எந்த வயதில் உங்களை அதிர்ஷ்டமும், வெற்றியும் தேடிவரும் தெரியுமா? ஆளும் சனி அள்ளிக் கொடுக்கும்.. சுட்டெரிக்கும் சூரியனும் அடங்கி போகும்!

Report
480Shares

நமது வேதங்களிலும், புராணங்களிலும் நமது வாழ்க்கை எவ்வாறு இந்த பிரபஞ்சத்துடனும், கிரகங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நமது வாழ்க்கையை தீர்மானிப்பதில் நம்முடைய பிறந்த நேரம், தேதி, கிழமை போன்றவை எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பது பற்றியும் நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

வேத ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமானதாகும். இது ஒருவரின் எதிர்காலத்தை 3 எண்களை கொண்டு கண்டறிய உதவுகிறது. அவை பிறந்த எண், விதி எண் மற்றும் பெயர் எண் ஆகும்

. இந்த பதிவில் அங்க சாஸ்திரம் உங்கள் எதிர்காலத்தை அறிய எப்படி உதவுகிறது என்று பார்க்கலாம்.

பிறந்த எண் மற்றும் விதி எண்

பிறந்த எண் என்பது நமது பிறந்த திகதியின் கூட்டத்தொகையாகும். விதி எண் என்பது உங்கள் மொத்த பிறந்த தேதியின் கூட்டுத்தொகையாகும். உதாரணத்திற்க்கு பிறந்த நாள் 12-09-1985 ஆக இருந்தால் அவர்களின் விதி எண் 1+2+0+9+1+9+8+5 = 35, 3+5 = 8.

அங்க சாஸ்திரம்

இந்து மதத்தின் பழமையான பழமையான சாஸ்திரங்களில் அங்க சாஸ்திரமும் ஒன்றாகும். ஒருவரின் வாழ்க்கையில் எண்கள் எப்படி மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது பற்றி இது கூறுகிறது. அங்க சாஸ்திரத்தின் படி எந்த வயதில் உங்களுக்கு அதிர்ஷ்டமும், வெற்றியும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

விதி எண் 1

இந்த எண்ணின் ஆளும் கிரகம் சூரியன் ஆகும். அங்க சாஸ்திரத்தின் படி இந்த எண்ணில் பிறந்தவர்கள் 22 மற்றும் 34 வது வயதில் பெரிய வெற்றியை அடைவார்கள். இந்த வயதில் அவர்களின் வெற்றி வாய்ப்பு அவர்களை தேடிவரும்.

விதி எண் 2

இந்த எண்ணில் பிறந்தவர்களை ஆளும் கிரகம் சந்திரன் ஆகும். இந்த விதி எண்ணில் பிறந்தவர்கள் 24 மற்றும் 38 வயதில் வெற்றியை அடைவார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் பணரீதியாகவும், வெற்றிரீதியாகவும் சிறப்பான இடத்தை அடைவார்கள்.

விதி எண் 3 மற்றும் 5

வியாழன் மற்றும் புதன் கிரகம் ஆளும் கிரகமாக இருப்பதாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துப்போவதாலும் இந்த எண்ணில் பிறந்தவர்களின் வெற்றிக்கான வயது 32 ஆகும். இந்த வயதில் இவர்கள் கையில் அதிக பணம் புரளும்.

விதி எண் 4

இந்த எண்ணில் பிறந்தவர்களின் ஆளும் கிரகம் ராகு ஆகும். அங்க சாஸ்திரத்தின் படி இந்த எண்ணில் பிறந்தவர்களின் வெற்றிக்கான வயது 36 ஆகும். இவர்கள் எதிர்பார்த்த அனைத்தும் அவர்களுக்கு இந்த வயதில் கிடைக்கும்.

விதி எண் 6

இந்த விதி எண்ணில் பிறந்தவர்களின் ஆளும் கிரகம் சுக்கிரன் ஆகும். இவர்கள் 25 வயதிலேயே வெற்றியை அடைவார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டம் 27 மற்றும் 32 வயதில் கிடைக்கும்.

விதி எண் 7

இந்த விதி எண்ணில் பிறந்தவர்களை ஆளும் கிரகம் கேது ஆகும். இவர்களுக்கு 20 வயதுகளில் வெற்றி கிடைப்பது என்பது மிகவும் கடினமானதாகும். 30 வயதுகளில் அதிர்ஷ்டக்காத்து இவர்களுக்கு ஆரபித்தாலும் 38 மற்றும் 40 வயதில் இவர்கள் உச்சத்தை அடைவார்கள்

விதி எண் 8

இந்த எண்ணில் பிறந்தவர்களை ஆளும் கிரகம் சனி ஆகும். இவர்கள் 36 மற்றும் 42 வயதில் வெற்றியை அடைவார்கள். தொழில்ரீதியாகவும், பணரீதியாகவும் இந்த ஆண்டுகள் அவர்களுக்கு அதிகம் இலாபத்தை வழங்குவதாக இருக்கும்.

விதி எண் 9

இந்த விதி எண்ணில் பிறந்தவர்களை ஆள்பவர்கள் செவ்வாய் கிரகம் ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களின் வெற்றிக்கான வயது 28 ஆகும். இந்த வயதில் இவர்கள் அதிக புகழையும், செல்வத்தையும் அடைவார்கள்.

18081 total views