இடமாற்றம் கிடைக்கும். செல்வ வளம் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தேடி வரும்

குரு மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். பலமான அமைப்பு திருமண யோகம் கை கூடி வருகிறது. காரணம் குருவின் பார்வை உங்க ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். பெண்களுக்கு மனதிற்கு பிடித்த கணவன் அமைய வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சுபகாரியங்கள் வந்து சேரும்.

தொழில் வளர்ச்சி

சனி நான்காம் வீட்டில் அமர்ந்தாலும் உங்க ராசியின் மீது பார்வை விழுகிறது. வளர்ச்சி அதிகரிக்கும். வேலையில் மாற்றம் வரும் கூடவே முன்னேற்றமும் வரும். பாதுகாப்பான நல்ல வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். பிசினஸ்ல நல்ல வளர்ச்சியும் வருமானமும் கிடைக்கும். உங்க ராசிநாதன் சுக்கிரன் மெதுவாக நகர்கிறார். அரசியல்வாதிகள் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். பதவிகள் தேடி வரும்.

மாணவர்களுக்கு

இந்த ஆண்டில் கேது மூன்றாம் வீட்டில் இருக்கிறார். துன்பங்கள் விலகும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். மாணவர்களுக்கு உயர்கல்விக்கு யோகமான ஆண்டு. பாக்ய ஸ்தானத்தை குரு பார்க்கிறார். நினைத்த பல்கலைக்கழகங்களில் படிக்கும் யோகம் வரும். என்றாலும் சனி நான்காம் வீட்டில் இருப்பதால் அதிகமாக கவனம் எடுத்து படிப்பது அவசியம்.

அபிராமி அன்னை

ஏற்றுமதி வியாபாரம் வெளிநாடு தொடர்புடைய வியாபாரம் நன்றாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் யோகம் வருகிறது. உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. பெரிய அளவில் பணமுதலீடு செய்து ரிஸ்க் எடுக்க வேண்டாம். திருக்கடையூர் அன்னை அபிராமியை வழிபட வேண்டும். திருச்செந்தூர் முருகனை குடும்பத்தோடு சென்று வழிபட்டு வாருங்கள்.

loading...