சித்திரை மாத ராசிபலன்... அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் இருக்கும் ராசி எது?...

Report
1262Shares

மேஷ ராசிக்குள் சூரியன் நுழையும் மாதம் சித்திரை மாதமாகும். சூரியன் உச்சத்தில் இருக்கும் மாதமும் இதுவே. சித்திரை மாதத்தை வசந்த ராகம் என்றும் கூறுவர். மங்களம் பொங்கும் இந்த மாதத்தினை சைத்ரா என்றும் சைத்ர விஷு என்றும் போற்றுகிறார்கள்.

மஹா விஷ்ணுவின் தசாவதாரங்களில், பல அவதரங்களுக்கு இடம்கொடுக்கும் பெருமை, சித்திரைக்கு உள்ளது. சைத்ர சுக்ல பஞ்சமியில், மீன் வடிவில் அவதாரம் எடுத்து, பிரளயத்திலிருந்து உலகை மீட்டு, உயிர்கள் மீண்டும் தோன்ற வழி செய்தார் பகவான். மச்ச அவதாரம் நிகழ்ந்ததும் சித்திரையில்தான் என்கின்றனர். நவமி திதியில் ஸ்ரீராம பிரானாக அவதாரம் எடுத்து மக்களைக் காத்தார் பகவான் விஷ்ணு. திருமாலின் நரசிம்ஹ அவதாரம், பரசுராமன் அவதாரம் நிகழ்ந்ததும் இந்த மாதத்தில்தான்.

சித்திரை முதல் தேதியன்று ஸ்ரீரங்கத்தில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் தங்கம், வெள்ளி வாங்கினால் இல்லத்தில் செல்வம் குவியும் என்ற ஐதீகமும் உண்டு. பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட சித்திரை மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம்.

கிரகங்களின் சஞ்சாரம்

சூரியன் - மேஷம் ராசி

செவ்வாய் - ரிஷபம் ராசி 24ஆம் தேதிக்கு மேல் மிதுனம் ராசிக்கு மாறுகிறார்

புதன் - மீனம் ராசி 20ஆம் தேதிக்கு மேல் மேஷம் ராசிக்கு மாறுகிறார்

குரு - அதிசாரத்தில் தனுசு ராசியில் உள்ள

குரு 9ஆம் தேதிக்கு மேல் விருச்சிகத்திற்கு மாறுகிறார்

சுக்கிரன் - கும்பம் ராசி 2ஆம் தேதி மீனத்திற்கு மாறுகிறார் 27ஆம் தேதி மேஷத்தில் குடியேறுகிறார்

சனி - தனுசு ராசி

ராகு - மிதுனம் ராசி

கேது - தனுசு ராசி

மேஷம்

வீரத்தின் நாயகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே... நவகிரகங்களின் கூட்டணியும் சஞ்சாரம் உங்களுக்கு அதி அற்புதமாக இருக்கிறது. சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும், உத்தியோகத்தில் பதவி உயர்வு தேடி உங்களை வரும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மூலம் பண வருமானம் உண்டாகும் 24ம் தேதிக்குப் பின்னர் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுக்காக செலவழிக்க வேண்டியிருக்கும், 20ஆம் தேதிக்கு மேல் படிப்பில் கவனம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும், செல்வ நிலை சிறப்படையும். 9ஆம் தேதிக்கு மேல் திடீர் பணவரவு ஏற்படும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வீட்டுக்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள், தடைகள் நீங்கும். செல்வம் பெருகும். 02ம் தேதிக்குப் பின்னர் பெண்களால் செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் புதிய வீட்டுக்கு மாறும் சூழல் ஏற்படும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். செவ்வாய்கிழமைகளில் முருகனை வழிபடலாம் நன்மைகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

காதல் நாயகன் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே... கிரகங்களின் கூட்டணி சில ராசிகளில் சாதகமாக இல்லை என்றாலும் குருவின் ஆசியால் நன்மைகள் நடைபெறும் மாதம் இது. சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும், அரசாங்கத்திற்க்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்திவிடுவது சிறப்பு. செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கோபம் அதிகரிக்கும் 24ஆம் தேதியிலிருந்து வீடு மனை மூலம் வருமானம் அதிகரிக்கும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், 20ஆம் தேதிக்கு மேல் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் திடீரென்று பணம் கிடைக்கும். 9ஆம் தேதிக்கு மேல் கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் அதிகரிக்கும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும் 02ம் தேதிக்கு பின்னர் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் இனம் புரியாத பாரம் அழுத்தும், கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு உயரும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடலாம். கொண்டைக்கடலை வேகவைத்து நைவேத்தியம் செய்து தானமாக தரலாம்.

