விகாரி ஆண்டில் செல்வத்தை அள்ளும் இந்த மூன்று ராசிகள்... உங்க ராசி இருக்குதா?

Report
1520Shares

தமிழ் நாட்காட்டி ராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேஷத்தில் சூரியன் நுழையும் சித்திரையே தமிழ் ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்படுகிறது. புத்தாண்டு பிறக்கும் போது ரிஷப லக்னம் மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, துலாமில் குரு, தனுசு ராசியில் செவ்வாய் சனி, மகரத்தில் கேது, மீனம் ராசியில் சந்திரன், புதன் என இடம்மாறுகிறது. அவ்வாறு ராசி நட்சத்திரங்கள் இடம்மாறும் பொழுது எந்த ராசிக்காரர்கள் எந்தக் கோவிலுக்கு போய் வழிபட வேண்டும் என தெரியுமா ?

மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கும் அவரவர்களுக்கு என தனி கோவில்கள் உள்ளன. இவற்றில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்கள் கீழே வரும் திருத்தலங்களுக்கு சென்று வழிபட்டு வர இந்த வருடத்திலேயே நீங்கள் உட்சத்தை அடையலாம் என்பதைக் காணலாம்.

மேஷம்- சுப்பிரமணிய சுவாமி கோவில்

மேஷ ராசி உடையோர் மதுரை மாவட்டம், சோலைமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில்குச் சென்று தமிழ்புத்தாண்டு அன்று வழிபட்டு வர குருபகவான் மூலம் அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகள் உங்களது வீட்டில் நடைபெறும். வியாபாரத்திலும், பிற உத்தியோகத்திலும் கூடுதல் இலாபத்தை பெற்று செல்வச் செழிப்புடன் மகிழ்ச்சியடைவீர்.

ரிஷபம்- முத்துமாரி துர்கை அம்மன்

ரிஷப ராசி உடையோருக்கு சூரியன் இம்மாதம் 14ம் தேதியன்று பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார். தொடர்ந்து சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார். செவ்வாய் புதன், குரு, சனி, ராகு, கேது என மாற்றம் ஏதுமில்லாவிட்டாலும் குடும்பச் செலவுகள் உள்ளிட்ட சில தடங்கள்கள் மட்டும் தமிழ்புத்தாண்டில் உருவாவதால் தஞ்சாவூர், புன்னைநல்லூரில் உள்ள முத்துமாரி துர்கை அம்மனை வழிபட தேடிவந்த பிரச்சனைகள் விலகி ஓடும். அதுமட்டுமின்றி கடின உழைப்பும், தொலைநோக்குச் சிந்தனையும் என உங்களை நிரூபிக்கும் காலமாக இது இருக்கும்.

மிதுனம்- வரதராஜப் பெருமாள்

தமிழ்புத்தாண்டின் தொடக்கம் முதல் 2019 பிப்ரவரி வரை ராகு இரண்டிலும், கேது எட்டிலும் தொடர்கிறது. எனவே, கடலூர் மாவட்டம், கண்ணங்குடியில் உள்ள அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்று மூலவருக்கு பூஜை செய்து வர சித்திரை, ஆவணி, கார்த்திகை மாதங்களில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சேர் மார்க்கெட், பங்குதாரர்கள் உள்ளிட்டவை மூலம் நல்ல வரவு கிடைக்கும்.

64501 total views