சனி பகவானின் பிறந்த நாளில் இந்த இரண்டு ராசிக்காரங்க காட்டுல மழை தானாம்!

Report
2201Shares

கரிய நிறம் கொண்ட கடவுள், காசிப கோத்திரத்தில் பிறந்தவர், ஜோதிட சாஸ்த்திரத்தில் ஆயுளின் அதிபதி என்ற அதிமுக்கிய பொருப்பில் இருப்பவர், சூரியபகவானின் இரண்டாவது புதல்வர் இத்தனை மகத்துவத்தைக் கொண்டுள்ள சனி பகவானின் கிரகங்களில் பார்வைக்கு அதிகமான வலிமை உண்டு.

பொதுவாகச் சனியின் சன்னிதியில் நின்று வழிபடும் பொழுது அடுத்து வரும் வாழ்நாளில் சீரிய முன்னேற்றம் காணுவோம். சகல தோஷங்களும் நீங்கி தரணியிலேயே வாழ்க்கை நடத்தச் சனிபகவான் நமக்கு அருள் புரிவார்.

இந்திய ஜோதிடத்தின் படி, சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு பயணிப்பதை சனிப் பெயர்ச்சி என்கிறோம். இது, ஏழரைச் சனி, மங்கு சனி, தங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி என அதன் தன்மைக்கு ஏற்றவாறு பிரிக்கப்படுகிறது. இன்னும் எத்தனை எத்தனையோ மகிமையுடைய சனி பகவானின் பிறந்த நாளான இன்று எந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும், சனி அவதரித்த இந்நாளில் எந்த ராசிக்காரர்களுக்கு செல்லாம் ஜெயந்தி உண்டாகும் என பார்க்கலாம் வாங்க.

நவக்கிரகங்களில் அதிக கவனம் பெற்றுள்ளவர் சனிபகவான். இவருக்கான வழிபாட்டுத் தலங்கள் ஒரு சில பகுதிகளில் மட்டுமே இருந்தாலும், வழிபாடுகள் ஏராளமானதாகும். விஸ்வரூப தரிசனம் கொண்ட திருவுருவம் கொண்டு தமிழகத்தில் உள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில், குச்சனூர் சனீஸ்வரன் கோவில், லோக நாயக சனீசுவரன் கோவில், விழுப்புரம் அருள்மிகு சனீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பிரசிதிபெற்ற சில சனீஸ்வர பகவான் கோவில்களுக்கு பயணம் செய்வோம்.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில்

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு தர்ப்பாரண்யேசுவரர் கோவில். இத்திருக்கோவில் சிவபெருமாளுக்கு உகந்ததாக இருந்தாலும், இங்கு தனியே சன்னதியில் அருள்பாலிக்கும் சனிபகவான் மிகவும் பிரசிதிபெற்றதாக உள்ளது. இத்தலத்தில் சனியை தோற்றுவித்த விநாயகர் சொர்ணவிநாயகர் என்ற நாமத்துடன் காட்சியளிக்கிறார். சனித் தொல்லை நீங்க, முன்ஜென்ம சாபம் ஒழிய இத்தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்திலும், சரஸ்வதி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்வது சிறப்பாகும்.

இத்தலத்தில் உள்ள சனீஷ்வரரை வழிவடும் முன் நல தீர்த்தத்தில் நீராடி, கரையில் உள்ள நளவிநாயகரை முதலில் வழிபட வேண்டும். பின், கோவில் கோபுர வாசல் வணங்கி, சுவாமி கன்னதிக்குள் உள்ள மூலவர் தர்ப்பாரண்யேசுவரரை வேண்டிவிட்டு, அருகில் உள்ள மரகதலிங்கத்தை வணங்க வேண்டும். தொடர்ந்து, தலத்தில் உள்ள பிற கடவுள்களை வழிபட்ட பின்பே இறுதியாக சனீஸ்வரரை வணங்க வேண்டும். இவ்வாறு வழிபட்டால் மட்டுமே சனியின் விமோசனம் கிடைக்கும என்பது இத்தலத்தில் நிலவும் தொன்நம்பிக்கை.