மிதுனம்

புதனை ஆட்சி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே... சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும், தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் 24ஆம் தேதிக்குப் பின்னர் மனதில் அதிகமான கோபம் ஏற்படும் கட்டுப்படுத்திக் கொள்ளவும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தமாக செய்யும் தொழில் சிறப்படையும் 20ஆம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் நல்லுறவு நீடிக்கும், உறவினர்களின் செயல்கள் சாதகமாக இருக்கும். 9ஆம் தேதிக்குப் பின்னர் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்த்து விடுங்கள். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் 02ம் தேதியிலிருந்து தொழிலில் மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும், வியாபாரக் கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் மனைவியுடன் பிரச்சினை உண்டாகும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வர மேலும் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கடகம்

சந்திரனை ஆட்சி நாதனாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே.. சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும், எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறந்த இளைய சகோதரர்களால் நன்மை உண்டாகும் 24ஆம் தேதிக்குப் பின்னர் புதிதாக வீடு மனை வாங்கும் எண்ணம் நிறைவேறும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும், 20ஆம் தேதிக்குப் பின்னர் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும், பணம் கொடுக்கல் வாங்கலில் சிரமம் உண்டாகும். 9ஆம் தேதிக்குப் பின்னர் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும், குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை 02ஆம் தேதி முதல் அப்பாவின் ஆலோசனையால் தொழில் முன்னேற்றமடையும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் பயம் அதிகரிக்கும், எதிரிகளால் தொல்லை உண்டாகும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகளும் அலைச்சலும் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் நோயினால் மனதில் பயம் உண்டாகும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் விளக்கேற்றி வழிபடலாம்.

சிம்மம்

சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே. இந்த மாதம் உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும், அப்பாவின் சொத்திலிருந்து பங்கு கிடைக்கும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் 24ஆம் தேதிக்கு பின்னர் லாபம் அதிகரிக்கும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனின் செயல்கள் மனக் கஷ்டத்தைக் கொடுக்கும், 20ஆம் தேதிக்குப் பின்னர் மாணவர்களுக்கு தாங்கள் விரும்பிய பாடப் பிரிவில் இடம் கிடைக்கும்.குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும், குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். 9ஆம் தேதிக்குப் பின்னர் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் அசையாத சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் 02ஆம் தேதி முதல் விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் தர வேண்டாம். பணத்தையும் விலை உயர்ந்த பொருட்களையும் பத்திரப்படுத்துங்கள். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் தேவை, பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். ஞாயிறு கிழமைகளில் சூரியனை வழிபட கண் பிரச்சினைகள் தீரும்.

கன்னி

புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே... சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் செய்யும் தொழிலில் கவனம் அதிகரிக்க வேண்டும், அதிகாரிகளால் தொல்லை உண்டாகும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் நன்மையைத் தரும் 24ம் தேதிக்குப் பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் சில்லறை வியாபாரம் சிறப்படையும், 20ஆம் தேதிக்குப் பின்னர் தாய் மாமனால் தொல்லை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் மேலும் அசையாத சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும். 9ஆம் தேதிக்கு மேல் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் 02ஆம் தேதியிலிருந்து கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்து கொள்வது நல்லது, அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு கட்டும் யோகம் உண்டாகும். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

துலாம்

அழகின் நாயகன் சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உத்தியோக வகையில் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும், அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை 24ஆம் தேதிக்குப் பின்னர் பிதுரார்ஜித சொத்துக்களிலிருந்து பங்கு கிடைக்கும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் தொல்லை உண்டாகும், 20ஆம் தேதிக்குப் பின்னர் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் சிறப்படையும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாற்ற வேண்டும் நினைத்திருந்தவர்களுக்கு அந்த எண்ணம் நிறைவேறும், அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். 9ஆம் தேதிக்கு மேல் பண வரவும் பேச்சில் இனிமையும் அதிகரிக்கும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள் 02ஆம் தேதியிலிருந்து வாழ்க்கைத் துணையுடன் பிரச்சினையை தவிர்க்கவும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும், வீடு மாற்றம் செய்யும் சூழ்நிலை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தில் வில்லங்கம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சச்சரவு ஏற்படும். வெள்ளிக்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாருக்கு தாமரை மலர் வைத்து விளக்கேற்றி வழிபடலாம்.

