சிம்ம ராசியில் கம்பீரமாக சூரியன்!... இந்த மாதம் அதிர்ஷ்டம் கொட்டப் போவது இவர்களுக்கு தானாம்

Report
260Shares

ஆவணி மாதம் சிம்மம் மாதம். சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம். தனது வீட்டில் கம்பீரமாக வலம் வரப்போகிறார் சூரியன்.

கூடவே சுக்கிரன், செவ்வாய், புதன் என கிரகங்கள் இணைகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி ஒருபக்கம் இருக்க மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் சனி கேது விருச்சிகத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

மேஷம்

ஆடி முடிந்து ஆவணி பிறந்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு உற்சாகம்தான். மிகப்பெரிய யோகம் காத்திருக்கிறது. இதுநாள்வரை இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உங்க பூர்வ புண்ணியாதிபதி ஆட்சி பெற்று அமர்கிறார். திருப்தியான காலகட்டம். அதிக வருமானம் கிடைக்கும். பிரச்சினைகள் ஆவணியில் தீரும் சிம்ம ராசியில் சூரியன், சுக்கிரன், செவ்வாய் உடன் புதன் இணைகிறார். தன்னம்பிக்கை துணிச்சல் அதிகரிக்கும். புதன் ஐந்தில் வருவதால் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். லாப ஸ்தானத்தை கிரகங்கள் பார்ப்பதால் பண வருமானம் கூடும் மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

ஆவணி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வசதிகள் அதிகம் கிடைக்கும். சூரியன் சுக்கிரன் இணைந்து செவ்வாயுடன் சுக ஸ்தானமான 4ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். ஆடை அணிகலன்கள், சொத்து சேர்க்கைகள் ஏற்படும். குருவின் பார்வை உங்க ராசி மீது விழுவதால் எதையும் தைரியமாக தொடங்குவீர்கள். ஆவணியில் புதிய விசயங்களை செயல்படுத்துவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

ரிஷப ராசிக்கு நன்மைகள் நடைபெறும் மாதம் என்றாலும் அஷ்டம சனி ஞாபக மறதியை தருவார். சோம்பலை தவிர்த்து விடுங்கள். படைப்பாளிகளுக்கு நன்மைகளை தரும். பெரியவர்களின் மனம் வருத்தப்படும் படி செய்ய வேண்டாம். தொட்டது துலங்கும். வண்டி வாகனம் வாங்கலாம். வார்த்தையில் நிதானம் தேவை. வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. மனதில் இனம் புரியாத பயம் ஏற்படும். யோகா செய்யவும். சிவ ஆலய தரிசனம் நல்லது பசு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்

மிதுனம்

ஆவணி மாதம் மிதுனம் ராசிக்காரர்களுக்கு அற்புதம் மூன்றாம் வீட்டில் கிரகங்களின் சஞ்சாரத்தால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆட்சி பெற்ற சூரியனால் பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிந்து செயல்படுவீர்கள். விளையாட்டு துறையில் இருப்பவர்கள் வெற்றி பெறுவீர்கள் செல்வாக்கு புகழ் தேடி வரும். செவ்வாய் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியாக இருக்கும். தகவல் தொடர்பு விரிவடையும்.

தொட்டது துலங்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். வெளியூர் வெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல் வரும். ஒதுக்கியவர்கள் நட்பு பாராட்டுவார்கள். பணம் கொடுக்கல்வாங்கல் முடிவுக்கு வரும். கடல் கடந்த பயணம் நன்மையில் முடியும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். கால் கை மூட்டுக்களில் பிரச்சினைகள் வரலாம். குடும்ப விசயத்தில் கவனம் தேவை. காதலர்கள் கவனம் தேவை.

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு ஆவணி மாதம் அதிர்ஷ்டம் தரும் மாதமாக அமையும். சூரியன் 2ஆம் வீட்டில் ஆட்சி பெறுவதால் உற்சாகமாக இருப்பீர்கள். ஆவணியில் குருவின் முழு பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. குருவின் பரிபூரண அருளினால் நன்மைகள் நடக்கும். சூரியன் செவ்வாய் சுக்கிரன் 2ல் ஐந்தில் குரு, ஆறில் சனி கேது இருக்கின்றனர். எதிரிகளின் விசயத்தில் கவனம் தேவை. ஆவணியில் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு செலவுகளும் அதிகம் வரும். வக்ர கடன் வாங்க வைப்பார்.

இரண்டில் சுக்கிரன் இருப்பதால் பணத்தட்டுப்பாடு தீரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நடக்கும். மிகப்பெரிய வெற்றியை தக்கவைக்கலாம். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். பணத்தை திட்டமிட்டு செலவு பண்ணுங்க. வேலைக்கு செல்பவர்களுக்கு சிறப்பான மாதம். கல்யாண கனவுகள் நனவாகும். முன்னேற்றமான மாதம் வார்த்தையில் கவனம் காரணம் செவ்வாய் 2ஆம் வீட்டில் சூரியன் இருக்கின்றனர். வண்டி வாகனத்தில் செல்லும் பிள்ளைகளின் உடல் நலத்தில் கவனம்.

சிம்மம்

பெரிய மாற்றங்கள் நிறைந்த மாதம். ஆவணி ஒன்பதாம் தேதிக்கு மேல் பணப்பிரச்சினைகள் தீரும். சுறுசுறுப்பாக இருங்கள். ராகு 11ல் இருக்கிறார். புதன் 12ல் இருந்தாலும் ஒன்பதாம் தேதி ராசிக்கு வருகிறார். ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் இணைந்திருப்பது சிறப்பு. மாத இறுதியில் சுக்கிரன் நீசமானாலும் கவலை வேண்டாம் ராசி நாதன் புதன் ஆட்சி உச்சம் பெறுவதால் நீசபங்கமாகிவிடுவார்.

