இந்த ராசிக்காரர்கள் தான் உங்களுக்கு ஏற்ற ஜோடி! திருமணம் செய்தால் உங்கள் காலடியில் தான் சொர்க்கம்

Report
346Shares

ஜோதிடத்தில் எந்தெந்த ராசிகள் தம்பதியாக சிறந்து விளங்குவார்கள். எந்தெந்த ராசி சரியான ஜோடியாக இருக்காது என கணித்து கூற முடியும்.

நீரும் நெருப்பும் சேராது என்பது போல தான் இந்த கணிப்புகள். நீரை அடிப்படையாகக் கொண்ட ராசி, நெருப்பை அடிப்படையாக கொண்ட ராசியுடன் சேராது.

அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் நிறைய வரும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றன. இந்த வகையில் எந்த ராசிக்கு, எந்த ராசி மிக பொருத்தமாக இருக்கும் என இனிக் காணலாம். இப்படி திருமண ஜோடிகள் அமைந்தால் அவர்களின் காலடியில் தான் சொர்க்கமே.

சிம்மம் மற்றும் தனுசு

இவர்கள் ஒருவரை ஒருவர் அளவுக்கு அதிகமாக காதலிக்கும் பண்புக் கொண்டிருப்பார்கள். இதை தங்களது பேரார்வம் என கருதுவார்கள். இவர்களுக்குள் கேலி, கிண்டல் புரிதல் என அனைத்தும் சிறந்தே விளங்கும். வாழ்க்கையை அனுபவிக்க பிறந்தவர்கள் போல திகழ்வார்கள்.

மேஷம் மற்றும் கும்பம்

மேஷம் மற்றும் கும்பம் மத்தியில் எந்த குறைபாடும் தோன்றாது. இவர்கள் தங்கள் உறவை உச்ச அளவில் கொண்டடுபவர்களாக இருப்பார்கள். தங்கள் வாழ்க்கையின் எந்த கட்டத்தையும் புதுமையாக நகர்த்தி செல்ல விரும்புவார்கள். இவர்கள் இருவர் மத்தியிலான இல்வாழ்க்கை அதிக பிணைப்புடன் காணப்படும்.

ரிஷபம் மற்றும் கடகம்

ரிஷபம் மற்றும் கடகம் உறவை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடியவர்கள். ஒருவர் மீது ஒருவர் மிக நெருக்கமான உறவில் இருப்பார்கள். உடல் மற்றும் மனதளவில் மிக இறுக்கமாக இருக்கக் கூடியவர்கள். புரிதல் மிகுந்த தம்பதியாக காணப்படுவார்கள். இவர்களது உறவின் நீளம் வலுமையாக இருக்கும்.

ஜெமினி மற்றும் கும்பம்

ஜெமினி மற்றும் கும்பம் மிகவும் சந்தோசமாக காணப்படுவார்கள். உளவியல் ரீதியான பிணைப்பு இவர்களிடம் அதிகமாக காணப்படும். எந்த ஒரு செயலாக இருப்பினும், முழு மனதோடு, முழுமையாக செய்யும் குணம் கொண்டிருப்பார்கள். இவர்கள் மத்தியில் படைப்பாற்றல் திறன் மிகுதியாக இருக்கும். மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கையை சந்தோசமாக வாழும் தம்பதியாக திகழ்வார்கள்.

கடகம் மற்றும் மீனம்

கடகம் மற்றும் மீனம் இருவரும் நீர் பிரிவை சார்ந்த ராசிகள். இவர்கள் உள்ளுணர்வால் பிணைக்கப்பட்டிருப்பார்கள். ஒருவர் மீது ஒருவர் தீராத அன்பும், பெருமிதமும் கொண்டிருப்பார்கள். இது தான் இவர்களது இல்வாழ்க்கை சிறக்க உதவுகிறது.

துலாம் மற்றும் ஜெமினி

அறிவுசார்ந்து பெரும் நெருக்கம் கொண்டவர்களாக துலாம் மற்றும் ஜெமினி இராசிக்காரர்கள் திகழ்வார்கள். இவர்கள் மத்தயிலான மனநிலை சிறந்து இருக்கும். தாம்பத்தியத்தில் சிறந்து விளங்கும் ஜோடியாக இவர்கள் திகழ்வார்கள். ஒருவரை ஒருவர் பாராட்டுவதில் தயக்கம் காட்டமாட்டார்கள்.

விருச்சிகம் மற்றும் கடகம்

சில சமயங்களில் இவர்களுக்குள் ஒத்துப்போகது. ஆனால், உணர்ச்சி ரீதியான விஷயங்களில் நொடியில் ஒட்டிக் கொள்வார்கள். ஒருவருக்கு ஒருவர் மிக இணக்கமாக காணப்படுவார்கள். ஒருவர் மற்றொருவரது கனவுக்காக தங்களால் முடிந்த வரை உழைப்பார்கள். இவர்களுக்கு மத்தியில் சமநிலை இருக்கும். இது இவர்களது இல்வாழ்க்கை சிறக்க பயன்படும்.

தனுசு மற்றும் மேஷம்

இருவருமே நெருப்பை சார்ந்த இராசிகள். இவர்கள் மத்தியில் இல்லறம், தாம்பத்தியம் கொஞ்சம் அனல் பறக்கும். இவர்களது இல்வாழ்க்கை மிகவும் வலிமையாகவும், நெருக்கமாகவும் இருக்கும்.

மகரம் மற்றும் ரிஷபம்

எல்லையற்ற கனவுக் கொண்டிருப்பார்கள், அதீத காதல், கெமிஸ்ட்ரி என அனைத்திலும் இவர்கள் கொஞ்சம் கெட்டியாக, சுட்டியாக இருப்பார்கள். தன் துணைக்கு முழுமையான மகிழ்ச்சியை பரிசளிக்க முயல்வார்கள். உண்மையான காதல், துணைக்கு சின்சியராக இருப்பது போன்றவை இவர்களது உறவின் பலம்.

கும்பம் மற்றும் ஜெமினி

கும்பம் மற்றும் ஜெமினி வெறித்தனமான உளவியல் இணைப்பு கொண்டிருப்பார்கள். இது இவர்களது உறவு மற்றும் அன்பின் ஆழத்தை எடுத்துக் காட்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், சமூகம் என பேசும் என்பதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல், தங்கள் வாழ்க்கையை முன்னிறுத்தி பயணிக்கும் பண்புக் கொண்டிருப்பார்கள். ஒருவர் மற்றொருவர் மனம் காயப்பட்டுவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார்கள்.

மீனம் மற்றும் விருச்சிகம்

இவர்கள் பெரிதாக ஒருவரை பற்றி ஒருவர் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் அறிவுசார்ந்த ஜோடி எனவும் கூற முடியாது. ஆனால், மற்றவரது ஆசை மற்றும் உணர்வுகளை புரிந்துக் கொள்வார்கள். ஒருவர் மீது ஒருவர் மதிப்பு வைத்திருப்பார்கள், ரொமாண்டிக்காக செயல்பட அஞ்ச மாட்டார்கள்.