விருச்சிகம்

செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே. சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுடன் சச்சரவு உண்டாகும், அதிகாரிகளிடம் விதண்டாவாதம் செய்ய வேண்டாம். உங்கள் ராசி நாதன் செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை வாங்கி விற்பவர்களுக்கு வியாபாரம் சிறப்படையும் 24ம் தேதி முதல் வாகனங்களை கையாளும் பொழுது கவனம் தேவை. மின்சாதனங்களை ஜாக்கிரதையாக கையாளவும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும், 20ஆம் தேதிக்கு மேல் தாய் மாமனால் தொல்லை உண்டாகும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவும் பேச்சில் இனிமையும் அதிகரிக்கும். 09ஆம் தேதிக்கு மேல் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும், மனதில் அமைதி அதிகரிக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டுக்கு அழகு சாதனப் பொருட்கள் வாங்குவீர்கள் 02ஆம் தேதிக்குப் பின்னர் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற பேச்சில் கவனம் தேவை, பொருளாதாரத்தில் தடைகள் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மன சஞ்சலத்தை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் பேச்சினை தவிர்க்கவும். திங்கட்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று அபிஷேகத்திற்கு பால் வாங்கித் தரலாம்.

தனுசு

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே... சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வேலைக்கான போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும், மருத்துவம் படிக்க இடம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும் 24ஆம் தேதி முதல் வீடு மனை வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும். 20ஆம் தேதிக்கு மேல் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும் 9ஆம் தேதிக்கு மேல் வீண் செலவுகள் அதிகரிக்கும், அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும், 02ஆம் தேதிக்குப் பின்னர் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் வலி உண்டாகும், வேலைப் பளு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும். வியாழக்கிழமைகளில் குருபகவானை வணங்கலாம். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம்.

மகரம்

சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே... உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் புதிதாக வீடுகட்டும் எண்ணம் நிறைவேறும், வாண்டி வாகன யோகம் உண்டாகும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் 24ஆம் தேதி முதல் சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வேலை செய்யும் அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும், 20ஆம் தேதிக்குப் பின்னர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகள் அதிகரிக்கும், அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். 09ஆம் தேதிக்கு மேல் மனதின் ஆசைகள் நிறைவேறும், தொழில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும் 02ஆம் தேதி முதல் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டம் கிடைக்கும், தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய்கிழமைகளில் முருகனுக்கு விளக்கேற்றி வணங்கலாம்.

கும்பம்

சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே. உங்க ராசிக்கு மூன்றாமிடத்தில் சூரியன் இருக்கிறார் அரசாங்க சம்பந்தப்பட்ட வேலைக்காக வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும், தலைமை அலுவகத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள் 24ஆம் தேதிக்குப் பின்னர் உயில் மூலம் பரம்பரை சொத்து கிடைக்கும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சமயத்திற்கு தகுந்த படி பேசுவீர்கள் 20ஆம் தேதிக்குப் பின்னர் வியாபாரம் விருத்தியாகும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் நிறைவேறும், தொழில் லாபம் அதிகரிக்கும். 09ஆம் தேதிக்குப் பின்னர் செயல்கள் சிறப்படையும், வியாபாரம் விருத்தியாகும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும் 02ஆம் தேதிக்குப் பின்னர் நகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும், மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். புதன்கிழமைகளில் புதன் ஹோரையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மீனம்

குரு பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே... உங்க ராசிக்கு இரண்டாமிடத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார். வருமானம் அதிகரிக்கும், பேச்சில் சூடு உண்டாகும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும் 24ஆம் தேதிக்குப் பிறகு புதிதாக நிலம் வீடு வாங்குவீர்கள். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும், 20ஆம் தேதிக்கு மேல் வாக்கு வன்மை அதிகரிக்கும். பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும், வியாபாரம் விருத்தியாகும். சுக்கிரன் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் செலவுகளை தவிர்க்கவும் 02ஆம் தேதிக்குப் பின்னர் முக வசீகரம் அதிகரிக்கும்.சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும், செயல்கள் எல்லாம் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு மராமத்து வேலையை செய்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி சஷ்டி கவசம் படிக்க நன்மைகள் அதிகரிக்கும்.

43599 total views