டிசம்பர் 19ல் சனிப்பெயர்ச்சி... இந்த 6 ராசியினருக்கு செம்ம அதிர்ஷ்டம்!

Report
7774Shares

சனிபகவான் டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் கன்னி வரை எந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மாற்றத்தை தரும்? அரசு வேலை யோகத்தைத் தரும் என்று பார்க்கலாம்.

சனிபகவான் தனுசு ராசியில் இருந்து தனது 3ஆம் பார்வையாக கும்பம் ராசியையும், 7ஆம் பார்வையாக மிதுனம் ராசியையும், 10ஆம் பார்வையாக கன்னி ராசியையும் பார்க்கிறார்.

தொழில் ஸ்தானம் 10ஆம் இடம். சனிபகவான் ஜீவனகாரகன், தொழில்காரகன். சனிப்பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மாற்றத்தை தரும்? வெளிநாட்டு யோகத்தை தரும் என்றும் சுயதொழில் அமையும் பார்க்கலாம்.

மேஷம் - லாபம் அதிகரிக்கும்

சனிபகவான் 9ஆம் இடத்தில் பாக்ய ஸ்தானத்தில் அமர்கிறார். குருபகவான் ராசிக்கு 7ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். வேலை தேடுபவர்களுக்கும், இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும்.

சுய தொழில் செய்ய வாய்ப்பும் ஏற்படும். பாஸ்போர்ட், விசா போன்ற விஷயங்களில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும். முன்னோர்களது சொத்துகள் கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வமும் திறமையும் ஒரு சிலருக்கு அமையும்.

பார்க்கும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும் ஒரு சிலருக்கு முதலாளிகளாக உருவாகும் வாய்ப்பு அமையப்பெறும்.

புதிய தொழில் தொடங்க ஒரு சிலருக்கு வாய்ப்புகள் அமையும். மேலும் உற்பத்தி சார்ந்த துறைகள் ஏற்றம் மிகுந்து காணப்படும். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக், கட்டுமானத்துறைகள் சற்று ஏற்றமுடன் இருந்தாலும் லாபம் குறைந்தே காணப்படும். ஆன்மீகம், பத்திரிக்கை, தொலைக்காட்சித்துறை லாபகரமாக இருக்கும். பங்குச் சந்தை சற்று ஏற்றமாக இருந்து வரும்.

வேலை இல்லாதவர்களுக்கு வேலையும், வேலையில் உள்ளவர்களுக்கு உத்யோக உயர்வும், ஒரு சிலருக்கு ஊதிய உயர்வும் கிட்டும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் இருந்து வரும். சக ஊழியர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும்.

ரிஷபம் - கவனம் தேவை

உங்கள் ராசிக்கு 9,10 ம் அதிபதியான சனிபகவான் உங்களது ராசிக்கு 8ம் இடத்தில் அமர்கிறார். ராசிக்கு 10ஆம் இடத்தை சனிபகவான் பார்க்கிறார். தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஓரளவு வந்து சேரும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகள் நன்மை அடைவர். பங்கு சந்தையில் அதிக கவனம் தேவை.

சுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளுக்குள் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். பாஸ்போர்ட் விசா போன்ற விஷயங்களில் தடையேற்பட்டாலும் அதனால் நன்மையேயாகும்.

அரசாங்க வேலையில் இருப்பவர்கள் வேலையில் கவனம் தேவை. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. எதிலும் நிதானமாக கையாளுதல் வேண்டும். உயரதிகாரிகளால் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு.

உங்கள் ராசிநாதனான சுக்ரனே உங்கள் ராசிக்கு 6ம் அதிபதியாக வருவதால் வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் முதலில் கிடைத்த வேலையில் அமர்ந்து பின் பிடித்த வேலையை தேடுதல் வேண்டும்.

இதுவரை வராமல் தடையாக இருந்த பென்ஷன், பி.எப், கிராஜூவிட்டி போன்ற விஷயங்கள் தடையின்றி வந்து சேரும். சக ஊழியர்களின் அன்புன் ஆதரவும் கிட்டும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலைக்காக அவசரப்பட்டு வேலையை விட்டுவிடுதல் கூடாது.

மிதுனம் - உழைப்பு அதிகரிக்கும்

ராசிக்கு 7ஆம் இடத்தில் சனிபகவான் அமர்கிறார். பார்க்கும் தொழிலில் சில இடைஞ்சல்கள் ஏற்பட்டாலும் தொழில் ஒரளவு சுமாராக இருந்து வரும். சிறு தொழில்களில் ஒரளவு லாபம் இருந்து வரும். உற்பத்தி சார்ந்த துறைகளும் லாபகரமாக இருக்கும். பங்கு சந்தை முதலீட்டில் அதிக கவனம் தேவை.

உணவு உடை, ஆபரணத் தொழில்கள் லாபகரமாகவும், நீர், கப்பல், மீன்பிடித் தொழில்கள் சாதகமாக இருந்து வரும். பத்திரிக்கை தொலைக்காட்சி, திரைப்பட தயாரிப்பு விற்பனை விநியோகம் சற்று லாபம் குறைந்து காணப்படும்.

வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். ஆனால் வேலையில் திருப்தியற்ற நிலைமையே அமையும். எனவே கிடக்கும் வேலையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடக் கூடாது.

ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும். வேலையில் உத்யோக உயர்வு ஊதிய உயர்வு கிட்டும். வேலையில் அதிக கவனம் தேவை.

உங்கள் ராசிக்கு 6ம் அதிபதியாக செவ்வாய் வருவதால் அடிக்கடி வேலை மாற வேண்டியது வந்தாலும் வேலை மாறாமல் இருப்பது சிறப்பு. கிடைத்த வேலையில் திருப்திகரமாக செயல்பட்டு உங்களுடைய திறமையையும் உழைப்பையும் அதிகரித்தல் வேண்டும். எந்த வேலையும் காலதாமதபடுத்தாமல் உடனே செய்தல் வேண்டும். ஒரு சிலர் வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

கடகம் -வெளிநாடு வேலை

உங்களது ராசிக்கு 6ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் சுயதொழில் விஷயத்தில் சற்று நிதானம் தேவை. முதலீட்டில் அதிக கவனம் தேவை. கூட்டாளிகளால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்படும். கூட்டாளிகள் பிரிய நேரிடும், புதிய தொழில் தொடங்குவதிலும் தொழிலை மாற்றிச் செய்வதிலும் அதிக கவனம் தேவை.

இதுவரை வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கவும், வேலையில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம். உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் ஏற்படும். பார்க்கும் வேலையை விட்டுவிட கூடாது. ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு நன்கு கிட்டும். உயரதிகாரிகளால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும்.

அதிக மகிழ்ச்சியுடன் வேலையில் ஈடுபடுவீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமும் உங்களைச் செயல்பட வைப்பார். இதுவரை நிலுவையில் இருந்த பணம், பொருள் வந்து சேரும். வேலைக்கு ஏற்ற ஊதியமும் அதற்கேற்ப உங்களுக்கு ஊதிய உயர்வும் ஏற்படும்.

சிம்மம் - இடமாற்றம்

உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் சுய தொழில்களில் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். கூட்டாளிகளே லாபம் அடைவார். எனவே முதலீட்டில் அதிகக் கவனம் தேவை.

வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படுத்துவார். கிடைத்த வேலையில் நிம்மதி இல்லாமல் இருக்கச் செய்வார். பார்க்கும் வேலையை அவசரபட்டு விட்டுவிடக் கூடாது. அடுத்த வேலை கிடைக்க கால தாமதம் ஆகும். சிலருக்கு இடம்மாற்றம் ஏற்படும்.

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாமல் மன வருத்தம் ஏற்படும். உத்யோகத்தில் உயர்வை காண்பது சற்று கடினமே. எதிரிகள் விஷயத்தில் அலட்சியம் காட்டுதல் கூடாது.

ரேஸ், லாட்டரி, ஷேர் மார்கெட்டில் தேவையற்ற முதலீடு கூடாது. இவற்றிலிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது ஆகும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் ஏற்படும். கனரகத் தொழில்களில் பெரிய அளவில் முதலீடு கூடாது. சினிமா, தொலைகாட்சி, பத்திரிக்கை, சுற்றுலா, தியேட்டர்கள் நல்ல லாபகரமாக இருக்கும்.

கன்னி - சோதனைகளை சாதனையாக்குங்கள்

உங்களது ராசிக்கு 4ஆம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் உங்களுடைய பொறுப்பு உணர்ச்சிக்கு சற்று சோதனை ஆன காலமாகும். 4ம் வீட்டில் சனி சஞ்சாரம் என்பது தொழிலில் தகராறு மற்றும் தொழிலில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவார். அதே சமயம் வேலையில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.

மேலும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிற்கும், 6ம் வீட்டிற்கும் அதிபதியாக வருவதால் வேலையில் கவனம் தேவை. எனவே அவசரபட்டு வேலையை விடுவதோ அல்லது வேறு வேலைக்கு மாறும் பொழுது வேலை உத்தரவாதம் இருந்தால் மட்டுமே மாற வேண்டும்.

சுய தொழில்கள் முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. தேவையற்ற முதலீடு கூடாது. சாலையோர வியாபாரம் நல்ல லாபகரமாக அமையும். ரேஸ், லாட்டரி ஆகியவற்றில் ஆரம்பத்தில் லாபம் குறைந்தும் பின்னால் லாபகரமாகவும் இருக்கும். பங்குச் சந்தை ஆரம்பத்தில் லாபம் அதிகரிக்கும் பின்னால் லாபம் குறைந்தும் காணப்படும். முகவர்கள், வியாபாரப் பிரதிநிதிகள் மிக அதிக பலன் அடைவார்கள். பத்திரிக்கை, எழுத்து படைப்பு, உற்பத்தி, தகவல் தொடர்பு சிறப்படையும்.

ஒரு சிலருக்கு வேலையில் திருப்தி இல்லாமல் பார்க்கும் வேலையை விட்டுவிட வாய்ப்பு அமையும் எனவே அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டு விட வேண்டாம். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். வேலை காரணமாக ஒரு சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். பதவி உயர்வு ஒரு சில இழுபறிக்கு பின் ஈடேறும். அரசு வேலை கிடைக்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் ஆனாலும் திருப்தியாக அமையாது.

Source: Oneindia

233618 total views