குரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்! உங்க ராசி இருக்குதா?

Report
1966Shares

குருபகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். ஓராண்டு காலம் தனது சொந்த வீட்டில் சனி கேது உடன் குடியேறப்போகிறார். குரு பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 29யும், திருக்கணிதப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த குரு பெயர்ச்சியால் ஆறு ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது. ராஜயோக பலனை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

வியாழன் குரு பொன்னவன் ஆங்கீரசன் ஜீவன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் தனகாரகன் புத்திரகாரகன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜீவன கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது.

குருபகவானால் நன்மை

ஜாதகத்தில் குரு இருக்கும் ராசி.லக்னம் ஆகியவை பொருத்தும் ஜன்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார் அதே நடக்கும் தசா நாதனை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும். கோசாரத்தில் சுற்றி வரும் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் பொழுதும் யோகத்தையே செய்யும். அதே போல கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குருபகவானால் நன்மையே நடக்கும்.

குருவினால் நன்மை

குரு இருக்கும் இடத்தை இட பார்க்கும் இடங்கள் சுப பலன்களைப் பெரும். இந்த குரு பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள்தான் நடைபெறும். காரணம் தனுசு ராசி குருவின் சொந்த வீடு. கால புருஷ தத்துவப்படி குரு ஒன்பதாம் இடமான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.

மேஷத்திற்கு வரப்பிரசாதம்

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்த குருவினால் அல்லல் பட்டிருப்பீர்கள். நோய்கள் படுத்தியிருக்கும். மருத்துவ செலவுகள் ஏற்பட்டிருக்கும். இனி குருபகவான் அஷ்டமத்தில் இருந்து பாக்ய ஸ்தானத்தில் நகர்கிறார். இழந்த பாக்கியங்கள் கிடைக்கும். மேஷம் ராசிக்காரர்களுக்கு இது வரப்பிரசாதம். யோகம் கிடைக்கும். செல்வம் செல்வாக்கு சேரும். உங்கள் ராசியை பார்வையிடுகிறார். ராசிக்கு மூன்று மற்றும் ஐந்தாம் வீட்டையும் பார்ப்பதால் இது ராஜயோக காலமாக அமையப்போகிறது.

மிதுனம் கடன் நோய் தீரும்

மிதுனம் ராசிக்காரர்களே இதுநாள்வரை உங்கள் ராசிக்கு ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு அக்டோபர் முதல் களத்திர ஸ்தானத்தில் நகர்கிறார். கடன் பகை நோய் ஸ்தானத்தில் இருந்து குரு களத்திரத்திற்கு நகர்வதால் கடன் நோய்களால் அல்லப்பட்டவர்கள் நன்மை நடைபெறும். கேந்திரத்தில் சனி, கேது உடன் இணைவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் ராசியை பார்க்கும் குரு ராசிக்கு மூன்று மற்றும் லாப ஸ்தானத்தை பார்வையிடுவது சிறப்பு.

சிம்மத்திற்கு புத்திரபாக்கியம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு யோகாதிபதி. குருபகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணிக்கிறார். அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது. திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். குல தெய்வத்தை காட்டும் இடம். ராசியை பார்க்கிறார். ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானத்தினை பார்வையிடுவது மிக சிறப்பு.

விருச்சிகம் செல்வாக்கு கூடும்

விருச்சிகம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன, வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு குரு பகவான் நகர்வதால் உங்கள் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். பணவரவு அதிகமாகும். இழந்த செல்வாக்கை மீட்பீர்கள். அதிக யோகமான பலன்கள் நடைபெறும். ஏழரை சனியில் இருந்தும் விடுபடப்போவதால் இனி விருச்சிக ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

ஆட்சி பெற்ற குரு

குருபகவான் தனது சொந்த வீடான தனுசு ராசியில் ஓராண்டு காலம் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சொந்த வீட்டிற்கு ராசி அதிபதி வருவதால் யோகங்கள் அதிகம் நடைபெறும். ஏழரை சனி நடைபெற்றாலும் குரு பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு யோகமான காலமே.

கும்பம் பணவரவு கூடும்

கும்ப ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தான அதிபதி லாபத்தில் அமர்வதால் தொழிலில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகரிக்கும். தன யோகம் அமையும். இந்த 6 ராசிக்காரர்களுக்கு பணவரவு தீரும் இடமாற்றங்கள் ஏற்றமான மாதம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீட்டின் மீது விழுவதால் தைரியம் கூடும், திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வீடு வாங்கும் யோகம்

இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் ஓராண்டு காலம் அதிக ராஜயோகம் நிகழப்போகிறது. வீடு வாகனம் வாங்குவீர்கள். பணம் அதிகம் கிடைத்து நகைகள் வாங்குவீர்கள். சொத்துப்பிரச்சினை தீரும் உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மதிப்பு மரியாதைகள் கூடும். உறவினர்களிடம் இருந்த பகைகள் தீரும். வேலை கிடைக்கும். இந்த ஆறு ராசிக்காரர்களும் அற்புதமான யோகங்களை தரக்கூடியதாக உள்ளது.

பயம் வேண்டாம் குரு நல்லவர்

குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது போல இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் அற்புதமாக இருக்கும். இதை படித்து விட்டு மீதமுள்ள ரிஷபம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களும் பயப்பட வேண்டாம். குருவின் பார்வையால் உங்களுக்கும் நல்ல பலன்களையே குருபகவான் கொடுப்பார்.

திருச்செந்தூர் தரிசனம்

திருமணம், புத்திரபாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வணங்குவதற்கு திருச்செந்தூர் செல்வது சிறப்பைத் தரும்.

தொழில் உத்தியோக விருத்திக்கு செங்கோட்டை அருகில் புளியரை என்ற ஸ்தலத்தில் அருள் பாலிக்கு தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளியிருக்கும் மேதா தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.

86285 total views