2020 புத்தாண்டு ராசிபலன்... ரிஷப ராசிக்காரர்களே! அதிர்ஷ்டத்தோடு அற்புதம் நிகழுமாம்

Report
314Shares

2020 ஆம் ஆண்டில் நமக்கு புதிய நல்ல வேலை கிடைக்குமா என்று சிலர் யோசிக்கலாம். சில ராசிக்காரர்களோ, திருமணத்திற்கு பெண் பார்க்கலாமா இந்த ஆண்டாவது திருமணம் முடியுமா என்றும் யோசிப்பார்கள். அதே போல இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு போகலாமா என்றும் யோசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகவே இந்த புத்தாண்டு பலன்களை தருகிறோம். உங்களின் பல கேள்விகளுக்கும் இந்த புத்தாண்டு பலன்களில் விடை கிடைக்கும். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு அற்புதங்களை நிகழ்த்தப்போகும் ஆண்டாக அமையப்போகிறது.

2020ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் கும்பத்தில் சந்திரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. ரிஷபத்திற்கு புத்தாண்டு அருமையான யோக பலன்களை தரப்போகிறது. சுக்கிரன் 9 ஆம் இடத்தில் இருக்கும் போது புத்தாண்டு பிறக்கிறது. இரண்டாம் வீட்டில் ராகு, ஏழாம் வீட்டில் செவ்வாய், எட்டாம் வீட்டில் சனி, கேது, குரு, சூரியன், புதன் என ஐந்து கிரகங்கள் கூட்டணி அமைந்துள்ளது. பத்தாம் வீட்டில் சந்திரன் என அமைந்துள்ளது.

2020 புத்தாண்டில் முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சிதான் ஆண்டின் துவக்கமான ஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். அதிசாரமாக மகரத்திற்கு சென்று சில மாதம் சஞ்சரிக்கிறார். பின்னர் தனுசுக்கு வந்து மீண்டும் ஆண்டு இறுதியில் மகரத்திற்கு இடம்பெயர்கிறார். 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராகு பகவான் மிதுனம் ராசியிலிருந்து கால புருஷனுக்கு இரண்டாவது ராசியான நில ராசி மற்றும் சுக்கிரனின் ராசியில் பெயரும் காலம் அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் பெருகும். நெஞ்சு வலி, இதய கோளாறுகள் போன்ற பாதிப்புகள் அதிகரிக்கும். கேது பகவான் கால புருஷனுக்கு 8வது ராசியான விருச்சிகத்திற்கு பெயரும் காலம் திடீர் அரசியல் மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் மந்த நிலை மறையும். திடீரென முன்னேற்றம் ஏற்படும்.

நல்ல காரியங்கள் நடக்கும்

எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்த உங்களுக்கு 2020ஆம் ஆண்டு அற்புதமாக அமையப்போகிறது. உற்சாகமாக இருப்பீர்கள். மீடியத்துறை, அழகியல் துறையில் உள்ளவர்களுக்கு நல்லது அதிகம் நடைபெறும். புதிய வேலைகள் கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். அதிர்ஷ்டம் வேலை செய்யும். குரு எட்டாம் வீட்டில் அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தருகிறார். இரண்டாம் வீட்டில் உள்ள ராகு மீது குரு பார்வை விழுவதால் பணவரவு அதிகமாக இருக்கும். சனி பார்வை ஆறாம் வீட்டின் மீது விழும் காலத்தில் நோய்கள் தீரும் கடன்கள் அடையும். இந்த ஆண்டு ரிஷபத்திற்கு அற்புதமாக இருக்கும் வரவேற்க தயாராகுங்கள்.

குழந்தை பாக்கியம்

கல்யாண கனவுகள் நிறைவேறும். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வெளிநாட்டு வருமானம் கிடைக்கும். காதல் திருமணம் செய்பவர்களுக்கு அற்புதமான கால கட்டம். திருமணம் செய்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் எத்தனையோ சங்கடங்களை சந்தித்து வந்த உங்களுக்கு இது நோய்கள் நிவர்த்தியாகும் காலம். குரு நோய்களை தீர்ப்பார். வீட்டிற்குத் தேவையான ஆடம்பார பொருட்கள் வாங்குவீர்கள்.

சனி, குரு சாதகம்

அஷ்டமத்து சனி, குரு என இருந்தாலும் நீங்க பயப்பட வேண்டாம். இந்த ஆண்டு பல அற்புத பலன்களை தரப்போகிறது. சனி உங்க யோகாதிபதி. அவர் ஆட்சி பெற்று அமரப்போவது அற்புதமான பலன்களை தரப்போகிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். போராட்டங்கள் முடிவுக்கு வரும்.

வேலையில் இருந்த பிரச்சினைகள் விலகும். சனியின் பார்வையால் பறிபோன வேலைகள் கூட புதிதாக தேடி வரும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்தநிலை மாறும். உயர்கல்வி யோகங்கள் தேடி வரும் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு நல்ல மாற்றங்கள் ஏற்படும். படிப்பில் ரொம்ப கவனமாக இருங்க.

யோகமான புத்தாண்டு

பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கணவருக்கும் நல்ல வேலை அமையும். கணவன் மனைவி இடையே இருந்த கோப தாபங்களை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் சண்டைகளை பெரிது படுத்தாமல் விட்டு கொடுத்து போங்க. வியாபாரத்தில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை. அதிகமாக முதலீடு பண்ணாதீங்க. வீடு கட்டும் யோகம் சிலருக்கு தேடி வருகிறது. பிள்ளைகள் மீது அக்கறை காட்டுங்கள் விட்டுக்கொடுத்து போங்க. மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும். அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு போய் வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நல்லதே நடக்கும்.