இன்று இந்த ராசிக்காரங்க பர்ஸை பத்திரமாக வச்சிக்கனுமாம்! சீக்கிரம் பாருங்க உங்க ராசி இருக்குதானு?

Report
622Shares

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். அதன்படி இன்றைக்கு ரிஷபம், சிம்மம், துலாம், மகரம், மீனம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களுக்கு சுப விரயச் செலவுகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். மிதுன ராசிக்காரர்கள் விவாதத்தை தவிர்க்க வேண்டும். மீனம், மேஷம், விருச்சிகம், கன்னி ராசிக்காரர்களுக்கு தன லாபம் உண்டாகும். கடகம், கும்பம், தனுசு ராசிக்காரர்கள் உடல் நலத்தில் கவனம் தேவை.

மேஷம்

நிர்வாகத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழல் வரும். மாற்றங்கள் செய்வதால் நிறைய சாதகமான சூழல்கள் உண்டாகும். சுயதொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் யாவும் நினைத்த பலன்களைத் தரும். தொழிலுக்கு பெற்றோர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். பிள்ளைகளால் சுப விரயச் செலவுகள் உண்டாகும்.

ரிஷபம்

எந்த காரியமாக இருந்தாலும் எடுத்த காரியத்தில் துணிச்சலுடன் செயல்பட்டு லாபம் அடைவீர்கள். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பொருள் சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களை மேற்கொள்வீர்கள். தாயின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கடகம்

கூட்டாக தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் சுப விரயங்கள் ஏற்படும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செய்திகள் வந்தடையும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

சிம்மம்

மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும் நாள். எதிர்பார்த்த வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி

பிள்ளைகளின் மூலம் சுப விரயச் செலவுகள் உண்டாகும். குல தெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பயணங்களால் லாபம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல் திட்டங்கள் தீட்டுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுப விரயங்கள் உண்டாகும்.

துலாம்

பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்

புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வான் வழியான சம்பந்தம் உடைய தொழில் செய்பவர்களுக்கு புகழ் உண்டாகும். சுயதொழில் புரிகின்றவர்கள் தங்களுடைய முயற்சியால் லாபம் அடைவார்கள். சகோதரர்களால் சுப விரயம் ஏற்படும்.

தனுசு

உறவினர்களின் வருகையினால் மனமகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கும். இழந்த பொருள்களை மீட்க முயற்சி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அமைதியுடன் செயல்படுங்கள்

மகரம்

உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமாக செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். வியாபாரம் சம்பந்தமாக வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

பரம்பரை சொத்துக்களால் சுப விரயங்கள் செய்ய வேண்டியிருக்கும். நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்ற வெளியிடங்களுக்குச் செல்வீர்கள். மனதில் புதுவித எண்ணங்கள் உண்டாகும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். அந்நியர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

மீனம்

பிள்ளைகளின் வழியாக சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். வாகனப் பயணங்களின் வழியாக லாபம் அடைவீர்கள். பொன், பொருள் போன்றவற்றைக் கையாளும்போது நிதானத்துடன் செயல்பட வேண்டும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். போட்டிகளில் வெற்றியடைவீர்கள்.

22425 total views