குருபெயர்ச்சி 2018 - 2019 : கோடி அதிஷ்டம் தேடி வரும் ராசி எது தெரியுமா?

Report
2799Shares

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் திகதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.

தங்களது ராசிக்கு 12ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் தங்கள் ராசிக்குள் பிரவேசிக்கிறார். குரு பகவான் 5ஆம் இடம் 7ஆம் இடம் மற்றும் 9 ஆம் இடத்தை பார்வை இடுகிறார்.

5 ஆம் இடம் புத்திர ஸ்தான பாக்கியத்தையும் 7 ஆம் இடம் திருமண உறவுகளையும் 9 ஆம். இடம் சகல பாக்கியங்களையும் குறிக்கும்.

இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்.

தொழிலும் வியாபராமும்

வேலையில் கூடுதல் பிரயத்தனம் தேவைப்படுகின்றது. வியாபரம் சுமாராக செல்லும். இடமாற்றமும் தென்படுகின்றது.

பொருளாதாரம்

சுற்றத்தார் மற்றும் நண்பர்கள் மூலம் பொருளாதார உதவி கிடைக்கும். முதலீடுகளிலிருந்து பண வரவு உண்டு. நிதி திட்டங்களை தீட்டி, செலவுகளை மேற்கொள்ளவும்.

குடும்பம்

குடும்ப சூழல் திருப்தி அளிக்கும். குடும்ப நபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். குடும்ப நபர்களிடமும் ஆதரவாக இருக்க முடியும். பொறுப்புகளையும் கடமைகளையும் மனமுவந்து செய்ய முடியும்.

கல்வி

கூட்டாகக் கல்வி பயில்வதில் ஆர்வம் உண்டாகும். மற்றவர்களின் சந்தேகங்களை தீர்க்கக் கூடிய திறன் இருக்கும். நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். விரும்பிய பாட திட்டத்தில் சேர முடியும்.

காதலும் திருமணமும்

உங்களுடைய சுய முடிவுகள் சுமூக உறவிற்கு வழி வகுக்கும். விட்டுக் கொடுத்தலால் நல்லுறவு பேண முடியும். வீண் குழப்பங்களை தவிர்க்கவும். ஏனென்றால் இது எதிராளியையும் பாதிக்கும்.

ஆரோக்கியம்

சிறு சிறு பிரச்சினைகளுக்கு கவலைப் பட்டால் உடல் ஆரோக்கியம் கெடும். தேகத்திற்கு அவ்வப்போது ஒய்வு தேவை என்று உணரவும். உணவு வேளைகளை தப்பாதிருக்கவும். தியானம் யோகா போன்ற பயிற்சிகள் மன நலன் காக்கும்.

மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்

  • கூடுதல் பிரயத்தனம்
  • குடும்ப நபர்களுடன் அனுசரணை
  • நிதி உதவி
  • விரும்பிய பாட திட்டத்தில் சேருதல்

பரிகாரம்

ஓம் பிரகஸ்பதியே நமஹ என்று 108 முறை ஜெபிக்கவும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் குரு பகவானுக்கு ஒரு ஹோமம் செய்யவும்.
101270 total views