பிறந்திருக்கும் அற்புதமான விகாரி வருடத்தில் அதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்...?

Report
2312Shares

சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசியில் பிரவேசிக்கும் மாதம் சித்திரை மாதம் எனப்படுகிறது. இந்த சித்திரை மாதம் தான் 12 மாதங்களைக் கொண்ட தமிழ் ஆண்டின் தொடக்க மாதமாகும். மொத்தம் 60 ஆண்டுகளைக் கொண்ட தமிழ் ஆண்டு படி 33 ஆவது ஆண்டாக “விகாரி” ஆண்டு பிறந்திருக்கிறது. இந்த விகாரி ஆண்டில் எந்த ராசியினர் மிக அதிக யோகங்களையும், நன்மைகளையும் பெறப் போகின்றனர் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கடகம்

கடக ராசியினருக்கு இந்த இருக்கின்ற விகாரி ஆண்டு பலவிதமான நன்மைகளைத் தரும் ஒரு ஆண்டாக இருக்கப் போகிறது. இந்த விகாரி ஆண்டில் கடக ராசியினர் நீண்டகாலமாக நினைத்திருந்த காரியங்கள் அனைத்தும் ஒன்றாக நடைபெறத் தொடங்கும்.

எடுத்த முயற்சிகள் அனைத்திலும் மிகச் சிறப்பான வெற்றிகளை பெற முடியும். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சுமூகமாக தீரும். எதிர்ப்புகளே இல்லாத நிலை இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். பலர் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் பொருளாதார நன்மைகள் உண்டாகும். எதிர்பாராத திடீர் யோகங்கள் சிலருக்கு ஏற்படும்.

மகரம்

மகர ராசியினருக்கு இந்த விகாரை ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பல சிறப்பான நன்மைகள் உண்டாகும். தொட்ட காரியங்கள் அனைத்தும் பொன்னாகும் ராசி உண்டாகும். குடும்பத்தில் திருமணம், குழந்தைப்பேறு போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்படும்.

சிலருக்கு தங்கள் பரம்பரையின் பூர்வீக சொத்து கிடைக்கப் பெறும் யோகம் ஏற்படும். அரசியல் வாழ்வில் இருப்பவர்களுக்கு பதவிகள் கிடைக்கும். சொத்துப் பிரச்சினை, கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் நீண்ட காலமாக இருந்த பிரச்சினைகள் அனைத்தும் சுமுகமாக தீரும். சகோதரர்கள் வகையில் சிலருக்கு தனலாபம் உண்டாகும். தொழில் வியாபாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவும் உதவிகளும் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு பிறக்கின்ற விகாரி ஆண்டு மிகவும் சிறப்பான ஒரு ஆண்டாக இருக்கப் போகிறது. பணம் சம்பந்தமான விடயங்களில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று அனைத்து பிரச்சனைகளும் தீரும். சிலர் வெளியூர், வெளி நாடுகளுக்கு உல்லாசப் பயணங்கள் மேற்கொண்டு மகிழ்வார்கள்.

சமூகத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைத்து, அதன் மூலம் உங்களுக்கு பலவிதமான நன்மைகளும் ஆதாயங்களும் கிடைக்கும். குடும்பத்தினர் விரும்பும் அனைத்தையும் வாங்கித் தந்து அவர்களை மகிழ்விப்பீர்கள். தொழில், வியாபாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பாரா வகையில் பெருத்த லாபங்கள் கிடைக்கும். உங்கள் பணியாளர்களின் திறமையை மட்டும் ஒத்துழைப்பால் உங்களுக்கு செல்வமும், புகழும் உண்டாகும்.

loading...