உங்கள் கைரேகையில் மறைந்திருக்கும் இந்த ஆறு ரகசியங்கள் என்ன தெரியுமா?

Report
460Shares

நமது எதிர்காலத்தை தெரிந்து கொள்வதில் எப்பொழுதுமே நமக்கு ஆர்வம் அதிகமிருக்கும். கைரேகையை பொறுத்தவரை அதில் இருக்கும் சில முக்கியமான ரேகைகளை பற்றி மட்டுமே நாம் நன்கு அறிவோம். ஆனால் நம்முடைய கையில் இருக்கும் ஒவ்வொரு ரேகைக்கும் ஒரு அடையாளமும், முக்கியத்துவமும் இருக்கிறது.

நமது கையில் பலருக்கும் தெரியாத ஆறு சிறிய முக்கிய ரேகைகள் இருக்கிறது. இந்த சிறிய கோடுகளை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். நமது விதியை நிர்ணயிப்பதில் இந்த கோடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். இந்த பதிவில் இந்த சிறிய கோடுகள் இருக்குமிடம் அவை உங்களை பற்றி என்ன சொல்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

ஒற்றுமை கோடுகள்

இந்த சிறிய கிடைமட்ட கோடு நமது உள்ளங்கையின் புடைத்த பகுதியில் நம்முடைய சுண்டு விரலுக்கும், இதய ரேகைக்கும் நடுவில் இருக்கும். இந்த கோடு இருப்பவர்கள் உறவில் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள் ஆனால் எப்பொழுதும் அவ்வாறு இருக்க மாட்டார்கள் சிலநேரங்களில் மட்டுமே இருப்பார்கள்.

சுக்கிரன் மேடு

இந்த சுக்கிர கோடு என்பது சுண்டு விரல் மற்றும் மோதிர விரலில் தொடங்கி நடுவிரல் வழியே வளைந்து சென்று ஆள்க்காட்டி விரலுக்கும், நடுவிரலுக்கும் இடையில் முடிவடையும். இது ஒருவரின் உணர்வுகள் சார்ந்த நுண்ணறிவு மற்றும் மற்றவர்களின் மனதை மாற்றும் குணம் பற்றி குறிக்கும்.

சூரிய கோடு

இந்த சூரிய கோடு ஒருவரின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். இது விதி கோட்டுக்கு நேர் எதிரிலும், மோதிர விரலுக்கு கீழும் இருக்கும். இந்த கோடு இருப்பவர்கள் மிகச்சிறிய வயதிலேயே பெரும்புகழை அடைவார்கள்.

பயணக்கோடு

இந்த கிடைமட்ட கோடானது உள்ளங்கையின் புடைத்த பகுதியில் மணிக்கட்டிற்கும், இதய ரேகைக்கும் நடுவில் இருக்கும். இது இருக்கும் எண்ணிக்கையை பொறுத்து இதன் பலன்கள் இருக்கும். இந்த கோடு நீளமாக இருப்பவர்களின் எதிர்காலம் வெளிநாடுகளில் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

அப்பல்லோ கோடு

இது உங்களுடைய அதிர்ஷ்டத்தை குறிக்கும் கோடாகும். இது மணிக்கட்டில் இருக்கும் சந்திர மேட்டில் தொடங்கி கட்டை விரலுக்கு அடியில் சென்று முடிவடையும். இந்த கொடு தீர்க்கமாக இருப்பவர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் நிலைபெற்றிருக்கும். இவர்களின் திருமண வாழ்வு இவர்கள் நினைத்தை விட சிறப்பாக இருக்கும்.

புதன் கோடு

கையின் கீழ்ப்புறத்தில் இருந்து அதாவது மணிக்கட்டில் இருந்து தொடங்கி சுண்டுவிரல் வரை செல்லும் கோடு இதுவாகும். இது ஒருவரின் ஆரோக்கியம், வியாபாரம் மற்றும் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் முறை போன்றவற்றை பற்றி கூறும்.

மற்ற அடையாளங்கள்

சிலருக்கு கையில் சில அடையாளங்களும், எழுத்துக்களும் இருக்கும். இந்த ஒவ்வொரு அடையாளத்திற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். நட்சத்திரம், கூட்டல், சதுரம், சூலம் என பல சின்னங்கள் கையில் இருக்க வாய்ப்புள்ளது. இவை கையில் இருக்கும் இடத்தை பொறுத்து அவற்றின் தாக்கம் உங்கள் வாழ்வில் இருக்கும்.

16631 total views