இந்த இடத்தில் மச்சம் இருந்தால் உங்கள் திருமண வாழக்கையை கடவுளால் கூட காப்பாற்ற இயலாதாம்!

Report
767Shares

ஜோதிட சாஸ்திரத்தில் கைரேகை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் நம் கைகளில் இருக்கும் ஒவ்வொரு ரேகையும் நம்மை பற்றியும், நம் எதிர்காலத்தை பற்றியும் குறிப்பது ஆகும்.

நமது மணவாழ்க்கை, ஆயுட்காலம், செல்வநிலை என அனைத்தும் நம் கைகளில்தான் உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு அர்த்தமாகும்.

கைரேகைகள் மட்டுமின்றி நம் கைகளில் மச்சம் இருக்கும் இடங்கள் கூட நம் எதிர்காலத்தை பற்றி நமக்கு உணர்த்தும்.

சாமுத்திரிகா இலட்சணத்தின் படி நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நம் வாழ்க்கையை பற்றிய ஒரு குறியீடாகும். மச்சங்கள் மற்ற இடங்களில் இருப்பதை காட்டிலும் உள்ளங்கையில் இருப்பது கூடுதலாக கவனிக்க வேண்டியது என சாஸ்திரங்கள் கூறுகிறது.

இந்த பதிவில் கைகளில் எந்தெந்த இடங்களில் மச்சம் இருந்தால் உங்களுக்கு என்னென்ன நடக்கப்போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

கைகளில் மச்சம்

வாழ்க்கையின் தாக்கத்தை பொறுத்து மச்சங்கள் மெலிதாகவும், தெளிவாகவும் உங்கள் உடலில் இருக்கும். அவரவர் விதிகளுக்கு ஏற்ப மச்சத்தின் அளவும், இடமும் மாறுபடும் என்று கூறப்படுகிறது.

சாமுத்திரிகா இலட்சணத்தின் படி நீங்கள் பிறக்கும்போதே உங்கள் உடலில் அனைத்து மச்சங்களும் வந்துவிடும், உங்களுக்கு வயது அதிகமாக, அதிகமாகத்தான் அது வெளியே தெரிய ஆரம்பிக்கும்.

மச்சங்களின் நிலைகள்

மச்சத்தை பற்றி பார்க்கும்போது,அது உடலில் இருக்கும் பாகத்தை பொறுத்து அது நமது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை பற்றி கூறுகிறது. ஜோதிடத்தின் படி ஆண்களுக்கு வலது கையும், பெண்களுக்கு இடது கையும் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக உள்ளது. ஆனால் மச்சங்கள் கைகளில் இருக்கும் இடத்தின் பலன் இருவருக்கும் ஒன்றாகத்தான் இருக்கும்.

வெள்ளி வளையம்

இந்த இடத்தில் மச்சம் இருந்தாலோ அல்லது திடீரென வந்தாலோ நீங்கள் விரைவில் தவறான பாதைக்கு செல்ல போகிறீர்கள் என்பதை உணர்த்தும். மேலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் நன்னெறி மற்றும் ஒழுக்க பாதையில் இருந்து விலகி தவறான பாதையில் செல்வீர்கள்.

நிலா மேடு

இந்த இடத்தில மச்சம் இருப்பது உங்களுக்கு தண்ணீரில் கண்டம் இருக்கிறது என்பதன் அறிகுறி ஆகும். இவர்கள் நிச்சயம் கிணறு, ஆறு, ஏரி போன்ற நீர் ஆதாரங்கள் இருக்கும் எந்த இடத்திற்கும் பாதுகாப்பு இல்லாமல் செல்லக்கூடாது. மேலும் இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு தாமதமாகத்தான் திருமணம் நடக்கும்.

சனி மேடு

இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் மிகவும் துர்பாக்கியசாலிகள். இவர்களுக்கு தாமதமாகத்தான் திருமணம் நடக்கும், அப்படி நடந்தாலும் அவர்களும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாது. தங்களது துணையை சமாளிப்பதில் மிகவும் சிரமப்படுவார்கள்.

புதன் மேடு

உங்களின் சுட்டு விரலுக்கு கீழே இருக்கும் இடம்தான் புதன் மேடு என்று அழைக்கப்படுகிறது, இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் திடீர் திடீரென இழப்புகளை சந்திப்பீர்கள். அது பணநஷ்டமாகவும் இருக்கலாம், உறவு நஷ்டமாகவும் இருக்கலாம்.

திருமண கோடு

திருமண கோட்டில் மச்சம் இருப்பது உங்கள் திருமண வாழ்க்கையின் வீழ்ச்சியை குறிக்கும். இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் திடீரென்று எதிர்பாராத தருணங்களில் தங்கள் திருமண வாழ்க்கையில் வீழ்ச்சிகளையும், பிரச்சினைகளையும் சந்திப்பார்கள்.

25463 total views