இன்று இந்த ராசிக்காரர்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது: இல்லையேல் உயிருக்கு ஆபத்தாகிவிடும்..!

Report
395Shares

தினம் தினம் திருநாளே!..

மனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம்.அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையும் உண்டு.

அதுபோல, தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.இன்றைய தினத்தில், நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில், அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது.அந்த வகையில், இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள நேரிடும். சிலருக்குப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அதனால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கித் தொகை வசூலாகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்..

ரிஷபம்

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் உறவினர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்

மகிழ்ச்சியான நாள். எதிர்பாராத பணலாபம் உண்டாகும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

கடகம்

புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். பிள்ளைகள் வழியில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பது உற்சாகம் தரும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தைக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தேவையான பணம் கையிலிருந்தாலும், வீண்செலவுகளால் மனச் சஞ்சலம் ஏற்படக்கூடும். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பொறுமை அவசியம். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டி இருக்கும். எதிர்பார்த்த விற்பனை இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி

தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள்.சிலருக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

துலாம்

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் ஆலோசனைப்படி செயல்படுவார். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிகம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிற்பகலுக்கு மேல் செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பு கரையும். குடும்பப் பொறுப்பின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை சற்று இழுபறிக்குப் பிறகே கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்கவேண்டி வரும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

தனுசு

தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர்மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமாக பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்

இளைய சகோதரர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். புதிய டிசைனில் ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்துடன் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

கும்பம்

திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். அவ்வப் போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.

மீனம்

உற்சாகமான நாள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். குடும்பத்தில் மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்று வீர்கள். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற்றுத் தரும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதலாகப் பாடுபடவேண்டி இருக்கும். பங்குதாரர்களால் சிறு பிரச்னை ஏற்படக்கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

15910 total views