இன்றைக்கு வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட போகும் ராசிக்காரர் இவர்கள் தான்!!

Report
63Shares
மேஷம்

உறவினர் உங்களிடம் எதிர்பார்ப்புடன் நடந்து கொள்வர். தொழில் வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை நிலவும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

ரிஷபம்

சிலரது விமர்சனத்தால் மனம் தளர்வீர்கள். இடம், சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் சிரமத்திற்கு ஆளாவர். பெண்கள் திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்வர்.

மிதுனம்

கடந்த காலத்தில் செய்த உதவிக்கான நன்மை தேடி வரும். தன்னம்பிக்கையுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் திருப்தியளிக்கும். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

துலாம்

நண்பருக்கு இயன்ற அளவில் உதவிபுரிவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் அனுகூலம் உருவாகும். வருமானம் கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

கடகம்

செயல் நிறைவேறுவதில் தாமதம் உருவாகலாம். நல்லோரின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். தொழில் வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். குடும்பத்திற்கான பணத்தேவை அதிகரிக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு மனஅமைதி தரும்.

சிம்மம்

மனதில் ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். பகைவரால் உருவான கெடுசெயல் பலமிழக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். லாபம் திருப்திகரமாக அமையும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கன்னி

குடும்பச் சூழல் அறிந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஆதாயம் சுமாரான அளவில் இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்க நேரிடும். பிராணிகளிடம் இருந்து விலகுவது நல்லது.

விருச்சிகம்

உறவினர் பாச பந்தமுடன் நடப்பர். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணியில் ஈடுபடுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும்.

தனுசு

மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது அவசியம். பணவிஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.

மகரம்

தேவையற்ற விவாததங்களில் ஈடுபட வேண்டாம். தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை பயன்படுத்துவது நல்லது. லாபம் சராசரி அளவில் இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.

கும்பம்

உங்கள் பேச்சில் அன்பும், பண்பும் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேறும். ஆதாயம் உயரும். பெண்கள் புத்தாடை, ஆபரணம் வாங்க யோகம் உண்டு. விலகிய சொந்தம் விரும்பி வந்து பாராட்டுவர்.

மீனம்

மனதில் இருந்த தயக்கநிலை மாறும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் பணி மேற்கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருள் வாங்குவர். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

2684 total views