இந்த ராசிக்காரர்களிடம் உஷாரா இருங்க... அதிக திமிர் பிடித்தவர்களா இருப்பாங்களாம்!

Report
659Shares

நமது வாழ்க்கையில் ஒருமுறையாவது திமிர் பிடித்தவர்களை நாம் பார்த்திருப்போம். இவ்வாறு நடந்து கொள்பவர்கள் எப்பொழுதும் சுயநலமாகவும், தன் நலன் சார்ந்து மட்டுமே சிந்திப்பார்கள். தன்னம்பிக்கையால் தன்னை பற்றி பெருமையாக நினைத்து கொள்பவர்கள் எல்லாம் திமிர் பிடித்தவர்கள் அல்ல.

தன்னுடைய திமிர்தான் தனக்கு பெருமை என நினைப்பவர்கள் எப்போதுமே ஆபத்தானவர்கள்தான். இவர்களிடம் இருக்கும் பிரச்சினையே இவர்கள் எப்பொழுதும் தான் சொவ்லதே சரி என்று நினைக்கும் மனநிலையில் இருப்பார்கள். இதற்கு காரணம் அவர்கள் பிறந்த ராசியாக கூட இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிக திமிர் பிடித்தவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இந்த பட்டியலில் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் தான்தான் பெரியவர் என்றும் தன் நலன் மட்டுமே முக்கியம் என்றும் சிந்திக்கக்கூடியவர்கள். இவர்கள் அதனை நியாயப்படுத்தவும் செய்வார்கள். இவர்களின் ஈகோ மிகவும் பெரியதாகும், இதனால் அவர்களின் வெற்றி பயணத்தில் நிறைய தடங்கல்கள் ஏற்படலாம். ஒருமுறை முடிவெடுத்து விட்டால் அதிலிருந்து இவர்களை மாற்றுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அவர்களை பொறுத்தவரை அவர்கள் அனைத்திலும் சரியாகத்தான் முடிவெடுப்பார்கள் அது மற்றவர்களை பற்றிய கருத்துக்களாக இருந்தாலும் சரி.

தனுசு

தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இந்த உலகம் அவர்களை சுற்றிதான் சுற்றி கொண்டிருக்கிறது. வசீகரம், நம்பிக்கை, விவேகம் என அனைத்தும் இவர்களிடம் இருந்தாலும் இவர்களின் சுயநலம் மற்றும் கர்வம் இவர்களுக்கு துன்பத்தை உண்டாக்கும். இவர்களை பொறுத்தவரை மற்றவர்கள் இவர்களை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்து கொள்ள வேண்டும். இவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் இடத்தில் மட்டுமே இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், மற்ற இடங்களில் இவர்கள் இருக்க விரும்பமாட்டார்கள்.

ரிஷபம்

இவர்களுக்கு சமரசங்களில் ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை. நான் ஏன் சமாதானம் அடைய வேண்டும் என்ற எண்ணம்தான் இவர்களுக்கு எப்போதும் இருக்கும். தான் அனைத்திலும், எப்போதும் சரிதான் என்ற எண்ணம் இவர்களுக்கு அதிகம். மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு இவர்களிடம் மதிப்போ, முக்கியத்துவமா இருக்காது. தன்னுடைய பிரச்சினையும், கோரிக்கையுமே முதலில் தீர்க்கப்பட வேண்டும் என்ற பிடிவாதம் இவர்களுக்கு எப்போதும் இருக்கும். இவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால் அதனை ஒருபோதும் இவர்களால் தாங்கிக்கொள்ள இயலாது.

மேஷம்

மற்றவர்களை பற்றி கவலைப்படுவது என்பது இவர்களுக்கு மிகவும் கசப்பான ஒன்றாகும். அவர்கள் மேல் அக்கறை இல்லை என்று அர்த்தமல்ல தன்னை பற்றி சிந்திக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை என்று அர்த்தம். அப்படியே மற்றவர்கள் மீது அக்கறை கொண்டாலும் அது அவர்களுக்கு வேண்டியவர்களாக மட்டுமே இருக்கும். மற்றவர்கள் மீது அக்கறை செலுத்த அவர்களுக்கு நேரமும் இருக்காது, விருப்பமும் இருக்காது.

கும்பம்

இவர்கள் எப்பொழுதும் தனக்கான நன்மைகளை பற்றி மட்டுமே சிந்திப்பதால் இவர்களால் மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள இயலாது. ஒருவேளை இவர்களுக்கே பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக உதவியை கேட்கமாட்டார்கள். அதற்கும் அதிகம் யோசித்து அதன் பின்னரே உதவி கேட்பார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் வளர்ந்த குழந்தை போல நடந்து கொள்வார்கள். இவர்கள் அனைத்தையும் கவனிப்பார்கள் ஆனால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவர்களை ஏற்றுக்கொள்ள வைக்க உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

loading...