குச்சனூர் சனீஸ்வரன் கோவில்

மாநிலத்தின் பிற கோவில்களில் சனிபகவான் நவக்கிரகமாக காட்சியளித்தாலும், திருநள்ளாறுக்கு அடுத்து தனி திருவுருவமாக அருள்பாலிப்பது குச்னூரில் உள்ள சனீஸ்வரன் கோவிலில் தான். இத்தலத்திற்கு மேலும் சிறப்பூட்டுவது அரூபி வடிவ லிங்கம் பூமியில் இருந்து வளர்ந்துகொண்டே இருப்பது. இதைக் கட்டுப்படுத்துவதற்காகவே அன்றாட வழிபாட்டுக்குப் பிறகு லிங்கத்திற்கு மஞ்சள் காப்பு பூசப்படுகிறது.

சனி தோசம் உள்ளவர்கள் இத்தலத்தில் பகவானை வேண்டிச் சென்றால் சோதனைகள் நீங்கி நல்ல காரியம் அரங்கேறும். மேலும், தொழில் முனைவோர், வியாபார விருத்தி, இல்லற சுபம் உள்ளிட்டவற்றிற்காகவும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடப்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் சனி பகவானுக்கு எள் விளக்கு வைத்தும், காக்கைக்கு உணவிட்டும் வழிபட்டுச் செல்வர்.

இத்தலத்தின் வரலாறு சனிபகவானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்து விலகியதில் இருந்து துவங்குகிறது. நாட்டில் சனிபகவான் சுயம்புவாக எழுந்தருளியுள்ள ஒரே தலம் இதுவாகும். சனி தோஷம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடுவதன் மூலம் மோட்சம் பெறுகின்றனர்.

லோக நாயக சனீசுவரன் கோவில்

லோக நாயக சனீசுவரன் கோவில் கோவை மாவட்டத்தில் உள்ள புலியகுளத்தில் சனீசுவரனை மூலவராக கொண்ட கோவிலாகும். இத்தலத்தில் சனீசுவரனும், அவருடைய வாகனுமான காகமும் உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத வகையில் இரும்பினால் ஆன சிலையாக உள்ளன. இத்திருவுருவ சிலை சனீஸ்வரரின் உலோகமான தூய எஃகு இரும்புனால் வடிவமைக்கப்பட்டதாலேயே இங்கு லோக நாயக சனி ஈஸ்வர பகவான் என்ற பெயர் வரக் காரணமாகும். ஈரேழு பதினான்கு லோகதில் வாழும் எவ்வகை குலத்தாராயினும் சனியின் பார்வைபடாமல் வாழ முடியாது. ஆகையனால் இவருக்கு லோகநாகயன் என்றும் உலோகத்தில் உருவேற்றப்பட்டதால் உலோகநாகயன் என்றும் பொதுவாக லோக நாயக சனி ஈஸ்வர பகவான் என்று கூறப்படுகிறது.

வாரம் முழுக்க அலங்காரங்களுடன் மூலவருக்கு வழிபாடு நடத்தப்பட்டாலும், சனி பகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை அன்று உச்சிப் பொழுதில் சிறப்பு அபிசேகம், ஆராத்தி, அர்சனை நடத்தப்படுகிறது. மேலும், பக்தர்கள் தாங்களாகவே அபிசேகமும், ஆராத்தியும் செய்யும் வகையில் திறந்த வெளியிலேயே இந்தக் கோவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்த ராசிக்காரர்களுக்கு பலன்

சனிபகவானின் பிறந்த நாளான இன்று மகரம், கும்பம் ராசியுடையோர் பல்வேறு வகையில் பயன்களைப் பெறவுள்ளனர். இன்னும் தெளிவாகச் சொன்னால், இன்று முதல் வளர்ச்சியுலும், செல்வத்திலும், சொத்திலும், புகழிலும் என உங்கள் காட்டில் மழைதான். உங்கள் ராசிநாதன் சனி 12-ல் சென்று மறைவதால், தடைப்பட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். இல்லறத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

இன்றைய தினம், சனிபகவான் கோவில்களில் சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் பரிகார பூஜை நடக்கும். பொதுவாக, மனிதர்களின் ஆயுள்காலத்தில் மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி என மூன்று முறை சனிபகவான் வந்து செல்வார். அவர் அமர்கின்ற இடத்தின்படி ஆயுள் நீட்டிப்பைத் தருவார். இன்று மகரமும், கும்பமும் இந்த இடமாற்றத்தால் வாழ்வில் அடுத்தபடியை நோக்கி நகர்வீர்கள். சனியின் பாதிப்பால் ஆயுள் பலத்தில் பங்கம் இருந்தால், சனிபகவானின் தலத்திற்குச் சென்று மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றி வணங்குதல் வேண்டும். இதனால் ஆயுள் பலம் நீடிக்கும் என்பது நம்பிக்கை.

93019 total views