இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா?..

Report
1259Shares

வாழ்க்கையின் அடிப்படை தேவை என்றால் அது உணவுதான். இந்த உலகத்தில் அனைவரும் உழைப்பதற்கான முதல் காரணம் உணவுதான் அதற்கு பிறகுதான் கார், பங்களா என்பதெல்லாம். ஏனெனில் உயிர்வாழ அடிப்படை தேவை உணவுதான். உணவு எப்படி உயிரை காப்பாற்றுகிறதோ அதேபோல நம்மை அழிக்கவும் உணவால் முடியும். அதனாலதான் நம் முன்னோர்கள் "அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்று கூறியிருக்கிறார்கள்.

சாப்பிடுவதை சிலர் கடமையாகவும், சிலர் பொழுதுபோக்காகவும் வைத்திருப்பார்கள். ஆனால் சிலர் சாப்பிடுவதையே வேலையாக நினைத்து செய்வார்கள். சாப்பாடு ராமனாக இருப்பது பெருமை பட வேண்டிய விஷயம் இல்லையென்றாலும் அதில் அவமானப்படவும் எதுவுமில்லை. ஒவ்வொருவருக்கும் ஒன்றில் ஆர்வம் இருக்கும், சிலருக்கு உணவில் அதீத ஆர்வம் இருக்கும். இந்த ஆர்வத்திற்கு காரணம் அவர்கள் பிறந்த ராசியாகவும் இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் சாப்பிடுவதையே வேலையாக வைத்திருப்பாகள் என்று பார்க்கலாம்.

விருச்சிகம்

மற்றவர்கள் அதிகமாக உழைப்பதையும், வேலை செய்வதையும் குறைக்க விரும்பினால் விருச்சிக ராசிக்காரர்கள் சாப்பிடுவதை குறைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதனை அவர்களின் சுயகட்டுப்பாடு என்று கூட கூறலாம். மற்றவர்கள் உங்கள் பாதையில் குறுக்கிடுவதையோ அல்லது வாழ்க்கையில் அறிவுரை கூறுவதையோ நீங்கள் ஒருபோதும் விரும்பமாட்டிர்கள். உணவு விஷயத்திலும் அப்படிதான், உங்களுக்கு பிடித்த உணவை உண்பதில் எந்தவித கட்டுப்படும் உங்களுக்கு இருக்கக்கூடாது. சாப்பிடுவது, வேலை செய்வது இரண்டும் உங்கள் வாழ்க்கையின் சுழற்சியாக இருக்கும். சொல்லப்போனால் சாப்பிடுவதற்காகவே நீங்கள் வேலை செய்வீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்கார்களை பொறுத்தவரை சாப்பிடுவது என்பது புரட்சி அல்லது பழிவாங்குவது போன்றது. சிலர் உங்களை ஒல்லியாக பார்க்க வேண்டும் என்று உங்கள் வாழ்க்கையில் ஆசைப்பட்டிருக்கலாம் அவர்களின் ஆசையை நிராகரிப்பதற்காகவே நீங்கள் அதிகம் சாப்பிடுவீர்கள். மற்றவர்களை வெறுப்பேத்துவதற்காகவே நீங்கள் சாப்பிடுவீர்கள் ஏனெனில் மற்றவர்களின் முட்டாள்தனமான கருத்துக்களை நீங்கள் ஏற்கமாட்டீர்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக நீங்கள் மற்றவர்களை காயப்படுத்துவதை காட்டிலும் உங்களை நிறைய காயப்படுத்தி கொள்கிறீர்கள். ஆனால் பலவித உணவுகளை சாப்பிட்டு அதனை மற்றவர்களிடம் சொல்லும்போது கிடைக்கும் மகிழ்ச்சி எளிதில் கிடைக்குமா?

மிதுனம்

நீங்கள் அதிகம் சாப்பிடுகிறீர்கள் ஏனெனில் உங்களுக்கு வேறு என்ன செய்வது என்று தெரியாது. உங்களை காயப்படுத்தும் மனிதர்களை விட உங்களுக்கு சுவையை வழங்கி உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் உணவுகளே உங்களுக்கு சிறந்த துணையென எப்போதும் நினைப்பீர்கள். உங்களின் நம்பிக்கைக்குரிய சிறந்த நண்பனாக நீங்கள் நினைப்பது உணவைத்தான். என்ன ஒரே குறை உணவால் திரும்பி பேச முடியாது அவ்வளவுதான்.

துலாம்

சோகமாக இருக்கும் போதும் சரி, மகிழ்ச்சியாக இருக்கும்போதும் சரி உங்களுக்கு சிறந்த துணையாக இருப்பது உணவுதான். எந்த அளவில் சாப்பிட வேண்டும் என்ற அளவே உங்களுக்கு தெரியாது மேலும் எதை சாப்பிட வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்று புரிதலும் உங்களுக்கு இருக்காது அனைத்தையும் சாப்பிட விரும்புவீர்கள். உணவு கட்டுபாட்டுக்கும் உங்களுக்கும் எந்த தடோரபும் இல்லை, உங்களுக்கு அது வீணான ஒன்றுதான். உங்களுடைய விருப்பங்கள் குறித்து உங்களுக்கு தெளிவிருக்காது. உணவின் சுவை தவிர உங்களை திருப்திப்படுத்தும் விஷயம் எதுவுமில்லை.

கன்னி

உங்களுடைய விதிமுறைகளின் படி உலகம் இயங்கினால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. அதிக அழுத்தம் ஏற்படும்போது உங்கள் கவனம் உணவின் பக்கம் திரும்பும். உணவென்றால் அனைத்தும் உங்களுக்கு உணவாகி விடாது. அதற்கென உங்களுக்கு தனி விதிமுறைகளும், விருப்பங்களும் இருக்கும். நீங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள், உணவிலும்தான். அதிர்ஷ்டவசமாக உங்களின் தேர்வுகள் எப்பொழுதும் சரியானதாகவே இருக்கும்.

மீனம்

அதிகம் சாப்பிடுவதும் அதன் மூலம் மகிழ்ச்சியடைவதும் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். உணவின் மூலம் பழிவாங்குவதோ அல்லது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதோ உங்கள் நோக்கமல்ல. ஏனெனில் நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை இயல்பாகவே வெளிப்படுத்துவீர்கள், அதனால் சாப்பிடுவது மட்டுமே உங்கள் விருப்பமாகும். மற்றவர்கள் இதயத்திற்கு அடிமை என்றால் இவர்கள் அவர்களின் நாக்கிற்கு அடிமை. அதனை திருப்திப்படுத்தும் வரை இவர்கள் சாப்பிட்டு கொண்டேதான் இருப்பார்கள்.

38009 total views