நாளை சஷ்டி விரதம்: விரதத்தை கடைபிடிப்பது எப்படி தெரியுமா?

Report
60Shares

சஷ்டி விரதம் என்பது மிகப்பெரிய விரதம் ஆகும். திதிகளின் வரிசை படி சஷ்டி என்பது ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஜோதிடத்தில் 6-ம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.

குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் பொய். அனைவருமே விரதம் மேற்கொள்ளலாம்.

சஷ்டி விரதத்தை கடைபிடிப்பது எப்படி?

  • அதிகாலை எழுந்து, குளித்து மனம் உருக முருகனை வணங்க வேண்டும்.
  • பூரண கும்பத்தில் தண்ணீர் நிரப்பி மாவிலை வைத்து, தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும், அட்சதையும் இட்டு முருகனை அதில் ஆவாகனம் செய்து மலரிட்டு தீபம் காட்டி வழிபடுவது நல்லது.
  • விரத நாட்களில் பகலில் தூங்குதல் கூடாது.
  • சஷ்டி தினத்தன்று இரவிலும் விழித்து இருப்பது கூடுதல் பலன்களை தரும்.
  • ஆறு காலமும் முருகனை பூஜை செய்ய வேண்டும்.

2916 total views