நாளை சந்திர கிரகணம்! இதையெல்லாம் செய்யாதீர்கள்

Report
344Shares

நாளை அதிகாலை சந்திர கிரகணம், இதன் போது கதிர்வீச்சுகள் அதிகம் இருக்கும் என்பதாலும், அவை நம்மீது படும் என்பதாலும், நாம் கிரகணம் முடியும் வரை சில விடயங்களை செய்யக்கூடாது என்றும் கூறப்படுகிறது.

கிரகணம் ஆரம்பம்

ஜூலை 17 அதிகாலை 1 மணி 30 நிமிடம் 52 விநாடி முடிவு அதிகாலை 4 மணி 30 நிமிடம்.

கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள்

பூராடம், உத்திராடம்,திருவோணம், கிருத்திகை,உத்திரம் கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ளவும்.

கிரகணத்தின் போது கண்டிப்பாக இந்த விடயங்களை செய்யாதீர்கள்..

மேற்கொண்ட ராசியினர் இன்று இரவு உணவினை 6 மணிக்குள் சாப்பிட்டு முடித்து விடுங்கள்.பெண்கள் மாலை நேரத்தில் தலையில் பூக்கள் வைத்துக்கொள்வதை தவிர்க்கவும். அப்படியேனும் முக்கியமாக மலர் சூட வேண்டுமென்றால் மதியம் 12 மணிக்கு முன்பே செய்து விடுங்கள்.

ஏனென்றால் சுக்கிரனின் கிழமையான வெள்ளிக் கிழமையில் கிரகணம் ஆரம்பித்து சுக்கிரனுடைய கிரகண வீடான 8-ல் மறைவதால் மேற்கொண்டவர்கள் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது.

அப்படியேனும் தவிர்க்க முடியாத நிலையில் நீங்கள் வெளியே வந்தால் நீங்கள் அணிந்திருக்கும் மேலாடையில் நுனியில் சிறிது நெல் அல்லது பச்சரிசியை முடித்த வைத்துக்கொண்டு செல்லுங்கள்.

முன்னோர்க்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கிரகணம் முழுதாக முடிந்த பின் கொடுக்க வேண்டும்.கணவன் மணைவி கிரகன காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளவே கூடாது.ஏனென்றால் கிரகன சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குழந்தை குறையுடன் பிறக்க நேரிடும். ஆக உடலுறவை தவிர்ப்பது நல்லது.

11816 total views