உங்கள் பெயரின் நியூமராலஜி எண் 1ஆக இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா? இது கட்டாயம் நடந்திருக்கும்!

Report
216Shares

நியூமராலஜி என்பது ஒரு எண் ஜோதிட முறையாகும். எழுத்துக்களும் மனிதனின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தக் கூடியது. எனவே இந்த எண் கணித ஜோதிடம் ஒருவரின் ஆற்றல், திறன், ஆளுமை என்று வாழ்க்கைக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் இது கொடுக்கிறது.

அந்த வகையில் பெயரின் எண் 1 ஆக அமைந்தால் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கே பார்க்க போகிறோம்.

நம்பர் 1 என்பது எல்லாருக்கும் பிடிக்க கூடிய ஒன்று. ஏனெனில் எண்களில் முதன்மையானது. எண் ஒன்று என்பது சூரியனை குறிக்க கூடியது.

பெயரின் கூட்டுத்தொகை நம்பர் 1 வரும் மாதிரி அமைத்தால் அவர்கள் உறுதியான ஆளாக இருப்பார்கள். நம்பர் 1 குறிக்கோளை அடையும் பெருமையை கொடுக்கும்.

உங்களுடைய குறிக்கோளை சரியான திசையில் சென்று அடைய வழிவகுக்கும். எவ்வளவு தடைகள் வந்தாலும் உங்களை வெற்றி பாதையில் இழுத்துச் செல்லும்.

நீங்கள் தைரியமான, விசுவாசமான, நம்பகத்தன்மை வாய்ந்த நபராக இருப்பீர்கள். உங்களுக்கு ரிஸ்க் எடுக்கிறதல்லாம் ரஸ்க் சாப்பிட மாதிரி. அதிலும் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய பயப்படமாட்டீர்கள்.

நீங்கள் எப்பொழுதும் உறுதியாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்வீர்கள். தலைமைபொறுப்பு உங்களுக்கு ஏதுவாக இருக்கும். தலைமைபொறுப்பில் நிறைய பொறுப்புகளை எடுத்து சிறப்பாக செயல்படக் கூடிய நபர்கள் நீங்கள்.

உங்களைச் சுற்றியுள்ள நபர்கள் மீது அன்பாக இருப்பீர்கள். வேலைகளில் தனிப்பட்ட திறனை விரும்புவீர்கள். ஒரு வேலையை நன்றாக செய்வதோடு அதில் வெற்றியும் காண்பீர்கள்.

உங்களுக்கு ஏதுவான பணிகள் இதோ

  • தொழிலதிபர்
  • வணிக உரிமையாளர்
  • மத்திய அல்லது உயர் மட்ட நிர்வாகி பொறுப்பு
  • ராணுவம்
  • அரசியல்வாதி
  • கட்டடக்கலை
  • இஞ்சினியர்

கடந்த கால வாழ்க்கையில் உங்களுக்காக எதையும் செய்திருக்க மாட்டீர்கள். மற்றவர்களுக்காக வாழ்ந்திருப்பீர்கள். உங்களுடைய பயணம், உங்களுடைய நோக்கம் எல்லாவற்றையும் இழந்து மன அமைதிக்கு ஆம் போட்டு இருப்பீர்கள்.

ஒவ்வொரு முறையும் இதைச் செய்து வந்தீர்கள். ஆனால் தற்போது நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள் எனவே உங்களைப் பற்றி சிந்தியுங்கள்.சுயமாக இருப்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

6931 total views