கள்ளக்காதலை ஜாதகம் பார்த்து கண்டுபிடிக்கலாம்! அட...உண்மைதாங்க...!

Report
226Shares

இன்றைய காலத்தை பொருத்தவரை அதிகளவில் நடப்பதும், பேசப்படுவதுமாக இருக்கும் விடயம் என்னவென்றால், அது கள்ளக்காதல் கொலைகள் தான்.

இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு பிரியாணி கடைக்காரருடன் ஓடிப்போன அபிராமி பற்றிதான் இப்போது ஹாட் டாபிக். காதல் திருமணமோ, கள்ளக்காதலோ எதுவென்றாலும் ஜாதகம் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

திருமணத்துக்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிப்பார்கள். ஒன்று செவ்வாய் தோஷம், மற்றொன்று ராகுகேது தோஷம்.

செவ்வாய் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12ல் இருந்தால் தோஷம். ராகுகேது லக்னம், 2, 7, 8ல் இருந்தால் தோஷம். இந்த இடங்கள் எல்லாம் காதல் சுகத்தையும், குடும்ப தாம்பத்ய சுகத்தையும், இல்லற வாழ்க்கையையும் குறிக்கும் இடங்களாகும். செவ்வாய் 7, 8ல் இருந்தால் காதல் உணர்வு அதிகம் காணப்படும். அதற்கு இணையாக, அந்த ஜாதகக்காரருக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லத்துணை அமைய வேண்டும் என்ற நோக்கில்தான், அதேபோல் காதல் உணர்வு அதிகம் உள்ள 7, 8ல் செவ்வாய் உள்ள ஜாதகமாக பார்த்து சேர்த்தார்கள்.

ஏழாம் இடம் இடம் காதலை, காமத்தை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும்.

குரு பகவான்

குருவினால் நன்மை தீமை

குரு போக காரகன், சுக்கிரன் காம காரகன். இந்த இருவரும் இணைவது, பார்ப்பதில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களுக்கும் பாவ கிரக பார்வை, நீச்ச சேர்க்கை ஏற்பட்டால் ரகசிய உறவுகள் ஏற்படலாம். 8ம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, கள்ளக்காதல் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.

சுக ஸ்தானம் எப்படி

கற்பு ஸ்தானம்

ஜாதகத்தில் 4வது இடம் சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும்.

களஸ்திர ஸ்தானம்

நல்ல நடத்தை

ஏழாம் இடம் இடம் காதலை, காமத்தை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். இந்த இடத்தில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அறவே இருக்க கூடாது. கூடுமானவரை இந்த இடம் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது விசேஷம்.

சனி சந்திரன் சேர்க்கை

சஞ்சல மனம்

சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும்.

ஆண்களின் நடத்தை

சபல புத்தி

ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். ஏழாம் வீட்டில் சனிசுக்கிரன் இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின் தொடர்பு உண்டாகும்.

ராகு கேது

தோஷம் உள்ள ஜாதகங்கள்

லக்னத்துக்கு 7, 8ல் ராகுகேது உள்ள ஜாதகத்துடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதன் மூலம் அவர்களின் ஆசைகள், உணர்ச்சிகள் ஒத்துப்போகின்றன. இருவருக்கும் சரிபாதி இன்பம் கிடைக்கிறது. தோஷம் உள்ள ஜாதகங்கள் சேராமல், ஒருவருக்கு மட்டும் தோஷம் இருந்து மற்றவருக்கு தோஷம் இல்லாதிருந்தால் காதல் சுகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய், கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது.

நல்ல நடத்தை ஜாதகம்

தீய செயல் ஜாதகம்

6, 8, 12 ஆம் இடத்துக்கு உடையவர்கள் அதிக பலம் பெற்று இருந்தாலோ, 6, 8, 12ஆம் வீட்டிலேயே இருந்தாலோ தீயசெயல்கள் செய்ய அஞ்சவும் மாட்டார்கள். அதற்கு வெட்கப்படவும் மாட்டார்கள். ஜாதகத்தில் பாதகம் செய்யும் கிரகம், அதிக பலம் பெற்றால் ஜாதகரை தீய எண்ணங்கள், தீயசெயல்கள் என அலைக்கழிக்கும்.

6, 8, 12 ஆம் வீட்டுக்கு உடையவர்கள் பாதகாதிபதியுடன் இணைந்து அதற்குரிய தசா - புக்தி நடந்தால் தீயதைச் செய்ய சிறிதும் தயக்கம் காட்ட மாட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் சிறையில்தான் காலத்தைக் கழிப்பார்கள்.

கொலை, கொள்ளை ஜாதகம்

ராகு கேது செய்யும் செயல்

ஜாதகத்தில் முக்கிய கிரகங்களாக கருதப்படும் லக்னாதிபதி, ராசிக்கதிபதி, திரிகோணாதிபதிகள் நீசம் பெற்றாலும், ராகு - கேதுவுடன் சேர்ந்து அதற்கு உரிய தசா புக்தியை நடந்தாலும் மனத்துணிவுடன் தவறான பாதையில் செல்வார்கள். காலம் கடந்து வருந்துவார்கள்.

இத்தகைய கிரக அமைப்புகள் கொண்டவர்கள் ஒன்றாகச் சேரும் போதுதான் கூட்டுக் கொள்ளை, கொலை போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை

செவ்வாயுடன் சுக்கிரன் சேர்ந்தால் என்ன?

ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள். சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.. காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள்.

பரிகாரம் என்ன?

புதன்,சந்திரனை வணங்குங்க

ஜாதகத்தைப் பொறுத்தவரை ஆண்கள், பெண்கள் என்னும் பேதமெல்லாம் கிடையாது. இத்தகைய ஜாதக அமைப்பில் பிறந்திருந்தால் இந்த மாதிரி பலன்கள்தான் நிகழும் என்கிறது ஜோதிட விதி. நல்ல எண்ணங்களுடன், நல்ல செயல்களை செய்ய வேண்டும். புதன் பகவானை திருவெண்காடு சென்று வணங்கி வரலாம். மனோகாரகன் சந்திரனை வணங்கலாம்.

7452 total views