சிறுநீரை குடிக்க வைத்து ஊழியர்களை சித்ரவதை செய்த நிறுவனம்..! அதிர வைக்கும் காரணம்

Report
209Shares

சீனாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஊழியர்கள் பணியை முடிக்க தவறிவிட்டால் சிறுநீர் குடிக்க வைத்தும், கரப்பான்பூச்சிகளை சாப்பிட வைத்தும், சாட்டையால் அடித்தும் கொடுமைப்படுத்தி வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பெய்ஜிங் மாகானத்தில் இயங்கி வரும் வீட்டை சீரமைக்கும் நிறுவனம் ஒன்று அதன் பணியாளர் அன்றைய பணியின் இலக்கை எட்டாத தொழிலாளர்களை பல்வேறு விதமாக கொடுமைபடுத்தியுள்ள சம்பவம் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

இது குறித்து உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதாவது, போட்டிகளை சமாளிக்க முடியாத ஊழியர்கள் கழிவறைக்கு சென்று, அங்கு யூரினல்லிருந்து நேரடியாக சிறுநீரை குடிக்க வேண்டும். மேலும், கரப்பான் பூச்சிகளை பச்சையாக பிடித்து சாப்பிட வேண்டும்.

மேலும் சம்பளத்தை தராமல் இழுத்தடிப்பது மற்றும் தலையை மொட்டை அடிப்பது போன்ற கொடுமைகளும் அங்கு நடந்து வந்துள்ளன.

இதுமட்டுமல்லாது, லெதர் காலணிகளை அணியாத தொழிலாளர்களுக்கு 50 யுவான் வரை அபராதம் விதிக்கப்படுமாம்.

இந்த கொடுமைகள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது அந்த நிறுவனம் மீதான புகார்கள் அடங்கிய ஆதாரங்கள் வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளன.

இந்த நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து, தொழிலாளர்களை கொடுமைப்படுத்திய 3 மேலாளர்களை சிறையில் அடைத்துள்ளது. விரைவில் அவர்களுக்கு மாநில அரசாங்கம் தண்டனை உறுதிசெய்யும் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீனாவின் சமூக ஆர்வலர்கள், நாட்டில் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. உழைப்புச் சுரண்டல் சீனாவில் அதிகரித்து விட்டது. பணியாளர்கள் பல மணிநேரம் வேலை செய்தாலும், அவர்களுக்கு மிகவும் சொற்பமான பணம் தான் அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது என்று கூறுகின்றனர்.

8806 total views