சனியின் கோரப்பார்வையில் இருந்து தப்பிய மேஷ ராசிக்கு குருவால் நடக்க போகும் அதிரடி மாற்றம்! 2019 ஜூலை மாதம் முழுவதும் இது பழிக்கும்?

Report
408Shares

ஜூலை மாதம் மேஷம் ராசிக்காரர்களுக்கு அதி அற்புதமான மாதம். ஜூலை மாதம் கொண்டாட்டமான மாதம் மாற்றங்களும் ஏற்றங்களும் நிறைந்த மாதம். செவ்வாய் 4ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார் நீசம் இடத்தில் இருந்தாலும் குருவின் பார்வையை பெருவதால் அற்புதமான யோகம்.

கடக ராசிக்கு அதிபதி சந்திரன் செவ்வாய் உடன் இணைகிறார். நீசமடைந்திருக்கும் உங்கள் ராசி அதிபதியின் பலஹீனத்தை சரி செய்கிறார். உங்களின் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

செவ்வாய் நீசம் பெற்றாலும் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். குருவின் பார்வை செவ்வாய் மீது பதியும் காலம் தொழில் புது முயற்சி ஏற்படும். புதிய கட்டடம் கட்டலாம். செவ்வாய் புதனோடு இருப்பதால் நன்மை அதிகரிக்கும்.

மூன்றாம் வீட்டில் சுக்கிரன் சூரியன் ராகு ஒரே வீட்டில் சஞ்சரிப்பதால் பூமி, செங்கல் கட்டிடத்தொழில் மருந்து ரத்தம் தொடர்பான தொழில் காவல்துறை, அரசு துறை சார்ந்தவர்கள்.

உணவு தொடர்பானது நெருப்பு தொடர்பான தொழில்கள் நல்ல லாபத்தை தரும். 17ஆம் தேதிக்கு மேல் நான்காம் வீடான கடகத்தில் சூரியன் செவ்வாய், புதனுடன் இணைகிறார். சுக்கிரனும் 24ஆம் தேதி கடகத்தில் கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் அதி அற்புதமான மாற்றங்கள் ஏற்பட உள்ளது.

சுக்கிரன் ராகு கூட்டணி

திருமண பொருத்தம் பார்க்கலாம் அற்புதமாக பொருந்தி வரும். ஏழாம் இடத்து அதிபதியான களத்தரகாரகன் சுக்கிரன் மூன்றாம் இடத்தில் ராகு சூரியனுடன் இணைவது சிறப்பம்சம். காதல் விசயங்களில் கவனம். பக்குவப்பட்ட மனிதராக இருந்து அறிவிப்பூர்மாக முடிவெடுங்கள்.

தொழில் வியாபாரம்

குரு எட்டாம் வீட்டில் இருப்பதால் பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் அதிக அளவில் பெரிய முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். அளவான அளவில் முதலீடு செய்ய வியாபாரம் மிகப்பெரிய வெற்றியைத் தரும். நல்ல வேலை கிடைக்கும்.

மாணவர்களுக்கு வெற்றி

ஜூலை மாதம் சந்தோசமான மாதம். கல்விக்கான வாய்ப்பு அதிகம். மாணவர்களுக்கு இது வெற்றிகரமான மாதம். தேர்வு எழுதி வெற்றி பெறுவீர்கள். அரியர் எழுதி வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் ஏற்றம் கிடைக்கும்.

வெளிநாட்டு யோகம்

ராசி அதிபதி நீசமாக இருந்தாலும் குரு பார்வை இருப்பதால் தன வரவு அதிகரிக்கும். வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய் நாட்டில் செட்டில் ஆகலாம். வேலைகள் வாய்ப்பு வசதிகள் அமையும். மேஷ ராசிக்காரர்களுக்கு பாக்ய ஸ்தானத்தில் சனி கேது இருப்பதால் வெளிநாட்டு யோகமும் அமையும். சனியால் யோகம் அதிகரிப்பதால் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.

புதிய வீடு வாங்குவீர்கள்

ஜூலை மாதம் பெண்கள் புதிய வீடு வாங்குவீர்கள். வங்கி கடன் மூலம் நன்மைகள் நடைபெறும். அற்புதமான எதிர்காலம் அமையப்போகிறது.

மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சிலருக்கு உடல்வலிகள் போக்கும் வகையில் மருத்துவ உதவி கிடைக்கும்.

சுக்கிரபகவான் கலை உலக தொடர்புகளை உருவாக்குவார். தைரிய ஸ்தானத்தில் சூரியன், ராகு சுக்கிரன் இணைந்திருப்பது நன்மை. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள்.

13749 total views