காலையில் கண் விழித்ததும் யாரை பார்த்தால் அதிர்ஷ்டம் வரும் தெரியுமா..?

Report
740Shares

இன்னைக்கு யார் முகத்துல முழிச்சேன்னே தெரியலை’ ன்னு எத்தனை நாள் புலம்பியிருப்போம். ஆனா, யார் முகத்தில் எல்லாம் விழித்தால், அன்றைய நாள் முழுக்க சந்தோஷமா இருப்போம்னு என்னைக்காவது யோசிச்சிருப்போமா?

நரி முகத்துல முழிச்சா சந்தோஷமும், அதிர்ஷ்டமும் தானா வரும்னு தீவிரமா யோசிக்காதீங்க... நம்ம முகத்துல முழிச்சா அப்புறமா அந்த நரி அன்னைக்கு சந்தோஷமாவா இருக்கும்.

ஒரு மனுஷன், ஆழ்ந்த உறக்கத்துல இருந்து கண் விழித்து முதன் முதலாப் பார்க்கிற பொருட்கள் மங்களகரமான பொருளா இருந்தா, அன்னைக்கு முழுக்கவே அவன் சந்தோஷமா இருப்பான்னு சாஸ்திரங்கள் சொல்லுது. அன்னைக்கு நாள் பூராவும் நல்லது தான் நடக்கும்னு பெரியவங்களுக்கு அனுபவப்பாடமா சொல்லி வெச்சிருக்காங்க. அப்படி தூக்கத்திலிருந்து எழுந்திருக்கிறப்போ, பார்த்து அதிர்ஷ்டத்தைக் கொண்டு வர்றதுக்குன்னு ஒரு பெரிய பட்டியலை நம்ம பெரியவங்க தயாரிச்சு கொடுத்திருக்காங்க. அந்த லிஸ்ட் என்னன்னா...

காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்திரிச்சதும், முதன் முதலில் கண் விழித்து நம்மளோட வலது உள்ளங்கையைப் பார்க்கணுமாம். நமக்கான அதிர்ஷ்டத்தை அடுத்தவங்க கிட்டே எல்லாம் போய் தேடக் கூடாதுன்னு அப்படிச் சொல்லியிருக்கலாம். போற இடத்துக்கு எல்லாம் பொருட்களை ஞாபகமா கொண்டு போக முடியாது. ஆனா நம்மளோட கைகள் நம்ம கூடவே தானே வரும். சிம்பிளான விஷயம் தான். காலையில கண் விழிச்சதும், முதல்ல பார்க்கிறது உங்களோட வலது உள்ளங்கையாக இருக்கட்டும். அப்படி முதன் முதல்ல உங்களோட வலது உள்ளங்கையைப் பார்த்தீங்கன்னா, அன்னைக்கு முழுக்கவே மங்களங்கள் தொடரும்னு சொல்றாங்க.

தூக்கத்திலிருந்து கண் விழிக்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடியில், தன் முகத்தையே பார்ப்பதால் லட்சுமி கடாட்சம் ஏற்படும். உங்களின் அன்பிற்குரியவர்களான தாய், மனைவி அல்லது உங்கள் குழந்தைகள் ஆகியோரின் முகத்தில் விழிப்பதும் நல்லது.

காலையில் எழுந்ததும் கண் விழித்து முதன் முதலில் சூரியனை தரிசிப்பது சிறந்தது. தாமரைப் பூ, சந்தனம், கடல் மற்றும் அழகான இயற்கைக் காட்சிகளை காலை கண் விழித்ததும் பார்ப்பது உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் தந்து அன்றைய தினத்தை சிறப்பானதாகும்.

மேலும் பயிர்கள் விளையும் வயல், சிவலிங்கம், கோயிலின் ராஜகோபுரம், உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் பசுமாடு, நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த பூந்தோட்டம் ஆகியவற்றை காலையில் எழுந்ததும் கண் விழித்து பார்ப்பது மனதிற்கு உற்சாகத்தை தந்து அன்றைய தினத்தை இனிமையான நாளாக ஆக்குகிறது.

தினமும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் தூக்கத்திலிருந்து எழுந்து, நடைப்பயிற்சி செய்து, சூரிய தரிசனம் செய்தால் அனைத்து தினங்களும் சிறப்பானதாக இருக்கும்.

22542 total views