வெளிநாடு முயற்சிகளை ஒத்திப்போடுங்க ஐப்பசியில் இருந்து கூடி வரும். குடும்பத்தை பிரிந்தவர்கள் இந்த மாதம் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. விடா முயற்சி விஸ்வரூப வெற்றியாக அமையும். ஜாமீன் கையெழுத்து போடவே வேண்டாம். கண்களில் பரிசோதனை தேவை. நரம்பு பிரச்சினைகளில் கவனம். உத்யோகத்தில் பிரச்சினை வரும் ஜாக்கிரதையாக இருக்கவும். பிள்ளைகளை விட்டுப்பிடிங்க. பேசாமல் இருப்பது நல்லது அநாவசிய பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு வீண் விரையங்கள் ஏற்படும். தேவைக்கான பணத்தை கண்டிப்பாக வைத்துக்கொள்ளவும். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். பணத்தில் சிக்கனம் தேவை. புலம்பலை குறையுங்கள் வேலை செய்யும் இடத்தில் பேச்சுக்களை குறையுங்கள்.

ஆவணியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம். பெரிய அளவில் முதலீடு செய்யும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவும். கடன் வாங்கி முதலீடுகளோ செலவுகளோ செய்ய வேண்டாம். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நரம்பு பிரச்சினைகள் வரும். சொத்துக்கள் வீடு, மனை வாங்கும் போது ஆலோசனைகள் அவசியம். ரத்த உறவுகள் விசயத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதில் தெய்வ நம்பிக்கை இருப்பவர்களுக்கு பாதிப்புகள் குறையும்.

துலாம்

ஆவணி மாதத்தில் துலாம் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், பத்தாம் வீட்டில் புதன், பாக்ய ஸ்தானத்தில் ராகு, இரண்டாம் வீட்டில் குரு, மூன்றாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் செய்யும் தொழிலில் வியாபாராத்தில் லாபம் அதிகம் வரும். நீண்ட நாட்களாக இருந்த மனக்கஷ்டம் நீங்கும். உத்யோகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.

செவ்வாய் சூரியன் சஞ்சாரத்தினால் பூமி சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமணம் சுபகாரியத்தில் இருந்த தடைகள் நீங்கும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும். ஆவணி மாதத்தில் தன்னம்பிக்கை கூடும் யோகங்கள் அதிகரிக்கும். படைப்பாளிகளுக்கு படைப்புகள் பாராட்டப்படும், தம்பதியர் இடையே நெருக்கம் கூடும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் வரும். தாய்வழி உறவுகளில் இருந்த பாதிப்புகள் நீங்கும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு சங்கடங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை காரணம் மாத இறுதியில் சுக்கிரன், புதன் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் சுப செலவுகளாக மாற்றுங்கள். மாத இறுதியில் வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரும்.மருத்துவ ஆலோசனை தேவை. திங்கட்கிழமையில் விநாயகரை வணங்க நன்மைகள் நடைபெறும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

விருச்சிகம்

ஆவணி மாதத்தில் விருச்சிகம் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் தொழில் ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், ஒன்பதாம் வீட்டில் புதன், எட்டாம் வீட்டில் ராகு, ஜென்மத்தில் குரு, இரண்டாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இடமாற்றம் ஏற்படும் அந்த மாற்றம் நன்மையை தரும். அரசு உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். வாக்கு ஸ்தானத்தில் சனி பிரச்சினையை தருவார் கூடா நட்பு கேடு தரும். அதே நேரத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். செல்வாக்கு உயரும்.

மருத்துவ ஆலோசனைகள் எடுப்பது அவசியம் பாத சனி கால்களில் பிரச்சினையை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகள் பலரால் பாராட்டப்படும். அரசியல்வாதிகளுக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஜென்ம குருவினால் உடல்நல பிரச்சினைகள் தீரும். கடல் கடந்த பயணங்களினால் இந்த மாதம் வெற்றி கிடைக்கும். குல தெய்வ வழிபாடு நன்மையை தரும். வீட்டில் அகல் தீபம் ஏற்றி வணங்க பிரச்சினைகள் தீரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே ஏழாம் வீட்டில் ராகு எட்டாம் வீட்டில் புதன் ஒன்பதாம் வீட்டில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் குரு, ஜென்ம ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஏழரை சனியின் பாதிப்பினால் இருப்பவர்கள் உடல் நலத்திலும் அக்கறை காட்டுங்கள். பணம் குடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமாக இருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அப்படி போட்டால் உங்களுக்கு பிரச்சினையும் சிக்கலும் வரும்.

ஜென்ம சனியால் பிரச்சினை வரும் தொழிலில் கவனமாக இருக்கவும். நண்பர்கள் உறவினர்களை சந்திப்பீர்கள். தனுசு ராசிக்காரர்கள் மூட்டுக்கள் பாதத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் கவனம் தேவை. யாரையும் முழுதாக நம்பாதீர்கள். அதிகம் பேச வேண்டாம் உணர்ச்சிவசப்பட வேண்டாம். சோம்பல் வேண்டாம் வேலையில் அக்கறை காட்டுங்கள் இல்லாவிட்டால் பாதிப்புகள் வரும். கணபதி வழிபாடு நன்மை தரும் தினசரியும் கணபதி காயத்ரி சொல்லுங்கள் பாதிப்புகள் குறையும்.

- One India