பிறந்த எண் இதுவா? இதை செய்ங்க வாழ்வில் செல்வம் குறையாமல் நிலைத்திருக்குமாம்!

Report
423Shares

ஜோதிடம் என்பது பெரும்பாலான மக்கள் விரும்பி பார்க்கக்கூடிய ஒரு விடயமாகும். அன்றைய தினத்தில் தனது ராசிப்படி தனக்கு என்ன நடக்கப்போகின்றது என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் நடந்து கொள்வது அதிகமானோரின் வழக்கமாக இருந்து வருகின்றது.

ராசிப்படி மட்டுமல்லாமல், பிறந்த நட்சத்திரம், பிறந்த நாள் இவற்றினைக் கொண்டும் பல ரகசியங்களையும், நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளலாம். தற்போது பிறந்த எண்ணைக் கொண்டு நம் வாழ்வில் செல்வம் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது காணலாம்.

பிறந்த எண் 1

மாதத்தின் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 1 ஆகும். இவர்கள் இயற்கையிலேயே தலைமை பண்பு உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இனிப்பு சாப்பிடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். இவர்களுக்கு ரூபி கற்கள் அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடியவை ஆகும். மேலும் தினமும் காலையில் சூரியனை தண்ணீர் வைத்து வழிபடுவது இவர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை உண்டாக்கும்.

பிறந்த எண் 2

மாதத்தின் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 2 ஆகும். நீங்கள் திங்கள் கிழமையில் விரதம் இருப்பது நல்லது அல்லது உணவில் உப்பை குறைவாக போட்டு சாப்பிட முயற்சி செய்யுங்கள். இவர்கள் திங்கள் கிழமையில் வெள்ளை நிற துணியை அணிவதும், வாழைமரத்திற்கு தண்ணீர் விடுவதும் நல்லது.

பிறந்த எண் 3

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 3 எண்ணால் ஆளப்படுகிறார்கள். இவர்கள் ஆரோக்கியம் மற்றும் செல்வத்திற்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற உடையணிய வேண்டும். நீங்கள் விஷ்ணுவை வணங்குவது நல்லது. நீங்கள் விரலில் புஷ்பராகம் அணிவது நல்லது.

பிறந்த எண் 4

உங்கள் பிறந்த தேதி 4, 22, 13, 31 ஆகா இருந்தால் உங்களின் பிறந்த எண் 4 ஆகும். நீங்கள் தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. தினமும் வழிபட முடியவில்லை என்றாலும் புதன்கிழமைகளில் கண்டிப்பாக வழிபட வேண்டும். உங்களின் பிறந்த தேதிக்கான ராசிக்கல் கோமேதகம் ஆகும். விநாயகரை கோவிலுக்கு சென்று வழிபட முடியவில்லை என்றாலும் வீட்டிலேயே வழிபடலாம்.

பிறந்த எண் 5

மாதத்தின் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 5 ஆகும். நீங்கள் ஒவ்வொரு புதன் கிழமையும் பசுவிற்கு புல் கொடுத்து வழிபடுவது நல்லது. விநாயகரை வழிபடுவது உங்களுக்கு அனைத்திலும் வெற்றியை பெற்றுத்தரும். ராசிக்கல்லை பொறுத்தவரை மரகத கல்லை அணிவது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

பிறந்த எண் 6

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 6 ஆகும். நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று இனிப்பு சாப்பிடுவது நல்லது. ராசிக்கல்லை பொறுத்தவரை நீங்கள் பவளம் அணிவது உங்கள் வாழ்வில் பல அற்புத மாற்றங்களை உண்டாக்கும். மேலும் வாழ்க்கையில் நிம்மதி பெருக அருளை பெற " ஓம் த்ரா, திரி, த்ரூ சா சுகாய நமஹ " என்ற மந்திரத்தை கூறி வழிபடவும்.

பிறந்த எண் 7

நீங்கள் 7,16,25 இல் பிறந்திருந்தால், நீங்கள் 7 என்ற எண்ணால் ஆளப்படுகிறீர்கள். நீங்கள் நாய்க்கு தினமும் உணவளிப்பது உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை வழங்கும். சிவபெருமானை மறக்காமல் வழிபட வேண்டும். நீங்கள் வைடூரிய கற்களை அணிய வேண்டும். நீங்கள் கூற வேண்டிய மந்திரம் " கம் கீ, கௌ சா, கேத்வா நமஹ " ஆகும்.

பிறந்த எண் 8

நீங்கள் மாதத்தின் 8,17,26 அன்று பிறந்திருந்தால், நீங்கள் 8 என்ற எண்ணால் ஆளப்படுகிறீர்கள். நீங்கள் சனிக்கிழமை தோறும் அரசமரத்திற்கு தண்ணீர் ஊற்றுவதுடன் சனிபகவானுக்கு தீபமேற்றி வழிபட வேண்டும். நீங்கள் நீல நிற கற்களை அணிவது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். சனிக்கிழமைகளில் விரதமிருப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

பிறந்த எண் 9

நீங்கள் மாதத்தின் 9,18,27 அன்று பிறந்திருந்தால், நீங்கள் 9 ஆம் எண்ணால் ஆளப்படுகிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் நீங்க செவ்வாய் கிழமையில் அனுமனை வழிபட வேண்டும். மேலும் அந்த நாளில் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. உடல்நலம் மற்றும் செல்வத்திற்கு நீங்கள் அணிய வேண்டியது பவளம் ஆகும். நீங்கள் கூற வேண்டிய மந்திரம் " ஓம் பிரஹ் பிரிஹ், ப்ரோ சா பிரம்மய நமஹ " என்பதாகும்.

loading...